இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வியாழன், 14 பிப்ரவரி, 2019

வெளிநாட்டுத் தமிழர்கள் புதுச்சேரி மாநாட்டை புறக்கணிக்க கோரிக்கை

அன்புடையீர் வணக்கம்,

தாங்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டுக்கு வருவதாக அறிந்தோம். எனவே, புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்களாகிய நாங்கள் தமிழ்ச் சங்கம் பற்றி தங்கள் கவனத்திற்கு வராத சில நிகழ்ச்சிகளையும்  தகவல்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.



புதுச்சேரி தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களிடம் வாழ்நாள் கட்டணமாக ரூ.1000/- என 800 புதிய உறுப்பினர்களிடம் வாங்கிய "ரூபாய் எட்டு இலட்சம்" மற்றும் சென்ற ஆண்டு இருப்பு எனவும் தமிழ்ச் சங்கக் கட்டிடம் வாடகை எனப் பதிமூன்று இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தைப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் பொதுக் குழுவைக் கூட்டாமல் பொதுக்குழு ஒப்புதல் பெறாமலும் ஒரு பெரிய மாநாட்டை நடத்துவதாகத் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.

"எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமல் அவர்கள் தம் சுய விளம்பரத்திற்காக மாநாடு நடத்துவது ஒரு மாபெரும் மோசடி என்கிறார்கள் தமிழ்ச் சங்க  வாழ்நாள் உறுப்பினர்கள்".

உள்ளூரில் அம்பலப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டுத் தமிழர்களிடம் ஆதரவைத் திரட்டவும் வெளிநாட்டுத் தமிழர்களை அழைத்து இந்த மாநாட்டை நடத்துகிறது தமிழ்ச்சங்கம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு (உத்தமம்) எனும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் (INFITT) புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் முறை கேடினை அறிந்து அவர்களை நீக்கிவிட்டு உலகத் தமிழிணைய மாநாட்டை புதுவையில் நடத்தியதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்துப் புதுவை நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்குத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மோசடியாகத் தேர்தல் வைத்து வெற்றிப் பெற்றது. இரண்டாவது வழக்கு பொதுக்குழு கூட்டி இந்த மாநாடு நடத்த ஒப்புதல் பெறாதது, நிதி மோசடி, (வழக்கு எண் :2601/2018) உள்ளிட்டவைகளை அடங்கிய இந்த மாநாட்டைத் தடை செய்யக் கோரியதுமாகும்.

உறுப்பினர்களுக்குக் கூட மாநாட்டு விழாவிற்கு அழைப்பு அனுப்பவில்லை, மாறாக வெளிநாட்டு பங்கேற்பாளர்களுக்கு மட்டும் அழைப்ப்பு அனுப்பிப் பல்வேறு மோசடி செய்து இந்த மாநாடு நடக்கிறார்கள். இதனை மறைக்கவே பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒன்றிணைந்த மாநாடு போல் அரசியல் தலைவர்களின் அரங்கமாக இந்த மாநாடு நடைபெறுகிறது. எங்கே தமிழ் வாழப் போகிறது இவர்களிடம்?

தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் உள்ளக்குமுரலை வெளிநாட்டுத் தமிழறிஞர்களிடம் சொல்ல எங்களுக்கு வழி இல்லை. ஆகவே இந்த வலைப் பதிவுகள் மூலம் தங்களுக்குத் தெரிவிக்க விழைகிறோம். ஏதோ காழ்ப்புணர்ச்சியில் எழுதுகிறார்களோ என்று நீங்கள் கருதாமல் இருக்க எல்லாச் செய்திகளுக்கும் முடிந்தவரை தொடர்புடைய ஆவணகளை இணைத்துள்ளோம்.


https://puduvaithamizhpathukappu.blogspot.com/

இதனால், புதுவை மற்றும் தமிழகத் தமிழர்களை இந்த மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி வருகிறோம். தாங்கள் வருகைபுரிந்தால் புதுவைத் தமிழ்ச் சங்கத்தினர் அவர்கள் செய்த மோசடிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவார்கள் என்ற செய்தியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புலவர் பட்டம் பெறாமையால் பாரதிதாசனைக் கூட உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளாத புதுவை தமிழ்ச் சங்கம் இன்று ஓட்டுக்காகக் குப்பைக் கூட்டுபவர், (பார்க்க வலைப்பதிவு) கேள்வி கேட்காத எளிய மக்கள் தமிழுக்காகக் கடந்த காலங்களின் எவ்வித பணியும் செய்யாதவர்களை அரசியல் கட்சி போல வாக்குக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

எனவே, அன்பு கூர்ந்து இது போன்ற போலித் தமிழ்ச் சங்கத்துக்கு இனிவரும் காலங்களில் ஆதரவு தரவேண்டாம் எனத் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள்
புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள்
தொடர்புக்கு: +91 9443105825

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக