slide

slide2
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு ...!
slide2
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு ...!
slide3
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
slide4
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
தமிழ்ப் பாதுகாப்புக்குக் குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் பாதுகாப்புக்குக் குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கூகுல் தேடலில் தமிழ்ச் சங்க ஊழல் படங்களை காட்டலில் முன்னேற்றம்

தமிழ் மொழியை விட சமக்கிருத மொழி பழைமையானது எனத் தமிழக அரசின் ஆங்கிலப் பாடநூலில் குறிப்பிட்டது குறித்தோ அல்லது 10, 12 வகுப்பில் மொழிப்பாடமாகத் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு  செய்தால்  போதும்  எனத் தமிழக அரசு அறிவித்த  போதும் அது குறித்துப் புதுவைத் தமிழ்ச் சங்கம் ஏதேனும் கண்டனங்களைத் தெரிவித்தார்களா? என்று இன்று நான் இணையத்தில் தேடினேன். 

ஆனால், என் கண்ணுக்கு ஒன்றும் தென்படவில்லை. இன்று புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று படங்களில் தேடியபோது மொத்தமுள்ள பதினொரு (11) படங்களில் ஒன்பது (9) படங்கள் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகள் குறித்த படங்கள் தான் வந்தது முன்பு தேடியபோது 15 படங்களில் 6 படங்கள் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேடு குறித்து வந்த நிலையில் இன்று 11 ப்டத்திற்கு 9 படங்கள் முறைகேடு குறித்து முன்னேற்றம் கண்டுள்ளதைக் கவனித்தேன். இந்த இணைப்பை கிளிக் செய்து நீங்களும் பாருங்களேன் புதுவைத் தமிழ்ச் சங்கம்



சனி, 9 பிப்ரவரி, 2019

தமிழ்சங்க பொன் விழா மாநாட்டை புறக்கணிக்கக் கோரிக்கை

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சியை தமிழர்கள் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

புதுவைத் தமிழ்ச் சங்கம் "பிரைவேட் லிமிட்டெட்"  உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பொன் விழா நடத்த ஏற்பாடு செயதுள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுக்குழுவைக் கூட்டாமல் இருப்பது வரவு செலவுக் கணக்கை காட்டாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற போலியாக உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்காக உறுப்பினர்கள் கட்டணத்தை தாமே செலுத்துவதாக கூறி உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டனர். அந்த தொகை செலுத்தப்பட்டதா தெரியவில்லை.

முகநூல் பதிவில்

ஒரு விழா வைத்தால் எல்லா கணக்கையும் சரி செய்துவிடலாம். எல்லாவற்றையும் செலவுக் கணக்கில் காட்டவே விழா ஏற்பாடு நடக்கிறது.

இதை இல்லை என்று மறுத்தால் முதலில்  பொதுக் குழு கூட்டி முறைப்படி ஒப்புதல் பெற வேண்டியது தானே!!

இது போன்ற மோசடிகளை மூடி மறைக்கவே அரசில் தலைவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.

எனவே, இந்த விழாவை அனைவரும் புறக்கணிப்பு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

#புதுவைத்தமிழ்ச்சங்கம்


வெள்ளி, 14 நவம்பர், 2014

இரா.அழகிரி வெ.முத்து சந்திப்பு

புதுவைத் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்ய இருப்பதாக அதன் தலைவர் திரு முத்து அவர்கள் தெரிவித்ததாக புதுவைத் தமிழ்பாதுகாப்புக் குழு தலைவர் திரு அழகிரி தெரிவித்தார்.





தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்ன பதில் சொல்வார் என்பதை முன்னமே அறிவோம். காலம் கடத்துவது அவரது முடிவாகும் ஏற்கனவே ஒரு மாதகாலம் ஆன நிலையில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார். அதோடு  இல்லாமல் மேலும் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அழகிரி தெரிவித்தார்.

பத்து நாள் என்பதை மேலும் நீட்டித்து, பின்னர் அவர் சொல்ல இருக்கும் பதில் " பொதுக்குழுவில் இப்போது உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது" என கூறுவார் என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் கடந்த கால அனுபவம் அப்படித்தான் உள்ளது.
எனவே. நாங்கள் சென்ற வாரத்திற்கு முன் எடுத்த முடிவின் படி நகரம் முழுவதும் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து முதல்கட்டமாக சுவரொட்டி ஒட்டுவது என முடிவெடுத்தபடி எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறும்.

சென்ற வாரம் "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" அமைக்கப்பட்ட பின்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்களை சந்தித்து விருப்பமுள்ளவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

எனவே, இன்று காலை "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" வின் தலைவர் திரு. இரா.அழகிரி அவர்களிடம்  தமிழ்ச் சங்கத்தின் தலைவரை இக்குழு  சந்திப்பதற்கான நேரத்தை தொலை பேசி மூலம் பேசி உறுதிப்படுத்தும்படி  கேட்டிருந்தேன்.

இரண்டு முறை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்கள் தொலை பேசி அழைப்பை ஏற்கவில்லை. எனவே, குழு சந்திப்பதற்கான நாள் மற்றும் நேரம் உறுதிப்படுத்த வேண்டி நேரில் நானும் (இரா.சுகுமாரன்) திரு அழகிரி அவர்களும் திரு. முத்து அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தோம்.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுவில் முடிவெடுத்து தெரிவிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். 

அதுவரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படின் இக்குழு சந்திப்பதா அல்லது மேல் நடவடிக்கை மேற்கொள்வதா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும்

சனி, 16 ஆகஸ்ட், 2014

தமிழ்ப் பாதுகாப்புக் குழு தொடக்கம்


தமிழ் வளர்த்தெடுத்து என்றும் பெருமை கொண்டது புதுவை. பாரதிதாசன் உறுப்பினராக இருந்த புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கோருபவர்களைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகளைச் சேர்த்துக் கொள்வதில்லை. தமிழ் ஆர்வலர்களையும் அறிஞர்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்ற 16-08-2014 அன்று "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு இவ்வமைப்பின் மூலம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை பலமுறை தொடர்பு கொண்டு உறுப்பினர்களாக விரும்புகிறவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை நேரிலும் எழுத்து மூலமும் கேட்டுக் கொண்டும் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். பொதுக்குழுவை அடுத்த ஆண்டு (2014) பிப்ரவரி மாதம் கூட்டி உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது பற்றி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டி உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உறுப்பினர்கள் சேர்க்கை செய்வதற்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், தமிழ்ச்சங்கத்தின் விதிமுறையில் இல்லை. எனவே, புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் சொல்லும் பொய்யான காரணம் தான் பிப்ரவரி மாதம் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பதாகும். போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் அதனை தொடர்ந்து திசைத் திருப்பும் வகையிலும். காலம் கடத்தும் வகையிலும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் என இப்போது தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சென்ற முறை இவர்கள் பொறுப்பில் இருந்த போதிலிருந்தே அவர்கள் இப்படித்தான் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே, இந்தப் பொய்யான காரணங்களை நம்பிக் கொண்டு பொதுக்குழு கூட்டும் வரை காத்திருந்து அவர்கள் அடுத்து சொல்ல இருக்கும் வேறு காரணங்களுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்த "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" புதுவையில் உள்ள பல்வேறு அமைப்புகளை அழைத்து ஒரு கண்டனக் கூட்டம் நடத்துவது எனத் தீர்மானித்துள்ளது.

சென்ற முறை 2010 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் இச்சங்கத்தின் ஆட்சி மன்றக் குழுவிற்கு தேர்தல் நடந்தது. ஆட்சி மன்றக் குழுவின் பதவி காலம் மூன்றாண்டுகளாகும். அதாவது 17.10.2013 ஆம் நாளோடு பொறுப்பு முடிந்து தேர்தல் வைக்க வேண்டும். ஆனால், தங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பு முன் தேதியிட்டு மொத்தம் வாழ் நாள் உறுப்பினர்கள் 155 பேரில் மேற்குறிப்பிட்ட 55 பேர் முறைகேடாக  சேர்க்கப்பட்டு கடந்த 21-03-2014 அன்று தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்ச் சங்க விதிப்படி ஆண்டுதோறும் மே/ஜூன் திங்களில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். கடந்த முறை மூன்றாண்டு பொறுப்பில் இருந்தவர்கள் ஒரே ஒரு முறை கூட பொதுக் குழுவைக் கூட்டவில்லை!

ஆண்டு தோறும் சங்கத்தின் வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்து சங்க உறுப்பினர்களுக்கு சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்கிறது சங்க விதி .ஆனால் ஒரு முறை கூட சங்க கணக்குகள் உறுப்பினர்களுக்கு காட்டப்படவில்லை!. பல  உறுப்பினர்கள் கடிதம் அளித்தும் எதையும் செவிசாய்க்காமல் மதிப்பு அளிக்காமல் தாங்கள் எப்படியாவது பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் முறையற்ற செயல்களில்  ஈடுபடுகிற்றனர்.

     உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுமானால் பொதுக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தமிழ்ச் சங்க பதிவு விதி ஏதும் சொல்லவில்லை. சாதி இன வேறு பாடு இன்றி யார் வேண்டுமனாலும் உறுப்பினராக சேரலாம் என தமிழ்ச் சங்கம் விதி எண்’ 3. அ பிரிவு (Eligibility: All persons irrespective of their caste cread or register or nationality are eligible for membership.) என்று உறுப்பினர் சேர்க்கைக்கான விதி சொல்கிறது. அதே விதியின் அடிப்படையில் தான் தமது பதவிக்காலம் முடிந்த பின்பு 55 பேரை முறைகேடாக தமிழ்ச் சங்க உறுப்பினர்களாகச் தமக்கு வேண்டியவர்களைச் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாகச் சேர்த்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அப்போது உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்ட 55 பேருக்கும் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி தமிழ்ச் சங்கத்தின் தலைவரே உறுப்பினர்க் கட்டணத்தை செலுத்தி உள்ளதாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

இது போல பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால்  சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடத்திய “உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)” புதுவைத் தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று  மாநாட்டுக் குழுவிலிருந்து தமிழ்ச் சங்கத்தை விலக்கிவிட்டு மாநாட்டை புதுவையில் நடத்தியது.

தமிழ்ச் சங்கம் முறைகேடாக  செயல்பாடுகளால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை முறைகேடுகள் உள்ள தமிழ்ச் சங்கத்தை தமிழர்கள் பாதுகாக்க வேண்டுமெனில் அனைவரும் ஒன்றினைந்து போராடி வெற்றி பெறச் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.

புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக்குழு

உறுப்பினர்கள் சேர்க்கை : கலந்தாலோசனைக் கூட்டம்


புதுச்சேரி தமிழ்ச் சங்கம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு மறுத்து வரும் நிலையில் தமிழ் அறிஞர்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சேர்க்கை செய்யக் கோரி தமிழார்வலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது




வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

உறுப்பினர் சேர்க்கைக்கான குழு ஆலோசனை


  "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" சுவரொட்டி ஒட்டுவதற்கு முன்பாக அதனைத் திட்டமிட்டுக் காலம் கடத்தும் நோக்கில் ஒரு வார காலத்தில் முடிவைச் சொல்கிறோம் என்று மூன்று முறை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினர்.

 ஆனால், நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டிமுடிவு செய்வது என முடிவெடுக்க இருப்பதாக ஒரு காரணத்தைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தாகத் தெரிகிறது.

 தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டியா சேர்த்துக் கொண்டார்கள். இல்லையே, எனவே, சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் சொல்லும் பொய்யான காரணம் தான் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பது.

  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து புதுவையில் சில இடங்களில் காணப்படும் சுவரொட்டி இது. இரண்டு மாத காலம் அவர்களின் பதிலுக்கு காத்திருந்து பின்னர் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். பிரச்சினைகள் தொடங்கிய பின் நாங்களாக முன்வந்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் அதை கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்வது நல்லதல்ல.