இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

குடும்ப சொத்தாகும் புதுவைத் தமிழ்ச் சங்கம்

புதுச்சேரி தமிழ்ச் சஙகம் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்கான சங்கம் என்று நீங்கள் கருதினால் அது மிகவும் தவறான கருத்தாகும்.

சிலர் கூற்றுப்படி அது ஒரு சாதிச் சங்கம் போல் செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டுமானால் அந்த குறிப்பிட்ட சாதியாக இருக்க வேண்டும் என்ற நிலை  புதுச்சேரியின் அவலமாகும்.



தமிழுக்கு தொடர்பு இல்லாதவர்களைக் கூட சாதி அடிப்படையில் அவர்களிடம் உறுப்பினர் கட்டணம் கூட வாங்காமல் இப்போது பொறுப்பில் இருப்பவர்களே அந்த தொகையை செலுத்து உறுப்பினர்களாக சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் பல தமிழ் அறிஞர்கள் பிற சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தமிழ்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை.  

இந்த வார இதழில் வந்துள்ள செய்தியை படியுங்கள். பல செய்திகள் வெளிவரும்,

தமிழ்ச் சங்கத்தில் தலைவராக இருந்த முத்து அவர்கள்  ஒரு செல்வந்தர் எனவே, வெளி நாட்டில் உள்ள தமிழர்களுக்கு நிதி அளித்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தமக்கு விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வாராம். அது போலத்தான் பல நாடுகளில் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டதாக சிலர் என்னிடம் தெரிவித்தனர்.





தமிழர்களையே உறுப்பினராக்க மறுத்த தமிழ்ச்சங்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை  உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியது புதுச்சேரியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

- பாண்டி வாய்சு
#புதுவைத்தமிழ்ச்சங்கம்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து முன்று சுவரொட்டிகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதின்  முதலாவதாக இருப்பது  புதுச்சேரி சமூக சனநாயக இயக்கங்கள் மூலம் ஒட்டப்பட்டச் சுவரொட்டி



புதுச்சேரியில் தமிழ்ச் சங்கத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்தல் நடத்தப்படுகிறது. இதை அறிந்த புதுவையின் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஒருங்கிணைந்த அமைப்பான சமூக சனநாயக இயக்கங்கள் தமிழ்ச் சங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

புதுவை ஊழல் தேர்தல் பற்றிய செய்திகள்

புதுவைத் தமிழ்ச் சஙகத்தில் தேர்தல் எப்படி நடந்தது என்பது பற்றிய செய்திகளை இந்த இதழ் வெளியிட்டுள்ளது. 

தமிழ் உணர்வாளர்களைக் கொண்டு நடத்த வேண்டிய தேர்தல்  அரசியல் கட்சிகளின் தேர்தலைப் போல சீர்கெட்டு நடந்தது கசப்பான உணர்வை ஏற்படுத்தியது.


திங்கள், 20 பிப்ரவரி, 2017

சனி, 18 பிப்ரவரி, 2017

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலை திரும்ப நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் தமிழ் இந்துவில் செய்தி

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலை திரும்ப நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் தமிழ் இந்துவில் செய்தி.

#புதுவைத்தமிழ்ச்சங்கம்


தேர்தலை மீண்டும் நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் தினகரன் செய்தி


புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் தேர்தலை  மீண்டும் நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் தினகரன் செய்தி


தேர்தல் மோசடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

#கொஞ்சம் #சிந்திப்பீர்!

புத்ச்சேரியில் உள்ள ஒருசிறிய தமிழ்ச்சங்கம் அதன் தலைவருக்கும் செயலருக்கும் இரண்டுமுறை பதவியில் ( 6 ஆண்டுகள்) இருந்த பிறகும்கூட பதவி ஆசை போகவில்லை, 
பதவி ஆசை பதவி வெறியாக மாறியுள்ளது, அதனால் தனக்கு மட்டுமே ஓட்டளிக்கக் கூடிய தகுதியற்ற 400 பேரை இகரசியமாக உறுப்பினராக்கி பல தில்லுமுல்லுகளோடு தேர்தலை நடத்தி பதவி நாற்காலியைப் பிடித்துள்ளனர்.



இந்தத் தேர்தல் ஒரு மோசமான கேலிக்கூத்து. புதுச்சேரியின் ஒட்டுமொத்தத் தமிழறிஞர்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பதவியை வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்,
தலைவரும் செயலரும் கொஞ்சம் மனசாட்சியோடு யோசிக்க வேண்டும்.
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் விலைகொடுத்து வாங்கிவிட முடியாது. அப்படி வாங்கும் வெற்றியும் நிலைக்காது.


- வேதனையோடு 
முனைவர் நா.இளங்கோ.

ஊடகச் செய்தி:
#புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் கடந்த 12.2.2017 ஆட்சி குழுவிற்கான தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது .இரவு 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பாதியிலே நிறுத்தப்பட்டு எதிரணி வேட்பாளர்கள் கட்டாயப்ப தித்தி வெளியேற்ற பட்டனர். எதிரணி வேட்பாளர்கள் வாங்கு எண்ணிக்கை நிறுத்தத்தை எதிர்த்தனர், வெளியேற மறுத்தனர்.

ஆனாலும் கட்டாயமாக தேர்தல் ஆணையர்கள் சேதுமுருகபூபதி, முரளிதரன் ஆகியோர்களால் வெளியேற்றப்பட்டு ஒருதலைப் பட்சமாக தேர்தல் முடிவுகள் மோசடியாக அறிவிக்கப்பட்டது .

புதுச்சேரி அரசு மோசடி தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, தேர்தல் ஆணையர்கள் மீது விசாரணை நடத்தி திருத்தப்பட்ட புதிய வாக்களர் பட்டியல் வெளியிட்டு நியாயமாக தேர்தலை நேர்மையான அதிகாரிகளை கொண்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என புதுச்சேரி அரசை #தமிழ் பாதுகாப்பு குழு இன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் மூலம் கேட்டுக்கொள்கிறது.

இவண்:
இரா. அழகிரி (ஒருங்கிணைப்பாளர்)
9442085540.


தமிழ்ச் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தக் கோரி ஆர்ப்பட்டம்

தமிழ்ச் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்தக்கோரி தமிழ் பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தக் கோரிக்கை தினத்தந்தி செய்தி

புதுச்சேரி  பதிவு: பிப்ரவரி 18,  2017 04:15 AM மாற்றம்: பிப்ரவரி 18,  2017 04:17 AM
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் வி.முத்து தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றனர்.
இந்தநிலையில் தமிழ்ச்சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் தமிழ் பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கைகளுக்காக அண்ணா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகநாதன், பாரதிதாசனின் பேரன் பாரதி, தமிழர் களம் அழகர், லோக்ஜன சக்தி தலைவர் புரட்சிவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.





தினமணி செய்தி மறுதேர்தல் நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்


வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

தமிழ்ச் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இடைவிடாத போராட்டம்

இரா. சுகுமாரன் Cm Puratchi Venthan உடன்.
புதுவைத் தமிழ்ச் சங்க தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இடைவிடாத போராட்டம் நடத்தப்படுகிறது.

ஆனால் எதுவுமே நடக்காதது போல் மௌனம் காக்கிறார்கள் தமிழ்ச் சங்கப் போலி நிர்வாகிகள்.
தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் அறிவித்து விட்டதால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தலுக்கு தடை விதிக்க இயலாது என புதுச்சேரி நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தேர்தல் முடிந்த்து ஆனால் இவர்கள் பதவி ஏற்பது கேள்விக்குறியாக உள்ளது. வழக்கு ............ நீதிமன்றத்தில்..... மேலும் விரிவாக பேச வேண்டாம். விரைவில் பதில் கிடைக்கலாம்.

அழகிரி தேர்தல் முறைகேட்டை கண்டித்து ஊடகச் செய்தியாளர் சந்திப்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து தேர்தலில் பங்கேற்ற தமிழ்ச்சங்க பாதுகாப்பு அணி, தமிழ்ச் சங்க முன்னேற்ற அணி இரண்டும் சேர்ந்து தேர்தல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பட்டம் செய்தனர். இதில் இரா.அழகிரி, அமுதவேந்தன், முருகேசன், புரட்சி வேந்தன் சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



பா.முருகேசன் தேர்தல் முறைகேட்டை கண்டித்து


வியாழன், 16 பிப்ரவரி, 2017

சர்ச்சையில் தமிழ்ச் சங்கத் தேர்தல் பாண்டி வாய்சு சுவரொட்டி


தமிழ்ச் சங்க முறைகேடுகள் பாண்டி வாய்சு இதழ் செய்தி

தமிழ்ச் சங்க முறைகேடுகள் பாண்டி வாய்சு இதழ் செய்தி

  • முறைகேடு..... 
  • தமிழ்ச்சங்க தேர்தலில் விதிமீறல்
  • பணம், சரக்கு சப்ளை!





செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மதுவிருந்து புதுவைத் தமிழ்ச் சங்கம்

புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் எப்படி வெற்றி பெற்றார்கள் ஒரு நண்பர் பதிவு செய்திருக்கிறார் பாருங்கள்.

மது கொடுத்தது, பிரியாணி, மீன் குழம்பு சேறு, ரூ 2000/- பணம், ரூ1500 மதிப்புள்ள பரிசுப் பொருள், குறிப்பிட்ட சாதியினரை உறுப்பினர்களாக்கியது.

எவரெல்லாம் கேள்வி கேட்காதவர்களோ அவர்களை காசு கொடுத்து தமிழ்ச் சங்கத்தில் வாக்களிக்க உறுப்பினர்கள் ஆக்கியது உள்ளிட்ட ஏராளமான புகார்களிடையே உங்கள் வெற்றியை கொண்டாட என்ன இருக்கிறது.

#புதுவைத்தமிழ்ச்சங்கம்

சனி, 11 பிப்ரவரி, 2017

மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள் மாமியார்

மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள்  மாமியார் உறவினர்கள் என எல்லோரையும் எல்லோரையும் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
கேள்வி கேட்டு பற்றி புதுவையில் சுவரொட்டி!!

திங்கள், 6 பிப்ரவரி, 2017

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலைக் கண்டித்து சுவரொட்டி-2

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக தமக்கு தெரிந்த மிகவும் வேண்டியவர்களை மட்டும் உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளனர். இதன்