இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 13 டிசம்பர், 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு எதிராக நாங்கள் ஏன் போராடுகிறோம் ?

 சேரல்:

அனைத்து உறுப்பினர்கள் 

புதுவைத் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி

 

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்ப் பணியாற்றுவதில் தமிழகத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத பெருமையும், வரலாறும், சிறப்பும் கொண்டது புதுச்சேரி. தமிழ்ப் பணியாற்றுவதில் தமிழகத்திற்கு முன்னோடியாகவும் புதுச்சேரி பலவற்றில் இருந்தது. அத்தகைய பெருமையைக் கட்டிக் காப்பதற்கு பதிலாக, புதுச்சேரி தமிழ்ச் சங்கம் நிதி முறைகேடு, முறையாக சங்கத்தை நிர்வகிக்காதது உள்ளிட்ட பல புகார்களின் காரணமாக புதுவைத் தமிழ்ப் பொருமக்களின் நற்பெயருக்கு கேடு உண்டாக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. அவற்றில் சிலவற்றை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

1.புதுவைத் தமிழ்ச் சங்கம் கடந்த 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு ஒருமுறைகூட கூட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே/சூன் மாதங்களில் பொதுக்குழு கூட்டப்படும் என தமிழ்ச் சங்க விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச் சங்கத்தின் கணக்குகள் தகுதியான தணிக்கையாளரைக் கொண்டு தணிக்கை செய்யப்பட வேண்டும் என தமிழ்ச் சங்கம் விதி உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அவை சங்கப் பதிவருக்குக் கொடுக்கப்படிருக்க வேண்டும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

3.  இவ்வாறு கணக்குகளை தணிக்கை செய்து பதிவர் சங்கத்தில் அளிக்காமல் போனதால் இந்த சங்கம் சட்டப்படி செயலற்ற சங்கம் என சங்கங்களின் பதிவாளார் தகவல் உரிமைச் சட்டப்படி பதிலளித்துள்ளார்.

4. தமிழ்ச் சங்க நிர்வாகம் நிதி தொடர்பாக சரியான நடைமுறைகளை கொண்டிருக்கவில்லை என்பதை தொடர்ச்சியாக பலர் பலமுறை சுட்டிக் காட்டிய போதும் அது பற்றி தமிழ்ச் சங்க நிர்வாக எந்தவிதமாக முறையான பதிலையும் வழங்கியதில்லை. மாறாக சுட்டிக் காட்டுபவர்களை ஏதோ காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் தகவல் அளிப்பதாக அவர்கள் பரப்புரை செய்கிறார்களே தவிர தாங்கள் நேர்மையாக இருப்பதாக சொல்லும் அவர்கள் அதனை ஒரு போதும் நிருப்பிக்க தயாராக இல்லை.

5.   குறிப்பாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கி, மின்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கி, குடிநீர்க்கட்டணம் ஆகியவை முறையாக செலுத்தி தமிழ்ச் சங்கத்தை ஒழுங்காக நிர்வகிக்கவில்லை.

6. ஏற்கனவே, புதுவைத் தமிழ்ச் சங்கம் நிதியை சரியாக பயன்படுத்தாத நிலையில் புதுச்சேரி அரசிடம் ரூபாய் ஐந்து இலட்சத்தை நிதியாக பெற்றது. அதற்கு எவ்விதமான வரவு செலவுக் கணக்குகளையும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை.

7. புதிதாக பல உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் உறுப்பினர்களில் பெரும்பான்மையோருக்கு தமிழ்ச் சங்கம் நடத்திய மாநாட்டிற்கு அழைப்பே அனுப்பவில்லை. உறுப்பினர்கள் கட்டணத்தில் நடத்திய மாநாட்டிற்கு உறுப்பினர்களுக்கே அழைப்பு அனுப்பாத  தமிழ்ச் சங்கம் இது.

8.  எங்கள் பணத்தில் மாநாடு நடத்தி எங்களையே அழைக்காத தமிழ்ச் சங்கம் யாருக்காக இந்த மாநாட்டை நடத்தியது என்று உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு தமிழ்ச் சங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.

 

நிலைமை இவ்வாறு இருக்க சங்க நிர்வாகிகள் இது போன்ற முறையற்ற செயல்களை மறைப்பதற்காக பலரை சந்தித்து விருதுகளை வழங்கி சமாதானம் செய்து வருவதை நாம் அறிகிறோம். பல அறிவிற் சிறந்த பெருமக்கள் இது போன்ற சிறிய விருதுகளுக்காக தங்களைச் சமாதானம் செய்து கொள்வதும், பல தவறான செயல்களை கண்டு கொள்ளாமல் போவதும், அதனோடு சிலர் ஆதரித்து செயல்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கும் செயலாக உள்ளது

புதுவைத் தமிழ்ச் சங்கம் கடந்த 2013 ஆண்டு அளவில் சுமார் 105 பேர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. புதுவையின் பல தமிழ் உணர்வாளர்கள் தமிழறிஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. புதுவையின் சாக்கித்திய அகாதமி விருதாளரும் தமிழறிஞருமான பிரபஞ்சன் உள்ளிட்டவர்களைக் கூட இந்தத் தமிழ்ச் சங்கம் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. தமிழறிஞர்கள் இல்லாத தமிழ்ச் சங்கம் என பலர் தெரிவித்த எதிர்ப்பின் விளைவாகவே பிரபஞ்சன், தமிழறிஞர் தங்கப்பா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்

மேலும் பல தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும், போராடித்தான் தங்களை தமிழ்ச் சங்க உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பல கட்ட தொடர்ப் போராட்டத்தின் பின்பு தான் தமிழ் உணர்வாளர்களும், அறிஞர்கள் பலரும் உறுப்பினர்களாக சேர அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இதற்கு முன்பாக தமிழுக்காக எவ்விதமான செயல்பாட்டிலும் கலந்து கொள்ளாத பலரை புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாகச் சேர்த்தனர்

இதன் காரணமாக தமிழ்ச் சங்கம் ஒரு குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைத் தவிர வேறு எந்த உண்மையான தமிழ் அறிஞர்கள் யாரும் அந்தத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகியாக வருவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலை உள்ளது.  

ஒரு வேளை வர வேண்டுமானால், புகழ்பாடி அடிமையாக இருந்தால் தவிர வேறு வாய்ப்பே இல்லை.

முறத்தால் புலியை விரட்டிய வீரத்தமிழ்த்தாய் என புறநானூற்று பெருமை பேசிவிட்டு, அடிமையாய் நின்று வெல்வது தமிழுக்கும் தமிழனின் மானஉணர்ச்சிக்கும் கேடானது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக