இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எங்களைப் பற்றி........

புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழுவானது, புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களும், செயல் பாட்டாளர்களும் இணைந்த ஒரு அமைப்பாகும்.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் அறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் செயற்பாட்டாளர்களையும் கடந்த பல ஆண்டுகளாகவே உறுப்பினர்களாக சேர்க்க மறுத்தது தமிழ்ச் சங்கம். இதனைக் கண்டித்து தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் எனப் போராடுவதற்காகவே புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஏன் இந்த தமிழ்ப் பாதுகாப்புக் குழு?
  1. புதுவைத் தமிழ் சங்கத்தில்  உறுப்பினர் சேர்க்கையை முறைப்படுத்தல்.
  2. கடந்த காலங்களில் தமிழுக்காக எவ்விதமான செயல்பாட்டிலும் இல்லாதவர்களை வாக்குக்காக மட்டும்  உறுப்பினர்களாக முறை கேடாகச் சேர்த்து வாக்களிக்கப்  பயன்படுத்துவதை மாற்றியமைத்தல்.
  3. வரவு செலவுக் கணக்குகளை முறையாக வங்கிக் கணக்கில் செலுத்தி நிர்வகிக்காதது. 
  4. வரவு செலவுக் கணக்குகளை பல ஆண்டுகளாக தணிக்கை செய்து உறுப்பினர்களுக்கு வழங்கி ஒப்புதல் பொறாதது.
  5. ஆண்டுக்கு ஒருமுறையேனும் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதை மறுத்து அலச்சியப்படுத்துவது.
  6. தமிழ்ச் சங்கத்தின் தேர்தலை முறைப்படி நடத்தாதது..
  7. தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா மாநாட்டுக்கு முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி மாநாட்டுக்கு ஒப்புதல் பெறாதது. அந்த மாநாட்டுக்கு பல  உறுப்பினர்களுக்கே அழைப்பு அனுப்பாமல் நடத்தியது.
  8. இப்படி ஏராளமான பிரச்சனைகளை உள்ளடக்கிய தமிழ்ச் சங்கத்தை ஒழுங்குபடுத்துவது என்பதை நோக்கி எங்கள் பயணம் செல்கிறது........

அஞ்சல் முகவரி:

புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக்குழு
எண்,20,  4 வது முதன்மைத் தெரு விரிவு
அன்னை தெரெசா நகர்,

மூலக்குளம், புதுச்சேரி - 605 010


தொடர்பு எண்:  இரா.சுகுமாரன்   94431 05825
                                  கோ. சுகுமாரன்  98940 54640
                                  இரா.தேவதாசு   98425 34057

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக