slide

slide2
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு ...!
slide2
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு ...!
slide3
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
slide4
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
புதுவைத் தமிழ்ச் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுவைத் தமிழ்ச் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல்.- பேராசிரியர் நா.இளங்கோ

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல்.
https://www.facebook.com/nagailango/posts/10219479249285237
-----------+++++++++----------
ஆண்டுதோறும் பொதுக்குழுவைக் கூட்டாமல் சங்க கணக்குகளைத் தணிக்கை செய்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள், புதுவைத் தமிழ்ச் சங்கத்தைப் பாழடித்து வருகின்றனர்.
எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்குப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்பிய உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்காமல் அடிதடி, மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளின் மூலம் தமிழ்ச் சங்கத்தைச் சீர்குலைத்து விட்டனர்.
இந்த லட்சணத்தில் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் சிலரைத் தகுதி நீக்கம் செய்யவும் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை கொள்ளவும் கண்டனக் குரல் எழுப்பவும் உரிய தருணமாக இச்சூழலை நான் கருதுகிறேன்.
-முனைவர் நா.இளங்கோ.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அடாவடி அரசியல் மேலும் தொடர்கிறது.
-----------+++++++++----------
ஆண்டுதோறும் பொதுக்குழுவைக் கூட்டாமல் சங்க கணக்குகளைத் தணிக்கை செய்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் தன் விருப்பம் போல் தமிழ்ச் சங்கத்தை விருது வழங்கும் சங்கமாக மாற்றி வருகின்றனர்.
எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்குப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்பிய உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்காமல் அடிதடி, மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளின் மூலம் தமிழ்ச் சங்கத்தின் பெருமையைச் சீர்குலைத்து விட்டனர். இந்த லட்சணத்தில் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் சிலரை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யவும் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை கொள்ளவும் கண்டனக் குரல் எழுப்பவும் உரிய தருணமாக இச்சூழலை நான் கருதுகிறேன்.
நான்காவது முறையாக மீண்டும் மீண்டும் வே. முத்து, மு. பாலசுப்பிர மணியன் குழுவே தமிழ்ச் சங்கத்தைச் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளனர். இது ஜனநாயக விரோதப் போக்கு. இச்செயலை ஜனநாயக சக்திகள் கண்டிப்பாக எதிர்த்தல் வேண்டும்.
-முனைவர் நா.இளங்கோ.

புதுவைத் தமிழ்ச் சங்க அவலம் -8
-----------------+++++++-----------------
தமிழ்ச் சங்கத்தில் என்ன சிக்கல்?
------------++++++++----------
வெ.முத்து எப்பொழுது தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு வழியாக உள்ளே நுழைந்தாரோ அன்று தொடங்கியது புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் அழிவுக் காலம்.
பதவி, புகழ், பட்டங்களை என்ன விலை கொடுத்தும் வாங்கிவிட முடியும் என்பது அவர் கொள்கை.
புதுவைத் தமிழன்பர்கள் இரண்டு அணியாகப் பிளவுபட்டு நிற்க அவரே முதல் காரணம். மற்றவர்கள் துணைக் காரணம்.
சிந்திப்பீர், செயல்படுவீர்.

புதுவைத் தமிழ்ச் சங்க அவலம் -9
----------------++++++++-----------------
புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் வெ.முத்து தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள செய்தியின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது அந்தப் பகுதியைப் படித்துப்பாருங்கள்.
-------------++++++++------------
மாதம் 25 ஆயிரம் செலவாகிறது என்கிறார். வரவு 19 ஆயிரம் என்று சொல்லுகிறார்.
ஆனால் தமிழ்ச் சங்க இருப்பு நிதி 9 இலட்சத்தில் 12 இலட்சமாக உயர்ந்துள்ளது என்கிறார். (இந்த 12 இலட்சம் யாருடைய வங்கிக் கணக்கில் உள்ளது?)
எல்லாமே தன்னுடைய சொந்த காசில் செலவு செய்வதாக சொல்கிறார்.
-------------------+++++++-----------------
இந்த அறிக்கையில் உள்ள முரண்பாடுகளைக் கூர்ந்து கவனியுங்கள்.

ஞாயிறு, 1 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கக கட்டிடம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கோ.சுகுமாரன்...



கூகுள் குரல் தட்டச்சு மூலம்  தட்டச்சு செய்யப்பட்டது.. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.!!..

புதுவைத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்து கொண்டிருக்கிறது இந்த புதுவைத் தமிழ்ச்சங்கம் முறையாக செயல்படாத காரணத்தினால் மறைந்த அண்ணன் அழகிரி அவர்கள் தலைமையில் புதுச்சேரியை தமிழ் பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கினோம். இந்த குழுவினுடைய நோக்கம் புதுவைத் தமிழ்ச் சங்கத்தை சரியான பாதையில் செயல்பட வைப்பதற்காகவும் புதுச்சேரியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த குழுவை ஏற்படுத்தினோம்.

 இந்த குழு சார்பாக புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருத்தவரை அது ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு சங்கமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று சொன்னாலே, அது அரசாங்கத்தின் கட்டுப்பட்ட ஒரு அமைப்பு .ஆனால், இவர்கள் எந்த வகையிலும் தமிழுக்கு பங்களிப்பு செய்யாமல் சட்ட விரோதமாகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது 2002 முதல் 2006 முடிய தமிழ்ச் சங்க கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்திற்கு அப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் சிபி திருநாவுக்கரசு அவர்கள் 20 லட்சம் ரூபாய் அவருடைய பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தது கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் அரசாங்க நிதி பெற்று கட்டப்பட்ட ஒரு கட்டடம், இந்தக் கட்டடம் கட்டுவதற்காக தமிழ்ச் சங்கத்தில் அப்போது தலைவராக இருந்த பாவேந்தர் பாரதிதாசன் அவருடைய மகனார் மன்னர்மன்னன் அவர்களும் புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இருவரும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தமிழ்ச்சங்கத்தினுடைய கட்டிடம் என்பது தமிழ்ச் சங்கத்தை நிர்வாகம் செய்வதற்காக கட்டடம் அல்ல. அந்தக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட கட்டடம் அதைச் சொல்லித்தான் அந்தநிதி பெற்றிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அந்த கட்டிடத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தாலும், அல்லது ஏதாவது பணப்பயன் ஏற்படுகின்ற வகையில் அதை கட்டணத்தை பயன்படுத்தினாலோ தவறு என்றுச் சொல்லி இந்த ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். ஆனால், இதுநாள் வரையில் அந்த தமிழ் சங்கத்திலே நூலகம் இயங்கவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை. மாறாக தங்களுக்கு வேண்டியவருக்கு எல்லாம் இடம் கொடுத்து கூட்டம் நடத்தக் கூடிய ஒரு கூட்ட அரங்காக அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் வரக்கூடிய வருவாய் கூட முறையாக ஒரு கணக்கு வைக்கவில்லை. நிறைய ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 இந்த அடிப்படையில் இந்த விதிமுறை நடக்க இருக்கின்ற காரணத்தினால் இந்த கட்டடம் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடம் என்ற அடிப்படையிலேயே எப்பொழுது வேண்டுமானாலும் அந்த கட்டடத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான அது ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு வைத்து இருக்கின்ற காரணத்தினால் விதியை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிற அந்த கட்டடத்தை அரசாங்கம் எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதை முறையாக செயல்படுத்த வேண்டும் எனச் சொல்லி தன்மையிலே டில்லி சென்றபோது இதற்கான தொடர்புடைய அமைச்சகத்தில் ஒரு மனு அளித்தேன். அந்த மனுவை பொதுச் செயலாளருக்கும் மற்றவர்களுக்கும் அளித்திருக்கிறோம். ஆளுனர் அந்த மனுவை உடனடியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அவர்களுக்கு அனுப்பி வைத்து விளக்கம் கேட்டிருக்கிறார்.

 அதாவது தமிழ்ச்சங்கம் முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். தமிழ்ச்சங்கம் என்று சொன்னாலே இன்றைக்கு புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் மத்தியில் ஊழல் முறைகேடு நிறைந்த சங்கமாக இந்த சங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தப்புத் தாளங்கள் - நக்கீரன் 8-2-2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொதுக்குழுவைக் கூட்டாமல் தேர்தலுக்காக மட்டும் சிறப்புப் பொதுக்குழுவை கூட்டுகின்றனர். வரவு செலவு கணக்குக் காட்டவில்லை.

உறுப்பினர்கள் பலருக்கு பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புகள் அனுப்பவில்லை.

இதனைத் தட்டிக் கேட்டவர்களை குண்டர்களை வைத்து மிரட்டித் தாக்கினர். இதில் பாவேந்தர் பாரதிதாசனார் பெயரன் பாதிக்கப்பட்டார்.

வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்து பதிவர் அலுவலகத்தில் கொடுக்காமையால் தமிழ்ச் சங்கத்தை செயலற்ற சங்கம் என அறிவித்துள்ளனர். 


தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு - தினகரன்

Add caption

புதுவைத் தமிழ்ச் சங்கம் முன் போராட்டம்














புதுச்சேரி தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு- இந்து தமிழ்


தமிழ்ச் சங்க பொதுக்குழுக் கூட்டம் தள்ளுமுள்ளுடன் நிறைவடைந்தது -தினமலர்






புதுவைத் தமிழ்ச் சங்கம் வரவு செலவுக் கணக்கை 9 ஆண்டுகளாக ..

கடந்த 25-1-2020 வரை பதிவாளர் அலுவலகத்தில் தணிக்கை செய்த கணக்குகளை ஒப்படைக்க வில்லை எனஙே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழ்ச் சங்கம் சட்டப்படி சங்கம் என்ற நிலையிலேயே உள்ளது. 
 

தமிழ்ச் சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்த அரசுக்கு கோரிக்கை


புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலை முறையாக நடத்த வேண்டும்


வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் 2020 - முறைகேடாகவே தொடங்கியது

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் 2020 - 2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல்  23-2-2020 அன்று நடக்கும் என கடந்த  1-2-2020 அன்று கூட்டப்பட்ட சிறப்புக் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலில் தொடக்கமே முறைகேடாக தொடங்கியது.

முறைகேடு-1 பொதுக்குழுக் கூட்டத்திற்கு பலருக்கு அழைப்பு அனுப்பாமல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழுவில் உறுப்பினர்கள் யாருக்கும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. கேள்விகள் கேட்க முயன்றவர்களை அடியாட்களை வைத்துத் தாக்க முயன்றனர்.

முறைகேடு-2 :   வழக்கம் போல இந்த முறையும் இறந்தவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உறுப்பின்ர்களின் 35 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள்  வாக்காளர் பட்டியலில் முகவரிகள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தலில் நிற்பவர்களை அலைக்கழிக்கும் முயற்சியாகும்.

எல்லா உறுப்பினர்களுக்கும் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பி இருந்தால் அந்தக் கடிதம் திரும்பி வந்திருக்கும். அதை வைத்து முகவரி சரி செய்திருக்க முடியும். ஆனால், இவர்கள் பலருக்கு அழைப்பு அனுப்புவதிலை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. நாங்கள் அப்படித்தான் இதனைக் கண்டறிந்தோம்.


முறைகேடு - 3 :  வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வெளியிடப் படவில்லை. இதனால் கள்ள வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளது.  தமிழ்ச் சங்க தேர்தலில் வாக்களிக்க தமிழ்ச் சங்கம் அனுப்பிய் கடிதம் அல்லது தமிழ்ச் சஙகம் வழங்கிய அடையாள அட்டை இரண்டில் ஒன்று வாக்களிக்க போதுமானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் அனுப்பிய கடிதத்தை  யார் வேண்டுமானாலும் எடுத்து வந்து கள்ள வாக்கு பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. 

புதுவைத் தமிழ்ச் சங்கமா குண்டர்கள் கூடாரமா?

புதுவைத் தமிழ்ச் சங்கத்தை ஒரு குழு கைப்பற்றி வைத்துள்ளது.

தமிழுக்காக எந்த வகையிலும் பங்கேற்காதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக்கி வாக்குகள் பெற்று தாமே நிரந்தரமான நிர்வாகிகளாக இருப்பதற்கான நிலையை உருவாக்கி வைத்துள்ளனர்.

தமிழுக்காகச் செயலாற்றுபவர்கள் அறிஞர்கள் யாரும் நிர்வாகக் குழுவில் இடம் பெறாமல் இருப்பதில் மட்டும் மிக்கக் கவனமாக அவர்கள் இருப்பதைக் காணமுடிகிறது. இருந்தால் அவர்கள் தமிழுக்குச் செயலாற்றாத துதிபாடிக் கூட்டமாக இருந்தாக வேண்டும்.

துதிபாடி, புகழ்பாடி அடிமைச் சிந்தனையோடு இருக்கும் ஒருவன் ஒருபோதும் உரிமைக்காகப் போராடுபவனாக இருக்க வாய்ப்பு இல்லை. இத்தனை நடப்பினும் ஒன்றுமே நடக்காதது போலப் புதுவைத் தமிழ் அறிஞர்கள் பலர் தூங்கி வருகின்றனர்.

வீரத் தமிழச்சி, புலியை முறத்தால் அடித்தாள், விளக்குமாற்றால் அடித்தாள் என மேடைகளில் அடிக்கடி பேசிவிட்டு தூங்கப் போய்விடுவார்கள்.

இப்படி நடப்பதால் தான் தமிழ்ச் சங்கம் தமிழுக்காக இதுவரை எதுவும் செய்யாத கூட்டத்திடம் சிக்கித் தவிக்கிறது.
 

 
போராட்ட உணர்வுகள் மங்கிப் போன, உரிமைகள் பெற வேண்டும் என்பதில் அக்கரை இல்லாதவர்கள் எனத் தமிழ்ச் சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட பலருக்குத் தமிழ்ச் சங்கம் விருது வழங்கி அவர்களிடம் இருந்த கொஞ்சம் தமிழ் உணர்வையும் மழுங்கடித்துள்ளது.

இதனால், தமிழ்ச் சங்கத்தை எதிர்த்து விருது பெற்றவர்கள் யாரும் பேசுவது இல்லை. பலர் விருது பெற்றதால் அமைதியானவர்களாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்கள் ஒரு சில மானமுள்ள தமிழறிஞர்கள் மட்டுமே போராடி வருகின்றனர்.

இந்த நிலை கண்டு தமிழ்ச் சங்கத்தைச் சரியாக நடத்துங்கள் என்று கோரி போராடி வரும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரன் அவர்களைக் குண்டர்கள் வைத்துத் தமிழ்ச் சங்கம் மிரட்டியதும், தாக்கியதும் #வன்மையாகக்_கண்டிக்கத்_தக்கது

வியாழன், 23 ஜனவரி, 2020

தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து போராட்டம்!

வனத்துறை அனுமதி தர மறுத்த பின்னும் சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டிய புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களின் அடாவடி ஆணவப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று 18-01-2020 காலை, தமிழ்ச் சங்கம் எதிரில் மரக்கன்றுகள் ஏந்தி முழக்கப் போராட்டம். 

அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது.

மரம்வெட்டித் தமிழ்ச் சங்கத்திற்கு எதிரில் மரக்கன்று வழங்கி போராட்டம்





செவ்வாய், 21 ஜனவரி, 2020

தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு இல்லை

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு நடத்திய தலைவர், 1000 ரூபாய் கட்டி வாழ்நாள் உறுப்பினராக உள்ள எனக்கு ஏன் அழைப்பு அனுப்பவில்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தான் அழைப்பா? தமிழ்ச் சங்கம் என்ன சர்வாதிகாரியா? இதற்கு முன் நடந்த மாநாட்டிற்கும் அழைப்பில்லை. என்ன நடக்கிறது தமிழ்ச் சங்கத்தில்?  வனத்துறை அனுமதி மறுத்தும் மரம் வெட்டித் தவறு செய்துள்ளார்கள். தமிழ் ஆன்றோர்களே என்ன செய்யப் போகிறீர்கள்....

செல்வம் கோதண்டராமன்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

செயலற்றத் தமிழ்ச் சங்கம் - பதிவர் அலுவலகம் தகவல்

புதுவைத் தமிழ்ச் சங்கம் செயல்படாத சங்கம் என இந்திய அரசின் பதிவுத்துறை அலுவலகம் பதில் அளித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

பதிவு சட்டப்படி வரவு செலவு கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்து அந்த அறிக்கையை பதிவர் சங்கத்தில் கொடுத்து ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக நிதித் தணிக்கை ஏதும் செய்யவில்லை. புதுவைத் தமிழ்ச் சங்கம் தனது உறுப்பினர்களுக்குக் கூட நிதி தொடர்பாக தகவலை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்பதோடு பொருளாளர் என்பவரை பெயரளவான நிர்வாகியாக மட்டுமே தமிழ்ச் சங்கம் வைத்துள்ளது. 

வரவு செலவினை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி முறைப்படியாக நிர்வகிக்க வேண்டும். ஆனால்  நிதியை முறைப்படி வங்கியில்  செலுத்து வதில்லை. இதனால், வரவு செலவில் பல முறைகேடுகள்  நடந்துவருவதாக பலர் புகார் கூறிவரும் நிலையிலும் கணக்கினை பொது வெளியில் வெளியிட தமிழ்ச் சங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 

தாமாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் ரூ 1000/-  வாழ்நாள் கட்டணமாக கட்டியே சேர்ந்தனர்.  

ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகம் சுமார் 500 பேர்களுக்கு தாங்களே உறுப்பினர் கட்டணம் செலுத்துவதாகக் கூறி தனக்கு வேண்டியவர்களை மட்டும் உறுப்பினர் களாகச் சேர்த்துக் கொண்டனர். இவர்களை வைத்தே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இப்படி உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்ட 500 பேர்களுக்கு தமிழ்ச் சங்க நிர்வாகம் பணம் கட்டியதாகவும் தெரியவில்லை. 

இதனிடையில், இந்த சங்கத்தினை செயலற்ற சங்கம் என பதிவுத் துறை கூறியுள்ளது.  இப்படியாக செயலற்ற சங்கத்திற்கு அரசு ரூ ஐந்து இலட்சம் தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு நிதியாக வழங்கியுள்ளது. ஏற்கனவே, முறையாக நிதியை கையாளாத, தணிக்கை செய்து அறிக்கை அளிக்காத தமிழ்ச் சங்கத்திற்கு அரசு நிதி அளித்ததை சமூக அமைப்புகள் பல கண்டித்துள்ளன. 



வெள்ளி, 10 ஜனவரி, 2020

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக் கொண்டே இருங்கள்...


புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் வரவு செலவுக் கணக்குகளைக் காட்டவில்லை. முறைப்படியாக சங்கம் நடத்தப்படவில்லை. பொதுவெளியில் பலர் இதுபற்றி பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால், இதுவரை எந்தவித பதிலையும் தமிழ்ச் சங்கம் அளிக்கவில்லை. அதனால் தமிழ் மக்களே நீங்களும் கேளுங்கள். ஏன் வரவு செலவுக் கணக்கை காட்ட மறுக்கிறார்கள்.