slide

slide2
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு ...!
slide2
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு ...!
slide3
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
slide4
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
பத்திரிக்கை செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரிக்கை செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 ஆகஸ்ட், 2020

நமது முரசு சுவரொட்டி விளம்பரம் - தமிழ்ச் சங்கம்

தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

விதி மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகை: புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

விதி மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகை: புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

By செ.ஞானபிரகாஷ்
Published: 12 Aug, 20 08:34 pmModified: 12 Aug, 20 08:34 pm
*இந்து தமிழ் செய்தி*
 
விதியை மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகைக்கு விட்டது உட்பட பல்வேறு காரணங்களால் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்தக் கோரி புதுச்சேரி அரசை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டது. இடம் தமிழ்ச் சங்கத்துக்குச் சொந்தமாக இருந்தாலும், கட்டிடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் (DRDA) சொந்தமானது.

இக்கட்டிடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைக்கவே நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளைத் தணிக்கைச் செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை உட்பட பல விஷயங்களைச் சுட்டிக்காட்டி, கட்டிடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் அறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்தவும், சங்கப் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இன்று அண்ணா நகரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் அழகர், இலக்கியப் பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம், தன்னுரிமைக் கழகத் தலைவர் சடகோபன், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ரகுபதி உட்பட 12 அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "புதுவைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சங்கக் கட்டிடத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஒப்பந்தத்தை மீறி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வாடகை விட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை அறிந்தும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் இழைத்துள்ளனர். இதனால் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
 

ஞாயிறு, 1 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தப்புத் தாளங்கள் - நக்கீரன் 8-2-2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொதுக்குழுவைக் கூட்டாமல் தேர்தலுக்காக மட்டும் சிறப்புப் பொதுக்குழுவை கூட்டுகின்றனர். வரவு செலவு கணக்குக் காட்டவில்லை.

உறுப்பினர்கள் பலருக்கு பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புகள் அனுப்பவில்லை.

இதனைத் தட்டிக் கேட்டவர்களை குண்டர்களை வைத்து மிரட்டித் தாக்கினர். இதில் பாவேந்தர் பாரதிதாசனார் பெயரன் பாதிக்கப்பட்டார்.

வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்து பதிவர் அலுவலகத்தில் கொடுக்காமையால் தமிழ்ச் சங்கத்தை செயலற்ற சங்கம் என அறிவித்துள்ளனர். 


தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு - தினகரன்

Add caption

புதுவைத் தமிழ்ச் சங்கம் முன் போராட்டம்














தமிழ்ச் சங்க பொதுக்குழுக் கூட்டம் தள்ளுமுள்ளுடன் நிறைவடைந்தது -தினமலர்






தமிழ்ச் சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்த அரசுக்கு கோரிக்கை


செவ்வாய், 29 அக்டோபர், 2019

தமிழ்ச் சங்கத்திற்கு வாக்களிக்க மட்டும் தான் கூட்டம் வருமா?

புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கூட்டங்களில் பொதுவாக உறுப்பினர்கள் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. ஏனெனில், பெரும்பாலும் துதிபாடிகள் கூட்டமாகத் தான் அந்தக் கூட்டங்கள் அமைந்துள்ளன.

எனவே, தமிழ்ச் சங்கம் அடிக்கடி விருதுகள் அறிவித்துக் கூட்டம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த விருதுகளை வாங்குவதற்குக் கூடப் பலர் வருவதில்லை என்பது தான் வேடிக்கை......


வெள்ளி, 15 மார்ச், 2019

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழினத்திற்காக போராடியதாக செய்தி உண்டா?


நற்றமிழில், தமிழகத்தில்
நல்லெண்ணம் இல்லாத
நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்
கடிநாயை அமைத்திடலாம்!
                                                 - பாரதிதாசன்

தமிழ்ச் சங்கம் என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அல்லது தமிழ் மொழிக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் புதுவையில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளும் போராடியதைப் பார்த்திருக்க முடியும். 

புதுவைத் தமிழ்ச் சங்கம் மொழிக்காகவும் இனத்திற்காகவும் ஒருபோதும் போராடியதில்லை. ஈழத்தமிழர்களுக்காக உலகெங்கும் போராடிய போது புதுவைத் தமிழ்ச் சங்கம் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவர்கள் போராடுவதெல்லாம் பதவிக்காக மட்டும் தான்.

எனக்குத் தெரிந்து இவர்கள் இயற்றிய ஒரே தீர்மானம்:
"புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது தான்."

இந்த முறை மாநாட்டில் ஏதோ தீர்மானம் நிறைவேற்றினார்களாம்...

இணையத்தில் தேடிப்பாருங்கள் தப்பித் தவறி தமிழினத்திற்காக போராடியதாக செய்தி வந்திருக்கிறதா பாருங்கள் வாய்ப்பு இல்லை. (வேறு சில அமைப்புகளுடன் நடத்தும் போது செய்திகள் உள்ளது.)




வியாழன், 14 மார்ச், 2019

ஊழல் தமிழ்ச் சங்கத்தை முதல்வர் சரி செய்வாரா?

புதுவை முதல்வர் அவர்கள் தமிழுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் அப்படி உதவி செய்வதாய் இருந்தால் முதலில் இந்த ஊழல் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகளை சரி செய்வது தான் முதன்மையான பணியாகும் அதனை செய்வாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





...........................................
தமிழ் சங்க பொன்விழா மாநாடு: தமிழுக்கும்,தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் நாராயணசாமி உறுதி

புதுவை மாநிலத்தில் தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் நமது அரசு உரிய மரியாதை செலுத்தி வருகிறது. புதுவை மாநில மக்களின் நலன் கருதி தற்போது நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்றால் இதன் மூலம் அரசு தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.

