இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வியாழன், 23 ஜனவரி, 2020

தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து போராட்டம்!

வனத்துறை அனுமதி தர மறுத்த பின்னும் சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டிய புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களின் அடாவடி ஆணவப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று 18-01-2020 காலை, தமிழ்ச் சங்கம் எதிரில் மரக்கன்றுகள் ஏந்தி முழக்கப் போராட்டம். 

அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது.

மரம்வெட்டித் தமிழ்ச் சங்கத்திற்கு எதிரில் மரக்கன்று வழங்கி போராட்டம்





செவ்வாய், 21 ஜனவரி, 2020

தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு இல்லை

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு நடத்திய தலைவர், 1000 ரூபாய் கட்டி வாழ்நாள் உறுப்பினராக உள்ள எனக்கு ஏன் அழைப்பு அனுப்பவில்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தான் அழைப்பா? தமிழ்ச் சங்கம் என்ன சர்வாதிகாரியா? இதற்கு முன் நடந்த மாநாட்டிற்கும் அழைப்பில்லை. என்ன நடக்கிறது தமிழ்ச் சங்கத்தில்?  வனத்துறை அனுமதி மறுத்தும் மரம் வெட்டித் தவறு செய்துள்ளார்கள். தமிழ் ஆன்றோர்களே என்ன செய்யப் போகிறீர்கள்....

செல்வம் கோதண்டராமன்

திங்கள், 20 ஜனவரி, 2020

காசி.வில்லவன் அவர்கள் எழுதிய பதிவுக்கு இது பதில்-1

 காசி.வில்லவன் அவர்கள் எழுதிய பதிவுக்கு இது பதில்

முகநூல் நண்பர்களுக்கு வணக்கம்.
*தமிழ்ச் சங்கத்தின் து.தலைவர் ப.திருநாவுக்கரசு அவர்கள் அனுப்பிய செய்திக்கு ஒரு சுருக்கமான பதில்*
1. விளம்பரத்திற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது என்ன கோமாளிக் கூத்து? அதுவும் மரக்கன்றுகள் வழங்குகிறோம் என்ற பெயரில் இப்படி ஒரு நாடகம் தேவையா?
*திருவள்ளுவர் சிலை நீங்கள் வைத்ததே ஒரு விளம்பரம் தான். விருது, விழாக்களைத் தவிர மொழி, இனத்திற்காக எள்ளளவும் பணியாற்றாத நீங்கள், தேர்தலில் உங்கள் சாதனையாக இதனைப் பேசத்தானே இந்த நாடகம் இது தேவையா*?
2. ஆக மனிதர்களைத் தோல் உரித்துப் பார்த்தால் பதவி மோகம், அதிகார போதை தான் உள்ளே புகுந்து குடைந்து ஆட்டிப் படைக்கிறது.
*உண்மை தான் பதவி மோகம் தான் உங்களை இப்படி பேச வைக்கிறது*
3. தனிமனிதப் பகைமையை, காழ்ப்புணர்ச்சியை நீக்கி விட்டுப் பார்த்தால் இது ஒன்றுமே இல்லாத விவகாரம்.
*தனிமனிதப் பகைமையா? உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பங்காளிச் சண்டையா? சொத்துத் தகறாரா? ஒழுங்காகத் தமிழ்ச் சங்கத்தை நடத்துங்கன்னா ஏதோ பேசுரீங்க*
4. திருவள்ளுவருக்குச் சிலை வைப்பது தப்பா?
*திருவள்ளுவர் சிலை வைப்பது தவறு இல்லை. ஆனால், யாரைக்கேட்டு வைத்தீர்கள்.? தமிழ்ச்சங்கம் என்ன “உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?" தலைக்கு ஆயிரம் என பல லட்சம் ரூபாயைக் கொடுத்தவர் களிடம் சொல்லாமல் அவர்களுக்கு அழைப்புக் கூட அனுப்பாமல் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமல் செய்வதற்கு நீங்கள் யார்?. உங்கள் மோசடிகளைப் பற்றி கேட்காதவர்களுக்கும் தலையாட்டி பொம்மைகளை மட்டுமே வைத்து நடத்த இது என்ன உங்க மாமியார் வீட்டு சொத்தா? பொதுக்குழுவிற்குத் தெரியாமல் நீங்கள் செய்தது “ஒரு மாபெரும் மோசடியாகும்”.*
5. தடையை மீறி ஆர்ப்பாட்டம் தமிழ் அமைப்பினர் 50 பேர் கைது "என்கிறது. மற்றொரு செய்தி "தமிழ்ச் சங்கம் எதிரே மரக்கன்றுகள் வழங்கும் போராட்டம்- 17 பேர் கைது"
*பொய்களில் உங்களை மிஞ்சிவிட்டதாக நினைக்கிறீர்களா?* *வந்தவர்கள் 65 இங்கு கைதானவர்கள் 20 பேர் காவல்துறை நீங்கள் எல்லாம் வர வேண்டாம் என பலரை வண்டியில் ஏற்றவில்லை. அதனால் தனியாக அவரவர் வண்டியில் வந்து அங்கும் பலர் கைதானர்.*
6. கைதானவர்கள் 50 பேரா? 18 பேரா? 17 பேரா? ஆக இத்தனை விதமான பொய் புரட்டு நிறைந்த ஒரு *கோமாளி* கூடத்திற்குப் பத்திரிகைகள் துணைபோய் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
*இத்தனை நாட்களாக செய்தியையே போடாமல் பார்த்துக் கொண்டீர்கள். நிலைமை மாறிவருவதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உங்களை நாங்கள் ஒருபோதும் கோமாளி என்று சொல்லப் போவதில்லை! நாங்களும் அப்படிச் சொன்னால் உண்மையான கோமாளி யார் என்பது தெரியாமல் போய்விடும். கோமாளிகள் யார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்*
7. இது வன்முறையைத் தூண்டும் உள் நோக்கம் கொண்டது எனக் கருதி காவல்துறை தடைவிதிக்கிறது. தடையை மீறிப் போராடியது மட்டுமல்ல அதைச் செய்தியாக்கி அனைத்து பத்திரிகைகளிலும் பெரிய அளவிலான புகைப்படமும் செய்தியும் வெளிவர ஆவன செய்து இருக்கிறார்கள்.
*105 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்ச் சங்கத்தில் இன்று 904 பேர்கள் உறுப்பினர்கள் (ஆண்டு 2017) அதன் மூலம் உறுப்பினர் கட்டணமாக பெற்றது எட்டு லட்சம் ரூயாய். அந்த எங்கள் பணத்தை வைத்து வித விதமாய் “பத்திரிக்கைகளுக்கு போசு” கொடுத்த நீங்கள் இந்த ஒரு படத்திற்கே அரண்டு போகிறீர்களே ஏன்?*
8. அரசுப் பள்ளிகளில் பயிலும் நம் தமிழக் குழந்தைகளுக்கு அடிப்படை தழிழ் அறிவோ, ஆங்கில அறிவோ இல்லாமல் உயர்கல்வியை எட்டிப்பிடிக்க முடியாத அவலத்தைத் துடைக்க எத்தனை பேர் பங்களித்திருக்கிறார்கள்? இவர்கள் தத்தெடுத்துக் கொண்ட பள்ளிகள் எத்தனை?
*ஐயா உங்க முதுகுக்கு பின்னாடி திருப்பிப் பாருங்க! நீங்கள் இதுவரை செய்த சாதனைகள் என்ன என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். முகநூலில் உங்கள் பெயர் ஆங்கிலத்தில் தான் உள்ளது.*
9. பக்கத்து இருக்கையில் இருப்பவர்களாவது தமிழில் கையொப்பம் போட முன் வந்தது உண்டா? குடும்பத்தாரின் பெயர்களில் எத்தனை பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிப் பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார்கள்?
*தமிழ்ச் சங்கம் செய்யவேண்டிய தெல்லாம் செய்யாம மத்தவங்கள ஏன் செய்யல்லன்னு கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.*
10. திருவள்ளுவர் சிலை திறப்பு ஏற்பாட்டில் பெங்களூரு டில்லி போன்ற மாநகரங்களில் வெடித்த எதிர்ப்பும் அதனால் திருவள்ளுவர் சிலை சாக்கு உறைகளுக்குள் மூடிவைக்கப் பட்ட வேதனையும் தமிழ்கூறும் நல்லுலகம்
*தமிழ் மக்களே எதிர்க்கிறார்கள் என்றால் உங்கள் நிலை என்ன யோசியுங்கள். சிலை வைப்பவர் எப்படிப்பட்டவர்களாக இருப்பார் என்று பாருங்கள்!.*
11. இத்தனை எதிர்ப்பு, செலவையும் தாண்டி புதுவைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவரைக் கம்பீரமாக வீற்றிருக்கச் செய்த தலைவர் முத்துவிற்கும் சங்க நிர்வாகிகளுக்கும் முடிந்தால் ஒரு நன்றி செல்வோம்; *தவறு செய்தால் கண்டிப்பாகத் தட்டிக் கேட்போம்* தனிமனிதப் பகை, வெறுப்பு காழ்ப்புகளைப் புறந்தள்ளி விட்டுத் தமிழால் இணைவோம் தமிழுக்காக இணைவோம் வாருங்கள் நண்பர்களே!
*தவறு செய்தால் கண்டிப்பாகத் தட்டிக் கேட்போம் என வீர வசனம் பேசுகிறீர்கள்* *தட்டிக் கேட்போம் என்று நீங்கள் குறிப்பிட்டது "சால்ரா" தட்டுவதுத்தானே!* அதற்கு வாய்ப்பில்லை *நீங்க உண்மையிலேயே மானமுள்ளவராக இருந்தால் கீழ்க் கண்டவைகளைத் தட்டிக் கேட்டுவிட்டு எங்களுக்கு பதில் சொல்க:*
1. *வரவு செலவுக் கணக்கை ஆறு ஆண்டுகளாக தணிக்கை செய்யாதது ஏன்?*
2.*ஆண்டுதோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழுவை ஒருமுறை கூட கூட்டாதது ஏன்?*
3. *பொதுக் குழுவைக் கூட்டாமல், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமல் மாநாட்டை நட்த்தியது ஏன்?*
4. *பொதுக் குழு உறுப்பினர்களுக்கே பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பாதது ஏன்?*
5. *தமிழ் ஆர்வலர்கள் பலரை உறுப்பினராக சேர்க்க மறுத்து உங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே மீண்டும் மீண்டும் உறுப்பினர்களாகச் சேர்ப்பது ஏன்?*
6. *வரவு செலவு பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்?*
7. *ஏற்கனவே, புதுவைத் தமிழ்ச் சங்கம் நிதியை சரியாக பயன்படுத்தாத நிலையில் புதுச்சேரி அரசிடம் ரூபாய் ஐந்து இலட்சத்தை நிதியாக பெற்றது. அதற்கு எவ்விதமான வரவு செலவுக் கணக்குகளையும் உறுப்பினர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?.*
8. புதிதாக பல உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் உறுப்பினர்களில் பெரும்பான்மையோருக்கு தமிழ்ச் சங்கம் நடத்திய மாநாட்டிற்கும், சிலை திறப்பு நிகழ்ச்சிக்கும் அழைப்பே அனுப்பாதது ஏன்?*
9. *எங்கள் பணத்தில் மாநாடு நடத்தி எங்களையே அழைக்காத தமிழ்ச் சங்கம் யாருக்காக இந்த மாநாட்டை நடத்தியது என்று உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு தமிழ்ச் சங்கம் ஏன் இதுவரை பதிலளிக்கவில்லை?*
10. *இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவிடில் நீங்கள் உடனடியாகப் பதவி விலகத் தயாரா?*
இதுதான் பலரின் கேள்விகள்!!
"காசி.வில்லவன் அவர்கள் எழுதிய பதிவுக்கு இது பதில்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

செயலற்றத் தமிழ்ச் சங்கம் - பதிவர் அலுவலகம் தகவல்

புதுவைத் தமிழ்ச் சங்கம் செயல்படாத சங்கம் என இந்திய அரசின் பதிவுத்துறை அலுவலகம் பதில் அளித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

பதிவு சட்டப்படி வரவு செலவு கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்து அந்த அறிக்கையை பதிவர் சங்கத்தில் கொடுத்து ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக நிதித் தணிக்கை ஏதும் செய்யவில்லை. புதுவைத் தமிழ்ச் சங்கம் தனது உறுப்பினர்களுக்குக் கூட நிதி தொடர்பாக தகவலை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்பதோடு பொருளாளர் என்பவரை பெயரளவான நிர்வாகியாக மட்டுமே தமிழ்ச் சங்கம் வைத்துள்ளது. 

வரவு செலவினை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி முறைப்படியாக நிர்வகிக்க வேண்டும். ஆனால்  நிதியை முறைப்படி வங்கியில்  செலுத்து வதில்லை. இதனால், வரவு செலவில் பல முறைகேடுகள்  நடந்துவருவதாக பலர் புகார் கூறிவரும் நிலையிலும் கணக்கினை பொது வெளியில் வெளியிட தமிழ்ச் சங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 

தாமாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் ரூ 1000/-  வாழ்நாள் கட்டணமாக கட்டியே சேர்ந்தனர்.  

ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகம் சுமார் 500 பேர்களுக்கு தாங்களே உறுப்பினர் கட்டணம் செலுத்துவதாகக் கூறி தனக்கு வேண்டியவர்களை மட்டும் உறுப்பினர் களாகச் சேர்த்துக் கொண்டனர். இவர்களை வைத்தே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இப்படி உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்ட 500 பேர்களுக்கு தமிழ்ச் சங்க நிர்வாகம் பணம் கட்டியதாகவும் தெரியவில்லை. 

இதனிடையில், இந்த சங்கத்தினை செயலற்ற சங்கம் என பதிவுத் துறை கூறியுள்ளது.  இப்படியாக செயலற்ற சங்கத்திற்கு அரசு ரூ ஐந்து இலட்சம் தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு நிதியாக வழங்கியுள்ளது. ஏற்கனவே, முறையாக நிதியை கையாளாத, தணிக்கை செய்து அறிக்கை அளிக்காத தமிழ்ச் சங்கத்திற்கு அரசு நிதி அளித்ததை சமூக அமைப்புகள் பல கண்டித்துள்ளன. 



வெள்ளி, 10 ஜனவரி, 2020

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக் கொண்டே இருங்கள்...


புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் வரவு செலவுக் கணக்குகளைக் காட்டவில்லை. முறைப்படியாக சங்கம் நடத்தப்படவில்லை. பொதுவெளியில் பலர் இதுபற்றி பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால், இதுவரை எந்தவித பதிலையும் தமிழ்ச் சங்கம் அளிக்கவில்லை. அதனால் தமிழ் மக்களே நீங்களும் கேளுங்கள். ஏன் வரவு செலவுக் கணக்கை காட்ட மறுக்கிறார்கள்.


வெள்ளி, 3 ஜனவரி, 2020

மரம் வெட்டிச் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பதிவு ரத்தான அமைப்பு விருது தரலாமா? கவிஞர் பாரதிதாசன் பேரன் கோ.செல்வம் கேள்வி

நண்பர்களே. வணக்கம் தமிழ்ச் சங்கம் தொடர்பாக நான் எழுப்பிய வினாக்களுக்கு பலர் இன்று பதில் அனுப்பி வருகின்றனர்.
இந்த பிரச்னை பற்றிய கேட்கும் கேள்வி மற்றும் ஐய்யங்களுக்கு யாரேனும் விடை தாருங்கள் அய்யா, அம்மா,🙏🙏🙏🙏🙏

மரம் வெட்டிகளின் கூட்டம் இது.
தமிழ்ச்சங்கத்தின் 5 ஆண்டுகள் கணக்கு எங்கே ? சொல்லுங்கள்.
பதிவு ரத்தான அமைப்பு கூட்டம் போடுவதும் , விருது தரலாமா.
அதை தமிழா நீ எப்படி  பெறலாம்🤔🤔🤔🤔🤔🤔🤔
  1. செயல் படாத அமைப்பு மரம் வெட்டலாமா?
  2.  மரம் வெட்ட டெண்டர் கோரப் பட்டதா?.
  3. மரம் வெட்டபடும் என அறிவிப்பு செய்ப்படதா?
  4. தமிழ்ச்சங்க அரங்கம் காமராஜ் அரசு நூல் நிலையம் அல்லவா, அதன் பெயர் பலகை  எங்கே?
  5. மரம் வெட்டப்பட்ட காரணம் அங்கு ஐய்யன் சிலை அங்கு வருகிறதாம்,  வள்ளுவர் சிலை அரசு பேருந்து நிலையத்தில் உள்ளது, தமிழ்ச்சங்கம் உயிர்ப்புடன் இருக்க பாடுபட்ட திருமிகு சிவ.கண்ணப்பா சிலை அங்கு  வைக்க வேண்டும்.
  6. மரத்தை வெட்டாமல் சிலை வைக்கலாம், மரம் இருக்க சென்னை அண்ணா நூலகம் முத்தமிழ் அறிஞர் அவர்களால் கட்டபட்டு இன்றும் உள்ளது. எனவே நிழல் தரும் மரம் வெட்டபட்டு உள்ளதற்க்கு வனத்துறை அனுமதி உண்டா ?
  7. இவர்கள் தரும் பாராட்டும், பரிசும், விருதுகளுக்கு நாம் வேண்டியபடி ஆடவேண்டுமா.
  8. இப்போது உள்ள தமிழ்ச்சங்க  ஆட்சி மன்றக் குழுவை கலைத்து விட்டு உறுப்பினர்கள் பட்டியலை சட்டப் படி சரி பார்க்க , முறைப்படி நிர்வாகம் செய்ய தமிழக நீதிபதிகள் அடங்கிய  ஒரு குழுவை புதுவை அரசோ நடுவண் அரசோ உடனே நியமித்து உறுப்பினர்களிடம்  ஆய்வு செய்து தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளையும் கருத்தில் கொண்டு தமிழ்ச் சங்கம் காப்போம்.
இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் யாரோடும் தனிப்பட்ட பகை எமக்கு இல்லை.

இது தொடர்பாக உள்ள பிரச்னை பற்றி இந்த நீதிபதிகள் கூட்டும்   ஆண்டுப் பொதுக்குழுவில் விளக்கம் தரட்டும்.

அலைகள் ஓய்வதில்லை.

நன்றி

கவிஞர் புதுவை கோ செல்வம்
பாவேந்தர் பாரதிதாசன் பேரன் மற்றும்
புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் 
சென்னை 26.
27.12.19.