இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 1 நவம்பர், 2016

உறுப்பினர் சேர்க்கை திட்டமிட்டு காலம் கடத்தியது தமிழ்ச்சங்கம்

புதுவைத் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்ய இருப்பதாக அதன் தலைவர் திரு முத்து அவர்கள் தெரிவித்ததாக புதுவைத் தமிழ்பாதுகாப்புக் குழு தலைவர் திரு அழகிரி தெரிவித்தார்.

தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்ன பதில் சொல்வார் என்பதை முன்னமே அறிவோம். காலம் கடத்துவது அவரது முடிவாகும் ஏற்கனவே ஒரு மாதகாலம் ஆன நிலையில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல் மேலும் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அழகிரி தெரிவித்தார்.

பத்து நாள் என்பதை மேலும் நீட்டித்துபின்னர் அவர் சொல்ல இருக்கும் பதில் " பொதுக்குழுவில் இப்போது உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது" என கூறுவார் என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் கடந்த கால அனுபவம் அப்படித்தான் உள்ளது.
எனவே. நாங்கள் சென்ற வாரத்திற்கு முன் எடுத்த முடிவின் படி நகரம் முழுவதும் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து முதல்கட்டமாக சுவரொட்டி ஒட்டுவது என முடிவெடுத்தபடி எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறும்.

சென்ற வாரம் "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" அமைக்கப்பட்ட பின்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்களை சந்தித்து விருப்பமுள்ளவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

எனவேஇன்று காலை "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" வின் தலைவர் திரு. இரா.அழகிரி அவர்களிடம்  தமிழ்ச் சங்கத்தின் தலைவரை  இக்குழு சந்திப்பதற்கான நேரத்தை தொலை பேசி மூலம் பேசி உறுதிப்படுத்தும்படி  கேட்டிருந்தேன்.

இரண்டு முறை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்கள் தொலை பேசி அழைப்பை ஏற்கவில்லை. எனவேகுழு சந்திப்பதற்கான நாள் மற்றும் நேரம் உறுதிப்படுத்த வேண்டி நேரில் நானும் (இரா.சுகுமாரன்) திரு அழகிரி அவர்களும் திரு. முத்து அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தோம்.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுவில் முடிவெடுத்து தெரிவிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். அதுவரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படின் இக்குழு சந்திப்பதா அல்லது மேல் நடவடிக்கை மேற்கொள்வதாஎன்பது பின்னர் முடிவு செய்யப்படும்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சீர்கேடு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை சரி செய்யலாம் என நினைத்தோம். ஆனால் இன்று மேலும் மேலும் சீர் கெட்டு போயுள்ளது.
குறிப்பாக தமிழறிஞர்களை உறுப்பினராக சேர்ப்பது தான் எங்களது நோக்கமாக இருந்தது. அதோடு எங்கள் பணி நிறைவு என நினைத்தோம்.
அப்போது தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தோம். உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு முன் எங்களோடு பேசுங்கள் என கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களைப் பொருட்படுத்தவில்லை. அது தான் எங்கள் நடவடிக்கை தொடங்கிய பின் அவர்கள் செய்த முதல் தவறு.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் நண்பர்களாக இருந்த போதும் ஒரு உடன்பாடான, இணக்கமான சூழலை அவர்கள் ஏற்படுத்த முயலவில்லை என்பது வருத்தமான செய்தி.
இத்தகைய மெத்தனப் போக்கோடு அவர்கள் தொடர்ந்து தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்துக்கு எதிராக செயல்பட்டனர்.
எனவே, நாங்கள் எங்கள் பணியை தொடர வேண்டியதாயிற்று. தமிழ்ச் சங்கத்தில் நிர்வாகக்குழுவில் சேரவே விருப்பமில்லாத என்னைப் போன்றவர்களும் தேர்தலில் நிற்க வேண்டியதாயிற்று.
இன்று அவர்கள் வெற்றி பெற்றாலும் அது மதிக்கத் தக்க வெற்றியாக இல்லை.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் இன்று வரை ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்த முன்வராதது அவர்களின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது.