இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 13 டிசம்பர், 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு எதிராக நாங்கள் ஏன் போராடுகிறோம் ?

 சேரல்:

அனைத்து உறுப்பினர்கள் 

புதுவைத் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி

 

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்ப் பணியாற்றுவதில் தமிழகத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத பெருமையும், வரலாறும், சிறப்பும் கொண்டது புதுச்சேரி. தமிழ்ப் பணியாற்றுவதில் தமிழகத்திற்கு முன்னோடியாகவும் புதுச்சேரி பலவற்றில் இருந்தது. அத்தகைய பெருமையைக் கட்டிக் காப்பதற்கு பதிலாக, புதுச்சேரி தமிழ்ச் சங்கம் நிதி முறைகேடு, முறையாக சங்கத்தை நிர்வகிக்காதது உள்ளிட்ட பல புகார்களின் காரணமாக புதுவைத் தமிழ்ப் பொருமக்களின் நற்பெயருக்கு கேடு உண்டாக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. அவற்றில் சிலவற்றை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

1.புதுவைத் தமிழ்ச் சங்கம் கடந்த 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு ஒருமுறைகூட கூட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே/சூன் மாதங்களில் பொதுக்குழு கூட்டப்படும் என தமிழ்ச் சங்க விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச் சங்கத்தின் கணக்குகள் தகுதியான தணிக்கையாளரைக் கொண்டு தணிக்கை செய்யப்பட வேண்டும் என தமிழ்ச் சங்கம் விதி உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அவை சங்கப் பதிவருக்குக் கொடுக்கப்படிருக்க வேண்டும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

3.  இவ்வாறு கணக்குகளை தணிக்கை செய்து பதிவர் சங்கத்தில் அளிக்காமல் போனதால் இந்த சங்கம் சட்டப்படி செயலற்ற சங்கம் என சங்கங்களின் பதிவாளார் தகவல் உரிமைச் சட்டப்படி பதிலளித்துள்ளார்.

4. தமிழ்ச் சங்க நிர்வாகம் நிதி தொடர்பாக சரியான நடைமுறைகளை கொண்டிருக்கவில்லை என்பதை தொடர்ச்சியாக பலர் பலமுறை சுட்டிக் காட்டிய போதும் அது பற்றி தமிழ்ச் சங்க நிர்வாக எந்தவிதமாக முறையான பதிலையும் வழங்கியதில்லை. மாறாக சுட்டிக் காட்டுபவர்களை ஏதோ காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் தகவல் அளிப்பதாக அவர்கள் பரப்புரை செய்கிறார்களே தவிர தாங்கள் நேர்மையாக இருப்பதாக சொல்லும் அவர்கள் அதனை ஒரு போதும் நிருப்பிக்க தயாராக இல்லை.

5.   குறிப்பாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கி, மின்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கி, குடிநீர்க்கட்டணம் ஆகியவை முறையாக செலுத்தி தமிழ்ச் சங்கத்தை ஒழுங்காக நிர்வகிக்கவில்லை.

6. ஏற்கனவே, புதுவைத் தமிழ்ச் சங்கம் நிதியை சரியாக பயன்படுத்தாத நிலையில் புதுச்சேரி அரசிடம் ரூபாய் ஐந்து இலட்சத்தை நிதியாக பெற்றது. அதற்கு எவ்விதமான வரவு செலவுக் கணக்குகளையும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை.

7. புதிதாக பல உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் உறுப்பினர்களில் பெரும்பான்மையோருக்கு தமிழ்ச் சங்கம் நடத்திய மாநாட்டிற்கு அழைப்பே அனுப்பவில்லை. உறுப்பினர்கள் கட்டணத்தில் நடத்திய மாநாட்டிற்கு உறுப்பினர்களுக்கே அழைப்பு அனுப்பாத  தமிழ்ச் சங்கம் இது.

8.  எங்கள் பணத்தில் மாநாடு நடத்தி எங்களையே அழைக்காத தமிழ்ச் சங்கம் யாருக்காக இந்த மாநாட்டை நடத்தியது என்று உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு தமிழ்ச் சங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.

 

நிலைமை இவ்வாறு இருக்க சங்க நிர்வாகிகள் இது போன்ற முறையற்ற செயல்களை மறைப்பதற்காக பலரை சந்தித்து விருதுகளை வழங்கி சமாதானம் செய்து வருவதை நாம் அறிகிறோம். பல அறிவிற் சிறந்த பெருமக்கள் இது போன்ற சிறிய விருதுகளுக்காக தங்களைச் சமாதானம் செய்து கொள்வதும், பல தவறான செயல்களை கண்டு கொள்ளாமல் போவதும், அதனோடு சிலர் ஆதரித்து செயல்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கும் செயலாக உள்ளது

புதுவைத் தமிழ்ச் சங்கம் கடந்த 2013 ஆண்டு அளவில் சுமார் 105 பேர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. புதுவையின் பல தமிழ் உணர்வாளர்கள் தமிழறிஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. புதுவையின் சாக்கித்திய அகாதமி விருதாளரும் தமிழறிஞருமான பிரபஞ்சன் உள்ளிட்டவர்களைக் கூட இந்தத் தமிழ்ச் சங்கம் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. தமிழறிஞர்கள் இல்லாத தமிழ்ச் சங்கம் என பலர் தெரிவித்த எதிர்ப்பின் விளைவாகவே பிரபஞ்சன், தமிழறிஞர் தங்கப்பா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்

மேலும் பல தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும், போராடித்தான் தங்களை தமிழ்ச் சங்க உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பல கட்ட தொடர்ப் போராட்டத்தின் பின்பு தான் தமிழ் உணர்வாளர்களும், அறிஞர்கள் பலரும் உறுப்பினர்களாக சேர அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இதற்கு முன்பாக தமிழுக்காக எவ்விதமான செயல்பாட்டிலும் கலந்து கொள்ளாத பலரை புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாகச் சேர்த்தனர்

இதன் காரணமாக தமிழ்ச் சங்கம் ஒரு குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைத் தவிர வேறு எந்த உண்மையான தமிழ் அறிஞர்கள் யாரும் அந்தத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகியாக வருவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலை உள்ளது.  

ஒரு வேளை வர வேண்டுமானால், புகழ்பாடி அடிமையாக இருந்தால் தவிர வேறு வாய்ப்பே இல்லை.

முறத்தால் புலியை விரட்டிய வீரத்தமிழ்த்தாய் என புறநானூற்று பெருமை பேசிவிட்டு, அடிமையாய் நின்று வெல்வது தமிழுக்கும் தமிழனின் மானஉணர்ச்சிக்கும் கேடானது

 

வியாழன், 12 டிசம்பர், 2019

பாவேந்தர் பாரதிதாசன் பேரன் கோ செல்வம் புதுவைத் தமிழ்ச் சங்கம் மீது புகார்

புலனத்தில் வந்த செய்தி அப்படியே அளிக்கப்பட்டுள்ளது.


வணக்கம் நண்பர்களே!

மற்றும் திரு.திருநாவுக்கரசு புதுவைத் தமிழ்ச் சங்க பொருளாளர் அவர்களே.

நேற்று  பெயர், ஊர், பொறுப்பு எதுவும் இல்லாத முகநூல் பதிவு ஒன்றை எனக்கு அஞ்சல் (forward) செய்து இருந்தீர்கள்.

நான் அது குறித்து கட் செவி வழி பிறகு பேசுகிறேன் என்றேன் 

 1). உங்கள் பதிவில் பாவேந்தர் பந்தங்கள் பற்றிய ஒரு விமர்சனம் கண்டேன்.  இதுகுறித்து  மேலும் *விளக்கம்* வேண்டும்.

2). இந்த  முக நூல்  நீங்கள் பதிவை நீங்கள் forward அஞ்சல் வழி செல் பேசியில் அனுப்பும் போது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகள், விமர்சனங்கள், தக்க முறையில் நகல்கள், இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

3) தற்போது புதுவைத் தமிழ்ச் சங்கம், மாதக் கூட்டம் நடத்தும் ஒரு சாதாரண அமைப்பாக மட்டுமே  இல்லாமல், தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய ஒரு களமாக அமைய வேண்டும் 

4) ஆண்டுதோறும் அமைப்பின் தணிக்கை செய்யப்பட்ட சான்று பெற்ற கணக்கு வெளியிடப்பட வேண்டும் .

5) ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வேண்டும்.

6) பள்ளி, கல்லூரிகளில் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய பணிகள் நடைபெற வேண்டும்.

7) தமிழ் மொழி மற்றும், நம் இனத்துக்கு ,நம் தமிழ் அறிஞர்களுக்கு  எதிராக செய்யப்படும், அறிவிக்கப்படும் திட்டங்கள், கருத்துக்கு எதிராக புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து பிற அமைப்புகளை இணைத்து போராட வேண்டும்.

8) தெரு கூத்து கலைஞர் திரு கோனரியார் மறைவால் ஆட்சி மன்றக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும்.

9) தமிழ்ச் சங்கம் தனிமனித துதி பாடும் அமைப்பு அல்ல.

10 )எங்கள் தந்தையால் அடையாளம் காட்டப்பட்டவர் தற்போதய தலைவர் கலை மாமணி முனைவர் முத்து ஐய்யா அவர்கள். அவர் செயல் பாடுகள் பாராட்டுக்கு உரியது அதில் ஐயம் ஏதும் இல்லை.

11) அதிகார பூர்வ, அங்கீகாரம் பெற்ற  வாக்காளர் பட்டியல் / உறுப்பினர்கள் பட்டியல் முழு விரங்களுடன்  விரைவில் வெளியிட வேண்டும்.

12) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாக வெளியாகி உள்ள தகவல் உண்மையா அதன் தன்மை குறித்த ஆட்சிகுழுவின் நிலைபாடு என்ன என தெரிவிக்க வேண்டுகிறேன்.

13). மேலும் சங்கக் கட்டடம் விரிவாக்கம் செய்ய வேண்டும். பழுது நீக்கம் செய்ய வேண்டும்.

14) சங்கத்தின் பணியாளர்கள் ஊதியம், நிர்வாக செலவுகள்  சங்க நிதியம் மூலமே தரப்பட வேண்டும்.

15) உறுப்பினர்களில் மூத்த தமிழ் அறிஞர்கள் கொண்ட வழி காட்டல் குழு அமைக்க வேண்டும்.

16 ) அடுத்த ஆண்டு பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெறுமா? 

நான் மேலே சொன்ன கருத்துக்கள் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர், 1967 முதல் அதனுடன் தொடர்பு உடையவன், அதற்கு கட்டிடம் கட்ட பாடுபட்ட தமிழ் மாமணி மன்னர் மன்னன் மகன், கலை மாமணி புதுவை கோ.பாரதி அண்ணன்,

பல ஆண்டுகள் தமிழ்ச் சங்க மனைக்கு வேலி போட்டுக் காத்தவர்களில் நானும் ஒருவன், பாவேந்தர் பாரதிதாசன் பேரன், மண்ணின் மைந்தன், இப்படி பல உரிமைகளில் இவற்றைக் கேட்கிறேன்

உங்கள் விளக்கம் வேண்டும்.

வேண்டும் எனில் பதிவுத் அஞ்சலில் இதனை அனுப்பி வைக்கிறேன்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கவிஞர் புதுவை கோ செல்வம்,
பாவேந்தர் பாரதிதாசன் பேரன் மற்றும்
புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை
தலைவர் மற்றும் முன்னாள் உதவி இயக்குனர் 
நிகழ்ச்சி புதுச்சேரி வானொலி நிலையம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹04.12.19

செவ்வாய், 29 அக்டோபர், 2019

தமிழ்ச் சங்கத்திற்கு வாக்களிக்க மட்டும் தான் கூட்டம் வருமா?

புதுவைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கூட்டங்களில் பொதுவாக உறுப்பினர்கள் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. ஏனெனில், பெரும்பாலும் துதிபாடிகள் கூட்டமாகத் தான் அந்தக் கூட்டங்கள் அமைந்துள்ளன.

எனவே, தமிழ்ச் சங்கம் அடிக்கடி விருதுகள் அறிவித்துக் கூட்டம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த விருதுகளை வாங்குவதற்குக் கூடப் பலர் வருவதில்லை என்பது தான் வேடிக்கை......


வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கூகுல் தேடலில் தமிழ்ச் சங்க ஊழல் படங்களை காட்டலில் முன்னேற்றம்

தமிழ் மொழியை விட சமக்கிருத மொழி பழைமையானது எனத் தமிழக அரசின் ஆங்கிலப் பாடநூலில் குறிப்பிட்டது குறித்தோ அல்லது 10, 12 வகுப்பில் மொழிப்பாடமாகத் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு  செய்தால்  போதும்  எனத் தமிழக அரசு அறிவித்த  போதும் அது குறித்துப் புதுவைத் தமிழ்ச் சங்கம் ஏதேனும் கண்டனங்களைத் தெரிவித்தார்களா? என்று இன்று நான் இணையத்தில் தேடினேன். 

ஆனால், என் கண்ணுக்கு ஒன்றும் தென்படவில்லை. இன்று புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று படங்களில் தேடியபோது மொத்தமுள்ள பதினொரு (11) படங்களில் ஒன்பது (9) படங்கள் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகள் குறித்த படங்கள் தான் வந்தது முன்பு தேடியபோது 15 படங்களில் 6 படங்கள் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேடு குறித்து வந்த நிலையில் இன்று 11 ப்டத்திற்கு 9 படங்கள் முறைகேடு குறித்து முன்னேற்றம் கண்டுள்ளதைக் கவனித்தேன். இந்த இணைப்பை கிளிக் செய்து நீங்களும் பாருங்களேன் புதுவைத் தமிழ்ச் சங்கம்



ஞாயிறு, 17 மார்ச், 2019

ஊழல் எனத்தேடினால் இனி தமிழ்ச் சங்கம் எனப் பொருள் வருமா?

புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று நீங்கள் இன்று கூகுலில் தேடினால் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பான செய்திப் படங்கள் தான் முந்தி நிற்கின்றன.

இனி ஊழல் என்று இணையத்தில் தேடினால் அதற்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று விரைவில் பொருள் வருமா தெரியவில்லை. மூன்று வரிசையில் மொத்தமாக ஆறு படங்கள்  தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடு தொடர்பான படங்களாகும்.




கேள்வி கேட்பவர்களை நீங்கள் புறக்கணிக்கலாம். ஆனால், உலகத்தின் கண்களில் இருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதைத் தான் இந்த செய்திகள் நமக்குச் சொல்பவை. 

முன்பெல்லாம் தமிழ்ச் சங்கத்தை எதிர்த்த சுவரொட்டிகள் ஒட்டிய போது பல எதிர்ப்புக் குரல்கள் தொலைபேசி வழியாக வந்தன. ஆனால், இப்போது அப்படி வருவதில்லை. ஏனெனில் புதுவைத் தமிழ்ச் சங்கம் குறித்து இன்று பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

முகநூலிலும் வெளியில் இருப்பவர்கள் கூட எந்த எதிர்ப்புக் குரலும் எங்களுக்கு தெரிவிப்பது இல்லை. காரணம் நாங்கள் எதையும்  ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை என்பது தான். 

இந்த வலைப்பதிவில் கூட தொடர்புடைய ஒரு  படம் இல்லாமல் ஒரு செய்தி கூட இல்லை என்பதை  நீங்கள் அறியலாம். 



வெள்ளி, 15 மார்ச், 2019

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழினத்திற்காக போராடியதாக செய்தி உண்டா?


நற்றமிழில், தமிழகத்தில்
நல்லெண்ணம் இல்லாத
நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்
கடிநாயை அமைத்திடலாம்!
                                                 - பாரதிதாசன்

தமிழ்ச் சங்கம் என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அல்லது தமிழ் மொழிக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் புதுவையில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளும் போராடியதைப் பார்த்திருக்க முடியும். 

புதுவைத் தமிழ்ச் சங்கம் மொழிக்காகவும் இனத்திற்காகவும் ஒருபோதும் போராடியதில்லை. ஈழத்தமிழர்களுக்காக உலகெங்கும் போராடிய போது புதுவைத் தமிழ்ச் சங்கம் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவர்கள் போராடுவதெல்லாம் பதவிக்காக மட்டும் தான்.

எனக்குத் தெரிந்து இவர்கள் இயற்றிய ஒரே தீர்மானம்:
"புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது தான்."

இந்த முறை மாநாட்டில் ஏதோ தீர்மானம் நிறைவேற்றினார்களாம்...

இணையத்தில் தேடிப்பாருங்கள் தப்பித் தவறி தமிழினத்திற்காக போராடியதாக செய்தி வந்திருக்கிறதா பாருங்கள் வாய்ப்பு இல்லை. (வேறு சில அமைப்புகளுடன் நடத்தும் போது செய்திகள் உள்ளது.)




வியாழன், 14 மார்ச், 2019

ஊழல் தமிழ்ச் சங்கத்தை முதல்வர் சரி செய்வாரா?

புதுவை முதல்வர் அவர்கள் தமிழுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் அப்படி உதவி செய்வதாய் இருந்தால் முதலில் இந்த ஊழல் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகளை சரி செய்வது தான் முதன்மையான பணியாகும் அதனை செய்வாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





...........................................
தமிழ் சங்க பொன்விழா மாநாடு: தமிழுக்கும்,தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் நாராயணசாமி உறுதி

புதுவை மாநிலத்தில் தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் நமது அரசு உரிய மரியாதை செலுத்தி வருகிறது. புதுவை மாநில மக்களின் நலன் கருதி தற்போது நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்றால் இதன் மூலம் அரசு தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.

புதன், 13 மார்ச், 2019

முத்துவின் ஊழல் மோசடி பற்றி சுவரொட்டி ஒட்டியதால் அதிக வாக்களித்தார்களாம்!

தமிழ்ச் சங்கத் தேர்தல் முடிந்தவுடன்  முத்து அவர்கள் அளித்த பத்திரிக்கை அறிக்கையை கீழே அளித்துள்ளோம். தினமலர் செய்தி (14-02-2017)

தேர்தலில் முறைகேடு நடந்ததை ஒட்டி முத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. உள்ளூரின் கடுமையான எதிர்ப்பு உள்ளதால் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளை இணைத்தால் தான்  இதனை தமிழ்ச் சங்கம் போல் நடத்த முடியும் என்பதை அறிந்துள்ளார்.  உள்ளூரில் விலை போகவில்லை. வெளியூரில் வியாபாரம் செய்தாக வேண்டியுள்ளது. 

அப்போது எடுத்த முடிவின் படிதான் அவர் உள்ளூரில் உள்ள தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு அனுப்பாமல் வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி இருந்தார் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். 

இவரின் மோசடிகளைப் பற்றி சுவரொட்டி ஒட்டியதால் தான் தமிழ்ச் சங்கத்தினர் இவருக்கு அதிக வாக்கு அளித்தார்களாம்.  மோசடி என்று சுவரொட்டி ஒட்டியதாலேயே வாக்களித்தார்கள் என்றால், அவர் எத்தகையவர்களை  உறுப்பினர்களாக சேர்த்து வைத்துள்ளார் என்பதைப் பாருங்கள்.


செவ்வாய், 12 மார்ச், 2019

தமிழ்சங்கம் மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றாத வாக்குறுதிகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக முத்து தேர்வு செய்த போது வெளிவந்த செய்தி இது.

இந்த செய்தியில் முத்து அவர்கள் குறிப்பிட்ட மூன்று செய்திகளை நாம் நினைவு கூற வேண்டியுள்ளது. 

  • ஒரு அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெறுவது சங்க வரலாற்றில் இதுவே முதல் முறை. :     
  • அவர் சொல்லும் செய்தி என்னவென்றால் இதுவரை இல்லாத அளவு தேர்தல் மிக மோசமான வடிவில் நடந்தது என்பது தான் அது. அரசியல் கட்சி போல பணம் "பிரியாணி உணவு" வாகனங்களில் அழைத்து வந்து  வாக்களிக்க வைத்தது. வெளியூரிலிருந்து அழைத்து வந்து மண்டபத்தில் தங்க வைத்து வாக்களிக்க வைத்தது என்ற பல்வேறு முறை கேடுகளும் தான்  இந்த முறை அவர்கள் அணி மட்டுமே வெற்று பெறக் காரணமாக இருந்தது. 

  • சங்கத்தில் மேல்மாடி கட்டவும், தொலைபேசி அலைபேசி கணினி வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.      பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் தமிழ்ச் சங்க மேல்மாடி கட்டுவதற்கு ஒதுக்கிய 36 இலட்சம் நிதியை தன் சோம்பேரித் தனத்தினாலேயே அந்த நிதியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களைப் போன்றோர் நிர்வாகத்தில் இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை
  • சங்கத்தின் கணக்கில் இருந்து இதுவரை நான் நிதியை எடுத்ததே இல்லை. : சங்கத்தின் நிதியையும் தன் சொந்த நிதி என்று இவர் கருதுவதால் அது சங்கத்தின் நிதி என்று அவர் ஒருபோதும் கருதியதே இல்லை. ஏனெனில் சங்கத்தில் வந்த வருமானம் எதையும் இவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதே இல்லை. பொருளாளர் என்பவரை ஒரு பெயருக்காகவே வைத்துள்ளனர். 
  • கடந்த 2013-2017 காலகட்டத்தில் திரு தி.கோவிந்தராசு அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளராக இருந்தார். அவர் பொருளாளராக இருந்தவரை அவரிடம் தமிழ்ச் சங்க நிதி தொடர்பான எந்த கணக்கையும் அவரிடம் ஒப்படைக்கவில்லை.  இதனைக் கண்டித்து அவர் பணி விலகுவதாகவும் அறிவித்தார். எதற்கும் அஞ்சாத முத்து எந்தக் கணக்கையும் அவரிடம் ஒப்படைத்ததில்லை. 

  • 2010 முதல் 2013 ஆண்டு நிறைவடைந்த பொருளாளரிடமிருந்து கணக்கை 2017-ஆண்டு தொடக்கத்தில் தேர்வு செய்த பொருளாளருக்கு கணக்கு மாற்றியதாக தகவல். அப்படியானால் 2013 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆண்டு தொடக்கம் முதல் பொருளாளரிடம் கணக்கு ஒப்படைக்கவில்லை என்பது தான் உண்மை.
  • வங்கியிலும் பணம் செலுத்தவில்லை. "ஆம் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் பணம், வாடகைப் பணம்  உள்ளிட்ட எல்லாம் முத்துவின் பணம் தான்"
  • நிதி குறித்து சரியான கணக்கில்லை என்று உறுப்பினர்கள் கூறிய போது ஒரு கூட்டத்தில் 

வெள்ளி, 8 மார்ச், 2019

தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை பொது நூலகமாக்க கோரிக்கை

19-04-2017 புதுச்சேரி ராசீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர்  ரகுபதி அவர்கள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தை பொது நூலகமாக்க மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பொது நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு என ரூ 20 லட்சம் நிதி பெற்று தமிழ்ச் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது. 

ஆனால், அந்த கட்டிடத்தில் நூலகம் என்ற பெயர் பலகை வைக்காமலேயே இவர்கள் செய்தித் தாள்கள், வார இதழ்கள் ஆகியவற்றை கடந்த 2006 ஆண்டு முதல் 2015 வரை கலைப் பண்பாட்டுத் துறை ரூ 48,167 வழங்கியுள்ளது. 

இருப்பினும் இதனை முழுமையான பொது நூலகமாக செயல்படுத்தாமல் முற்றிலும்  தமிழ்ச் சங்கக் கட்டிடமாக மாற்றி நிகழ்வுகள் அரங்கமாக வாடகைக்கு விட்டு, வியாபார நோக்கோடு செயல்படுத்தி வருகின்றனர். 

இதனால், பொது மக்களுக்கோ, தமிழ் வளர்ச்சிக்கோ, தமிழ் ஆர்வலர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.
எனவே, பொது மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பயன் பெறும் வகையில் பொது நூலகத்தை அக்கட்டத்தில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


தமிழ்ச் சங்கம் பற்றி புதுச்சேரி முதல்வரிடம் புகார்

புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் கடந்த 31-01-2017 அன்று தமிழ்ச் சங்க முறைகேடுகள் பற்றிய  புகார் ஒன்று  அளிக்கப்பட்டது.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள இயலுமா என சட்டத்துறைக்கு அனுப்பி கேட்பதாக தெரிவித்தார். 

......................

தமிழ்ச் சங்கம் கட்டுவதற்காக பாராளுமன்ற  உறுப்பினரின் மூலமாக அரசு நிதி வழங்கி இருப்பதால், அரசு தமிழ்ச் சங்கத்தினை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. அல்லது அதனை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் உள்ளது. அதனை இந்த அரசு செய்து தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு அளிக்கும் கோரிக்கை மனு: 
ஐயா,
புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் திரு முத்து அவர்கள் 2007 ஆம் ஆண்டுகள் பொருளாளராகவும், அதன்பின் ஆறு ஆண்டுகள் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவரது காலங்களில் முறையாக ஆண்டு தோறும் மே/ஜுன் மாதங்களில் கூட்ட வேண்டிய பொதுக்குழு ஒருமுறைகூட கூட்டப்படவில்லை. ஆறு ஆண்டுகளில் ஒருமுறைகூட செலவுக் கணக்குகளை காட்டவில்லை. நிதி முறையீடுகளுக்கு உரிய பதில் இல்லை.
தொடர்ந்து தானே தலைவராக இருக்கும் நோக்கில் சங்கத்தில் தனக்கு வேண்டியவர்களை கமுக்கமாக உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். தேர்தலில் அவரே போட்டியிட வேண்டுமென்று ஆதரவாளர்கள்களைக் கூட்டி சிறப்பு பொதுக்குழுவில  ஒப்புதல் பெற்றுள்ளார். இந்நிலையில் சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னாள் நீதியரசர் சேது. முருகபூபதியைக் கொண்டு கடந்த சனவரி 7 ஆம் தேதி கூட்டி வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தலை அறிவித்துள்ளார்கள்.
தேர்தல் தேதியில் பல குறைபாடுகள் உள்ளன. வாக்களர் பட்டியலை உறுப்பினர்கள் பார்வையிட வாய்ப்பே வழங்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் உள்ளது. ஒருவர்  பெயரே இரண்டு இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. முகவரியே குறிப்பிடாமலும் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
முத்து அவர்கள் தமக்கு ஆதரவாக புதிதாக சேர்த்த உறுப்பினர்களை பிறர் அறிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கில் உறுப்பினர்கள் சேர்க்கை வரிசை எண்ணை குறிப்பிடாமல் அகர வரிசையில் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.வாக்களர் உறுப்பினர் பட்டியலில் புகைப்படம் சேர்க்கப்படவில்லை.  இதனால் தேர்தலில் கள்ள வாக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையர் வெளியிடவில்லை. முறைகேடாக தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு தேர்தலை அறிவித்துள்ளது. இதில் தேர்தல் நெறிமுறைகளில் உள்ள தேதிக்கும், தேர்தல் அட்ட வணையில் உள்ள தேதிக்கும் முரண்பாடுகள் உள்ளன.
தேர்தல் விதிமுறைகளின் படி வேட்பாளரின் பெயர் மற்றும் தலைப்பெழுத்தும் தமிழில் எழுத வேண்டும் என்ற விதி முறை உள்ளது. ஆனால், அவ்வாறு போட இயலாது என்று மறுத்த திரு முத்து அவர்களின் வேட்பு  மனு
                             தொடர்ச்சி --2      

                               
-2-
தள்ளுபடி செய்யப்பட வேண்டிய நிலையில் அது முறைகேடாக ஏற்றுக் கொள்ளப்  பட்டுள்ளது. இது போல் தேர்தல் ஆணையர் ஒருதலைப் பட்சமாகசெயல்படுவதால், இந்த தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கருதுகிறோம்.
இவ்வகையான செயலால் அப்பாவி தமிழ் அறிஞர்கள் உறுப்பினர்கள் பலர் பாதிக்கப்படுவதால், ஒருவகையான பதட்டம் நிலவுகிறது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உருவாகும் நிலையும் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
எனவே, இந்த விசயத்தில் அரசே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்து சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட்டு நியாயமான முறையில் தேர்தலை நடத்தித்தர ஆவண செய்யும்படி கேட்டுக்  கொள்கிறேன்.

இப்படிக்கு

இரா. அழகிரி