புதன், 13 மார்ச், 2019

முத்துவின் ஊழல் மோசடி பற்றி சுவரொட்டி ஒட்டியதால் அதிக வாக்களித்தார்களாம்!

தமிழ்ச் சங்கத் தேர்தல் முடிந்தவுடன்  முத்து அவர்கள் அளித்த பத்திரிக்கை அறிக்கையை கீழே அளித்துள்ளோம். தினமலர் செய்தி (14-02-2017)

தேர்தலில் முறைகேடு நடந்ததை ஒட்டி முத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. உள்ளூரின் கடுமையான எதிர்ப்பு உள்ளதால் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளை இணைத்தால் தான்  இதனை தமிழ்ச் சங்கம் போல் நடத்த முடியும் என்பதை அறிந்துள்ளார்.  உள்ளூரில் விலை போகவில்லை. வெளியூரில் வியாபாரம் செய்தாக வேண்டியுள்ளது. 

அப்போது எடுத்த முடிவின் படிதான் அவர் உள்ளூரில் உள்ள தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு அனுப்பாமல் வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி இருந்தார் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். 

இவரின் மோசடிகளைப் பற்றி சுவரொட்டி ஒட்டியதால் தான் தமிழ்ச் சங்கத்தினர் இவருக்கு அதிக வாக்கு அளித்தார்களாம்.  மோசடி என்று சுவரொட்டி ஒட்டியதாலேயே வாக்களித்தார்கள் என்றால், அவர் எத்தகையவர்களை  உறுப்பினர்களாக சேர்த்து வைத்துள்ளார் என்பதைப் பாருங்கள்.


வெள்ளி, 8 மார்ச், 2019

தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை பொது நூலகமாக்க கோரிக்கை

19-04-2017 புதுச்சேரி ராசீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர்  ரகுபதி அவர்கள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தை பொது நூலகமாக்க மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பொது நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு என ரூ 20 லட்சம் நிதி பெற்று தமிழ்ச் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது. 

ஆனால், அந்த கட்டிடத்தில் நூலகம் என்ற பெயர் பலகை வைக்காமலேயே இவர்கள் செய்தித் தாள்கள், வார இதழ்கள் ஆகியவற்றை கடந்த 2006 ஆண்டு முதல் 2015 வரை கலைப் பண்பாட்டுத் துறை ரூ 48,167 வழங்கியுள்ளது. 

இருப்பினும் இதனை முழுமையான பொது நூலகமாக செயல்படுத்தாமல் முற்றிலும்  தமிழ்ச் சங்கக் கட்டிடமாக மாற்றி நிகழ்வுகள் அரங்கமாக வாடகைக்கு விட்டு, வியாபார நோக்கோடு செயல்படுத்தி வருகின்றனர். 

இதனால், பொது மக்களுக்கோ, தமிழ் வளர்ச்சிக்கோ, தமிழ் ஆர்வலர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.
எனவே, பொது மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பயன் பெறும் வகையில் பொது நூலகத்தை அக்கட்டத்தில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


சனி, 9 பிப்ரவரி, 2019

முருகேசன் பேட்டி புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு

புதுச்சேரி தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களிடம் வாழ்நாள் கட்டணமாக ரூ 1000 என 800 புதிய உறுப்பினர்களிடம் வாங்கிய "ரூபாய் எட்டு இலட்சம்" மற்றும் சென்ற ஆண்டு இருப்பு எனவும் தமிழ்ச் சங்க கட்டிடம் வாடகை என பதிமூன்று இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்த பணத்தை பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் பொதுக் குழுவைக் கூட்டாமல் பொதுக்குழு ஒப்புதல் பெறாமல்  ஒரு பெரிய மாநாட்டை நடத்துவதாக அறிவித்துள்ளது புதுவைத் தமிழ்ச் சங்கம்.

"எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு எங்கள் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமல் அவர்களின் சொந்த விளம்பரத்திற்காக மாநாடு நடத்துவது ஒரு மாபெரும் மோசடி என்கிறார்கள் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள்" 

இப்படி கேள்வி கேட்பவர்களில் ஒருவர்தான் ப.முருகேசன் இவர் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் நடத்தும் பொன்விழா மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார். 


செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

குடும்ப சொத்தாகும் புதுவைத் தமிழ்ச் சங்கம்

புதுச்சேரி தமிழ்ச் சஙகம் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்கான சங்கம் என்று நீங்கள் கருதினால் அது மிகவும் தவறான கருத்தாகும்.

சிலர் கூற்றுப்படி அது ஒரு சாதிச் சங்கம் போல் செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டுமானால் அந்த குறிப்பிட்ட சாதியாக இருக்க வேண்டும் என்ற நிலை  புதுச்சேரியின் அவலமாகும்.



தமிழுக்கு தொடர்பு இல்லாதவர்களைக் கூட சாதி அடிப்படையில் அவர்களிடம் உறுப்பினர் கட்டணம் கூட வாங்காமல் இப்போது பொறுப்பில் இருப்பவர்களே அந்த தொகையை செலுத்து உறுப்பினர்களாக சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் பல தமிழ் அறிஞர்கள் பிற சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தமிழ்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை.  

இந்த வார இதழில் வந்துள்ள செய்தியை படியுங்கள். பல செய்திகள் வெளிவரும்,

தமிழ்ச் சங்கத்தில் தலைவராக இருந்த முத்து அவர்கள்  ஒரு செல்வந்தர் எனவே, வெளி நாட்டில் உள்ள தமிழர்களுக்கு நிதி அளித்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தமக்கு விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வாராம். அது போலத்தான் பல நாடுகளில் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டதாக சிலர் என்னிடம் தெரிவித்தனர்.