இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 10 ஜனவரி, 2017

எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம்

ஒருமுறை தேர்தலில் வெற்றி பெற்றால் வாழ்நாள் முழுதும்  நிர்வாகியாக நீடிக்கலாம் என்ற தீர்மானத்தையும் விரைவில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்

பிப்.12-இல் புதுவை தமிழ்ச் சங்கத் தேர்தல்

By புதுச்சேரி,| DIN | Published: 10th January 2017 08:23
புதுவை தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தல் வரும் பிப்.12-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதுவை தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்களின், பொதுக்குழுக் கூட்டம் வில்லியனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார்.
 செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், வரவு, செலவு கணக்குகளை படித்து, பொதுக்குழு ஒப்புதல் வழங்கிய பிறகு, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய, தேர்தல் ஆணையராக முன்னாள் நீதிபதி சேதுமுருகபூபதியை நியமித்து பொதுக் குழுவில் தீர்மானித்தனர்.
 பின்னர், நிறைவேற்றிய தீர்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழறிஞர் வ.செ.குழந்தைசாமி, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, கவிஞர் இன்குலாப், புதுவை தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுவை தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவிற்கு 11 உறுப்பினர்களை, வரும் பிப்.20-க்குள் தேர்தல் நடத்தி தேர்வு செய்து தருமாறு, தேர்தல் ஆணையர் சேதுமுருகபூபதியிடம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழுவுக்கும், ஆட்சிக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
 இதனையடுத்து, தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் முருகபூபதி கூறியது: புதுவையில் வரும் பிப்.12-இல் தமிழ்ச் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
 தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் கோவிந்தராசு நன்றி கூறினார்.

பிப்.12-இல் புதுவை தமிழ்ச் சங்கத் தேர்தல்

பிப்.12-இல் புதுவை தமிழ்ச் சங்கத் தேர்தல்

By புதுச்சேரி,| DIN | Published: 10th January 2017 08:23 AM
புதுவை தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தல் வரும் பிப்.12-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதுவை தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்களின், பொதுக்குழுக் கூட்டம் வில்லியனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார்.
 செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், வரவு, செலவு கணக்குகளை படித்து, பொதுக்குழு ஒப்புதல் வழங்கிய பிறகு, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய, தேர்தல் ஆணையராக முன்னாள் நீதிபதி சேதுமுருகபூபதியை நியமித்து பொதுக் குழுவில் தீர்மானித்தனர்.
 பின்னர், நிறைவேற்றிய தீர்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழறிஞர் வ.செ.குழந்தைசாமி, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, கவிஞர் இன்குலாப், புதுவை தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுவை தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவிற்கு 11 உறுப்பினர்களை, வரும் பிப்.20-க்குள் தேர்தல் நடத்தி தேர்வு செய்து தருமாறு, தேர்தல் ஆணையர் சேதுமுருகபூபதியிடம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழுவுக்கும், ஆட்சிக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
 இதனையடுத்து, தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் முருகபூபதி கூறியது: புதுவையில் வரும் பிப்.12-இல் தமிழ்ச் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
 தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திங்கள், 9 ஜனவரி, 2017

புதுவைத் "தனியார் தமிழ்ச் சங்கம் "

இரா. சுகுமாரன் தன்னுடைய நிலையைப் புதுப்பித்துள்ளார்.
தமிழ்ச் சங்கம் பதிவு-3
புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என யாரையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளாமல் 105 பேர்களை மட்டுமே உறுப்பினர்களாக வைத்திருந்திருந்து தமக்குள்ளேயே எல்லாமாக தமிழ்ச் சங்கத்தை "தனியார் தமிழ்ச் சங்கம் " போல் வைத்திருந்தனர்.
சென்ற ஆண்டு நடத்திய போராட்டத்தால் 300 பேர்கள் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர் இவர்கள் அனைவரும் தமக்கு எதிராக வாக்களித்து விடுவார்களோ என பயந்த தமிழ்ச்சங்க நிர்வாகத்தினர் கடந்த காலங்களில் தமிழ் நடவடிக்கைகளில் எவ்வித்திலும் பங்கேற்காத மேலும் 300 பேர்களை அதன் பின் உறுப்பினர்களாக வாக்களிப்பதற்காக மட்டுமே சேர்த்து தமிழ்ச் சங்கம் என்பதன் அடிப்படையையே கேலிக் கூத்தாக்கியுள்ளனர்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

புதுவைத் தமி்ழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

இரா. சுகுமாரன் தன்னுடைய நிலையைப் புதுப்பித்துள்ளார்.
தமிழ் சங்கம் : பதிவு-2
புதுவைத் தமி்ழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அரைமணி நேரம் நடந்திருக்கும் என்கிறார்கள் வரவு செலவு விவரங்களை தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கோவிந்தராசு அவர்கள் படிக்கவில்லை. மாறாக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் படித்துள்ளார். எல்லா அமைப்புகளிலும் நிதி பொறுப்பாளர்கள் தான் அதன் அறிக்கையை படிப்பார்கள். காரணம் கேட்டபோது நண்பர் கோவிந்தராசு அரசு ஊழியராம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இவர்களுக்கு இது தெரிந்ததா என்று சிலர் நினைக்கலாம். தேர்வு செய்த அன்று முதல் அவர் எந்த வரவு செலவையும் பார்க்கவில்லை பெயரளவிலான பொருளாளராகவே 3 ஆண்டுகள் அவரது பதவி கடந்தது.
தமிழ்ச் சங்கம் சிலரிடம் சிக்கிக் கிடக்கிறது. ஒரு நேர்மையான அமைப்பாக இருப்பின் அது நிர்வாகத்தை சரியாக பிரித்துக் கொடுத்து நிர்வகித்திருக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறையேனும் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் மூன்று ஆண்டில் ஒருமுறை கூட கூட்டி பொதுக்குழுவில் அந்தந்த ஆண்டு செலவிற்கான ஒப்புதல் பெறப்படவில்லை.
வரவு செலவு விவரம் படிக்கப்பட்டது ஆனால் அவை சரியாக செலவு செய்யப்பட்டதா என பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் அறிய இயலாது. காரணம் செலவுக் கணக்கு விவரங்கள் ஏதும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. விரும்புகிறவர்களுக்கும் வாய்ப்பு இல்லை.
தமக்கு வேண்டியவர்களை வைத்து அவசரமாக கூட்டத்தை முடிப்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர்.
பேசுவதற்கு சிலருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில அறிவிப்புகள் அங்கேயே அறிவித்து எதிர்ப்புகள் காரணமாக உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அவசரமாக கூட்டத்தை முடித்து விட்டதாகவும் தெரிகிறது என்ன அவசரமோ தெரியவில்லை.
தமக்கு வேண்டிய பலரை உறுப்பினர்களாக சேர்த்து அவர்களிடம் உறுப்பினர் கட்டணம் பெறப்படவில்லை எனவும் சிலர் தெரிவித்தனர். அந்த கட்டணத்தை தலைவர் கட்டி விடுவதாக தெரிவித்து உறுப்பினராக சேர்க்கப் பட்டனர் இவர்கள் வாக்கிற்காக முறைகேடாக சேர்க்கப்பட்டவர்கள் ஆவர். ஆனால் அப்படி சேரக்கப் பட்டவர்களுக்கான உறுப்பினர் கட்டணத்தை தலைவர் வங்கியில் செலுத்தவில்லை.
வாக்கிற்காக அரசியல் கட்சி போல தமிழ்ச் சங்கம் செயல்படுகிறது.
இப்படி ஏராளமான புகார்கள் தமிழ்ச்சங்கத்தின் மீது சொல்லப்படுகிறது.