வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

புதுவைத் தமிழ்ச் சங்கமா குண்டர்கள் கூடாரமா?

புதுவைத் தமிழ்ச் சங்கத்தை ஒரு குழு கைப்பற்றி வைத்துள்ளது.

தமிழுக்காக எந்த வகையிலும் பங்கேற்காதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக்கி வாக்குகள் பெற்று தாமே நிரந்தரமான நிர்வாகிகளாக இருப்பதற்கான நிலையை உருவாக்கி வைத்துள்ளனர்.

தமிழுக்காகச் செயலாற்றுபவர்கள் அறிஞர்கள் யாரும் நிர்வாகக் குழுவில் இடம் பெறாமல் இருப்பதில் மட்டும் மிக்கக் கவனமாக அவர்கள் இருப்பதைக் காணமுடிகிறது. இருந்தால் அவர்கள் தமிழுக்குச் செயலாற்றாத துதிபாடிக் கூட்டமாக இருந்தாக வேண்டும்.

துதிபாடி, புகழ்பாடி அடிமைச் சிந்தனையோடு இருக்கும் ஒருவன் ஒருபோதும் உரிமைக்காகப் போராடுபவனாக இருக்க வாய்ப்பு இல்லை. இத்தனை நடப்பினும் ஒன்றுமே நடக்காதது போலப் புதுவைத் தமிழ் அறிஞர்கள் பலர் தூங்கி வருகின்றனர்.

வீரத் தமிழச்சி, புலியை முறத்தால் அடித்தாள், விளக்குமாற்றால் அடித்தாள் என மேடைகளில் அடிக்கடி பேசிவிட்டு தூங்கப் போய்விடுவார்கள்.

இப்படி நடப்பதால் தான் தமிழ்ச் சங்கம் தமிழுக்காக இதுவரை எதுவும் செய்யாத கூட்டத்திடம் சிக்கித் தவிக்கிறது.
 

 
போராட்ட உணர்வுகள் மங்கிப் போன, உரிமைகள் பெற வேண்டும் என்பதில் அக்கரை இல்லாதவர்கள் எனத் தமிழ்ச் சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட பலருக்குத் தமிழ்ச் சங்கம் விருது வழங்கி அவர்களிடம் இருந்த கொஞ்சம் தமிழ் உணர்வையும் மழுங்கடித்துள்ளது.

இதனால், தமிழ்ச் சங்கத்தை எதிர்த்து விருது பெற்றவர்கள் யாரும் பேசுவது இல்லை. பலர் விருது பெற்றதால் அமைதியானவர்களாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்கள் ஒரு சில மானமுள்ள தமிழறிஞர்கள் மட்டுமே போராடி வருகின்றனர்.

இந்த நிலை கண்டு தமிழ்ச் சங்கத்தைச் சரியாக நடத்துங்கள் என்று கோரி போராடி வரும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரன் அவர்களைக் குண்டர்கள் வைத்துத் தமிழ்ச் சங்கம் மிரட்டியதும், தாக்கியதும் #வன்மையாகக்_கண்டிக்கத்_தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக