இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திங்கள், 22 செப்டம்பர், 2014

பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் புதுவைத் தமிழ்ச்சங்கம் நீக்கம்

புதுச்சேரியில் கடந்த 2014 ஆண்டு செப்டம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் 13வது இணைய மாநாட்டை புதுவைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்துவதாக முடிவு செய்திருந்தது. 

ஆனால்,  புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் ஊழல் முறைகேடுகளை செய்து வருவதால் புதுவைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 13வது தமிழ் இணைய மாநாட்டை நடத்தக் கூடாது நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த மாநாட்டுக் குழுவில் தமிழ்ச் சங்கத்தை "உத்தமம்" நிறுவனம் விலக்கிவிட்டு அந்த மாநாட்டை நடத்தியது. 

மாநாட்டு அறிவிப்பு இணைப்பு கீழே உள்ளது.

மாநாட்டில் தமிழ்ச் சங்கத்தை நீக்கி தொடக்கவிழா நிறைவு விழா நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.

----------------------------------------

 பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு¸ புதுச்சேரி, இந்தியா

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும், புதுவைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து புதுச்சேரியில் நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு¸ புதுச்சேரி, இந்தியா
 உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.  உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துஉலகெங்கிலும் உள்ள தமிழர்களை
இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும்.
தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துத் தமிழ்க் கவிஞர் கனியன் பூங்குன்றனார் தன்னுடைய அழகான புறநானூறு பாடலில் இயம்பியிருப்பது போல “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்னும் வாக்கைச் சிறப்புற நடைமுறைப்படுத்தி வருவதில் உத்தமம் நிறுவனம் பெருமை கொள்கிறது. 
இம்மாநாடுகள் “நீர் வழிப் படூம் புணைபோல முறைவழிப் படூம் ஆருயிர்” என்னும் நம் கவிஞர் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க கணினி வழி தமிழர்களின் ஆருயிரை முறைவழிப்படுத்தி வருவது பெருமைக்குரிய ஒன்றே!  இவ்வகையில் உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்!  நம் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் கணினி குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைவது எண்ணித் தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும். 
இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய நாட்கள் ஆகியன குறித்தான செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடுவோம்.  மேலதிக செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.

வாசு அரங்கநாதன், தலைவர், உத்தமம் நிறுவனம்,தமிழ்ப் பேராசிரியர்¸ பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம், அமெரிக்கா








மேலும் சில இணைப்புகள்:

புதுச்சேரியில் செப்டம்பரில் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு

புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு!