வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுவைத்  தமிழ்ச் சங்கம்  பிப்ரவரி 2019 இல் பொன்விழா மாநாடு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சிறிய நிகழ்ச்சியை தாங்களே முடிவு செய்து நடத்திவருகின்றனர். ஆனால், பன்னாட்டு அளவில் சில இலட்சங்களை செலவு செய்து நடத்த இருப்பதாக அறிவித்துள்ள தமிழ்ச் சங்கம் பொதுக்குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இப்படி கமுக்கமாக உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல் பொன்விழா ஏற்பாடு செய்து நடத்துவது என்பது ஏற்கனவே செய்த நிதிமுறைகேடுகளை மூடி மறைப்பதற்காகவே செய்யப்படுவதாக தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

இது போன்ற முறைகேடுகளை தமிழ்ச் சங்கம் தொடர்ந்து செய்துவருவது  மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

இதனை கண்டித்து புதுச்சேரி அஞ்சலகம் எதிரில்  பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழறிஞர்கள் ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்க!!

தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடித நகல் கீழே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக