ஞாயிறு, 17 மார்ச், 2019

ஊழல் எனத்தேடினால் இனி தமிழ்ச் சங்கம் எனப் பொருள் வருமா?

புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று நீங்கள் இன்று கூகுலில் தேடினால் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பான செய்திப் படங்கள் தான் முந்தி நிற்கின்றன.

இனி ஊழல் என்று இணையத்தில் தேடினால் அதற்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் என்று விரைவில் பொருள் வருமா தெரியவில்லை. மூன்று வரிசையில் மொத்தமாக ஆறு படங்கள்  தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடு தொடர்பான படங்களாகும்.
கேள்வி கேட்பவர்களை நீங்கள் புறக்கணிக்கலாம். ஆனால், உலகத்தின் கண்களில் இருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதைத் தான் இந்த செய்திகள் நமக்குச் சொல்பவை. 

முன்பெல்லாம் தமிழ்ச் சங்கத்தை எதிர்த்த சுவரொட்டிகள் ஒட்டிய போது பல எதிர்ப்புக் குரல்கள் தொலைபேசி வழியாக வந்தன. ஆனால், இப்போது அப்படி வருவதில்லை. ஏனெனில் புதுவைத் தமிழ்ச் சங்கம் குறித்து இன்று பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

முகநூலிலும் வெளியில் இருப்பவர்கள் கூட எந்த எதிர்ப்புக் குரலும் எங்களுக்கு தெரிவிப்பது இல்லை. காரணம் நாங்கள் எதையும்  ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை என்பது தான். 

இந்த வலைப்பதிவில் கூட தொடர்புடைய ஒரு  படம் இல்லாமல் ஒரு செய்தி கூட இல்லை என்பதை  நீங்கள் அறியலாம். வெள்ளி, 15 மார்ச், 2019

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழினத்திற்காக போராடியதாக செய்தி உண்டா?


நற்றமிழில், தமிழகத்தில்
நல்லெண்ணம் இல்லாத
நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்
கடிநாயை அமைத்திடலாம்!
                                                 - பாரதிதாசன்

தமிழ்ச் சங்கம் என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அல்லது தமிழ் மொழிக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் புதுவையில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளும் போராடியதைப் பார்த்திருக்க முடியும். 

புதுவைத் தமிழ்ச் சங்கம் மொழிக்காகவும் இனத்திற்காகவும் ஒருபோதும் போராடியதில்லை. ஈழத்தமிழர்களுக்காக உலகெங்கும் போராடிய போது புதுவைத் தமிழ்ச் சங்கம் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவர்கள் போராடுவதெல்லாம் பதவிக்காக மட்டும் தான்.

எனக்குத் தெரிந்து இவர்கள் இயற்றிய ஒரே தீர்மானம்:
"புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது தான்."

இந்த முறை மாநாட்டில் ஏதோ தீர்மானம் நிறைவேற்றினார்களாம்...

இணையத்தில் தேடிப்பாருங்கள் தப்பித் தவறி தமிழினத்திற்காக போராடியதாக செய்தி வந்திருக்கிறதா பாருங்கள் வாய்ப்பு இல்லை. (வேறு சில அமைப்புகளுடன் நடத்தும் போது செய்திகள் உள்ளது.)
வியாழன், 14 மார்ச், 2019

ஊழல் தமிழ்ச் சங்கத்தை முதல்வர் சரி செய்வாரா?

புதுவை முதல்வர் அவர்கள் தமிழுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் அப்படி உதவி செய்வதாய் இருந்தால் முதலில் இந்த ஊழல் தமிழ்ச் சங்கத்தின் முறைகேடுகளை சரி செய்வது தான் முதன்மையான பணியாகும் அதனை செய்வாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
...........................................
தமிழ் சங்க பொன்விழா மாநாடு: தமிழுக்கும்,தமிழ் அறிஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வோம் நாராயணசாமி உறுதி

புதுவை மாநிலத்தில் தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் நமது அரசு உரிய மரியாதை செலுத்தி வருகிறது. புதுவை மாநில மக்களின் நலன் கருதி தற்போது நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன் என்றால் இதன் மூலம் அரசு தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.

புதன், 13 மார்ச், 2019

முத்துவின் ஊழல் மோசடி பற்றி சுவரொட்டி ஒட்டியதால் அதிக வாக்களித்தார்களாம்!

தமிழ்ச் சங்கத் தேர்தல் முடிந்தவுடன்   முத்து அவர்களின் அறிக்கையை கீழே அளித்துள்ளோம். தினமலர் செய்தி (14-02-2017)

தேர்தலில் முறைகேடு நடந்ததை ஒட்டி முத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. உள்ளூரின் கடுமையான எதிர்ப்பு உள்ளதால் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளை இணைத்தால் தான்  இதனை தமிழ்ச் சங்கம் போல் நடத்த முடியும் என்பதை அறிந்துள்ளார்.  உள்ளூரில் விலை போகவில்லை. வெளியூரில் வியாபாரம் செய்தாக வேண்டியுள்ளது. 

அப்போது எடுத்த முடிவின் படிதான் அவர் உள்ளூரில் உள்ள தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு அனுப்பாமல் வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி இருந்தார் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். 

இவரின் மோசடிகளைப் பற்றி சுவரொட்டி ஒட்டியதால் தான் தமிழ்ச் சங்கத்தினர் இவருக்கு அதிக வாக்கு அளித்தார்களாம்.  மோசடி என்று சுவரொட்டி ஒட்டியதாலேயே வாக்களித்தார்கள் என்றால், அவர் எத்தகையவர்களை  உறுப்பினர்களாக சேர்த்து வைத்துள்ளார் என்பதைப் பாருங்கள்.


செவ்வாய், 12 மார்ச், 2019

தமிழ்சங்கம் மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றாத வாக்குறுதிகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக முத்து தேர்வு செய்த போது வெளிவந்த செய்தி இது.

இந்த செய்தியில் முத்து அவர்கள் குறிப்பிட்ட மூன்று செய்திகளை நாம் நினைவு கூற வேண்டியுள்ளது. 

  • ஒரு அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெறுவது சங்க வரலாற்றில் இதுவே முதல் முறை. :     
  • அவர் சொல்லும் செய்தி என்னவென்றால் இதுவரை இல்லாத அளவு தேர்தல் மிக மோசமான வடிவில் நடந்தது என்பது தான் அது. அரசியல் கட்சி போல பணம் "பிரியாணி உணவு" வாகனங்களில் அழைத்து வந்து  வாக்களிக்க வைத்தது. வெளியூரிலிருந்து அழைத்து வந்து மண்டபத்தில் தங்க வைத்து வாக்களிக்க வைத்தது என்ற பல்வேறு முறை கேடுகளும் தான்  இந்த முறை அவர்கள் அணி மட்டுமே வெற்று பெறக் காரணமாக இருந்தது. 

  • சங்கத்தில் மேல்மாடி கட்டவும், தொலைபேசி அலைபேசி கணினி வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.      பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் தமிழ்ச் சங்க மேல்மாடி கட்டுவதற்கு ஒதுக்கிய 36 இலட்சம் நிதியை தன் சோம்பேரித் தனத்தினாலேயே அந்த நிதியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களைப் போன்றோர் நிர்வாகத்தில் இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை
  • சங்கத்தின் கணக்கில் இருந்து இதுவரை நான் நிதியை எடுத்ததே இல்லை. : சங்கத்தின் நிதியையும் தன் சொந்த நிதி என்று இவர் கருதுவதால் அது சங்கத்தின் நிதி என்று அவர் ஒருபோதும் கருதியதே இல்லை. ஏனெனில் சங்கத்தில் வந்த வருமானம் எதையும் இவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதே இல்லை. பொருளாளர் என்பவரை ஒரு பெயருக்காகவே வைத்துள்ளனர். 
  • கடந்த 2013-2017 காலகட்டத்தில் திரு தி.கோவிந்தராசு அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளராக இருந்தார். அவர் பொருளாளராக இருந்தவரை அவரிடம் தமிழ்ச் சங்க நிதி தொடர்பான எந்த கணக்கையும் அவரிடம் ஒப்படைக்கவில்லை.  இதனைக் கண்டித்து அவர் பணி விலகுவதாகவும் அறிவித்தார். எதற்கும் அஞ்சாத முத்து எந்தக் கணக்கையும் அவரிடம் ஒப்படைத்ததில்லை. 

  • 2010 முதல் 2013 ஆண்டு நிறைவடைந்த பொருளாளரிடமிருந்து கணக்கை 2017-ஆண்டு தொடக்கதில் தேர்வு செய்த பொருளாளருக்கு கணக்கு மாற்றியதாக தகவல். அப்படியானால் 2013 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆண்டு தொடக்கம் முதல் பொருளாளரிடம் கணக்கு ஒப்படைக்கவில்லை என்பது தான் உண்மை.
  • வங்கியிலும் பணம் செலுத்தவில்லை. "ஆம் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் பணம், வாடகைப் பணம்  உள்ளிட்ட எல்லாம் முத்துவின் பணம் தான்"

வெள்ளி, 8 மார்ச், 2019

தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை பொது நூலகமாக்க கோரிக்கை

19-04-2017 புதுச்சேரி ராசீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர்  ரகுபதி அவர்கள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தை பொது நூலகமாக்க மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பொது நூலகக் கட்டிடம் கட்டுவதற்கு என ரூ 20 லட்சம் நிதி பெற்று தமிழ்ச் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது. 

ஆனால், அந்த கட்டிடத்தில் நூலகம் என்ற பெயர் பலகை வைக்காமலேயே இவர்கள் செய்தித் தாள்கள், வார இதழ்கள் ஆகியவற்றை கடந்த 2006 ஆண்டு முதல் 2015 வரை கலைப் பண்பாட்டுத் துறை ரூ 48,167 வழங்கியுள்ளது. 

இருப்பினும் இதனை முழுமையான பொது நூலகமாக செயல்படுத்தாமல் முற்றிலும்  தமிழ்ச் சங்கக் கட்டிடமாக மாற்றி நிகழ்வுகள் அரங்கமாக வாடகைக்கு விட்டு, வியாபார நோக்கோடு செயல்படுத்தி வருகின்றனர். 

இதனால், பொது மக்களுக்கோ, தமிழ் வளர்ச்சிக்கோ, தமிழ் ஆர்வலர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.
எனவே, பொது மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பயன் பெறும் வகையில் பொது நூலகத்தை அக்கட்டத்தில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


தமிழ்ச் சங்கம் பற்றி புதுச்சேரி முதல்வரிடம் புகார்

புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் கடந்த 31-01-2017 அன்று தமிழ்ச் சங்க முறைகேடுகள் பற்றிய  புகார் ஒன்று  அளிக்கப்பட்டது.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள இயலுமா என சட்டத்துறைக்கு அனுப்பி கேட்பதாக தெரிவித்தார். 

......................

தமிழ்ச் சங்கம் கட்டுவதற்காக பாராளுமன்ற  உறுப்பினரின் மூலமாக அரசு நிதி வழங்கி இருப்பதால், அரசு தமிழ்ச் சங்கத்தினை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. அல்லது அதனை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் உள்ளது. அதனை இந்த அரசு செய்து தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு அளிக்கும் கோரிக்கை மனு: 
ஐயா,
புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் திரு முத்து அவர்கள் 2007 ஆம் ஆண்டுகள் பொருளாளராகவும், அதன்பின் ஆறு ஆண்டுகள் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவரது காலங்களில் முறையாக ஆண்டு தோறும் மே/ஜுன் மாதங்களில் கூட்ட வேண்டிய பொதுக்குழு ஒருமுறைகூட கூட்டப்படவில்லை. ஆறு ஆண்டுகளில் ஒருமுறைகூட செலவுக் கணக்குகளை காட்டவில்லை. நிதி முறையீடுகளுக்கு உரிய பதில் இல்லை.
தொடர்ந்து தானே தலைவராக இருக்கும் நோக்கில் சங்கத்தில் தனக்கு வேண்டியவர்களை கமுக்கமாக உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். தேர்தலில் அவரே போட்டியிட வேண்டுமென்று ஆதரவாளர்கள்களைக் கூட்டி சிறப்பு பொதுக்குழுவில  ஒப்புதல் பெற்றுள்ளார். இந்நிலையில் சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னாள் நீதியரசர் சேது. முருகபூபதியைக் கொண்டு கடந்த சனவரி 7 ஆம் தேதி கூட்டி வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தலை அறிவித்துள்ளார்கள்.
தேர்தல் தேதியில் பல குறைபாடுகள் உள்ளன. வாக்களர் பட்டியலை உறுப்பினர்கள் பார்வையிட வாய்ப்பே வழங்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் உள்ளது. ஒருவர்  பெயரே இரண்டு இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. முகவரியே குறிப்பிடாமலும் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
முத்து அவர்கள் தமக்கு ஆதரவாக புதிதாக சேர்த்த உறுப்பினர்களை பிறர் அறிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கில் உறுப்பினர்கள் சேர்க்கை வரிசை எண்ணை குறிப்பிடாமல் அகர வரிசையில் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.வாக்களர் உறுப்பினர் பட்டியலில் புகைப்படம் சேர்க்கப்படவில்லை.  இதனால் தேர்தலில் கள்ள வாக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையர் வெளியிடவில்லை. முறைகேடாக தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு தேர்தலை அறிவித்துள்ளது. இதில் தேர்தல் நெறிமுறைகளில் உள்ள தேதிக்கும், தேர்தல் அட்ட வணையில் உள்ள தேதிக்கும் முரண்பாடுகள் உள்ளன.
தேர்தல் விதிமுறைகளின் படி வேட்பாளரின் பெயர் மற்றும் தலைப்பெழுத்தும் தமிழில் எழுத வேண்டும் என்ற விதி முறை உள்ளது. ஆனால், அவ்வாறு போட இயலாது என்று மறுத்த திரு முத்து அவர்களின் வேட்பு  மனு
                             தொடர்ச்சி --2      

                               
-2-
தள்ளுபடி செய்யப்பட வேண்டிய நிலையில் அது முறைகேடாக ஏற்றுக் கொள்ளப்  பட்டுள்ளது. இது போல் தேர்தல் ஆணையர் ஒருதலைப் பட்சமாகசெயல்படுவதால், இந்த தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கருதுகிறோம்.
இவ்வகையான செயலால் அப்பாவி தமிழ் அறிஞர்கள் உறுப்பினர்கள் பலர் பாதிக்கப்படுவதால், ஒருவகையான பதட்டம் நிலவுகிறது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உருவாகும் நிலையும் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
எனவே, இந்த விசயத்தில் அரசே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்து சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட்டு நியாயமான முறையில் தேர்தலை நடத்தித்தர ஆவண செய்யும்படி கேட்டுக்  கொள்கிறேன்.

இப்படிக்கு

இரா. அழகிரி


திங்கள், 4 மார்ச், 2019

ஊழல் தமிழ்ச் சங்கத்திற்கு புதுவை முதல்வர் 5 இலட்சம்

ஊழல் தமிழ்ச் சங்கத்திற்கு புதுச்சேரி முதல்வர் 5 லட்சம் மாநாட்டு நிதியாக வழங்கி இருக்கிறார்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக நிதி தணிக்கை செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் புகார் கூறும் நிலையில், புதுச்சேரி முதல்வர் அவர்கள் ஊழல் நிதிக்காக மேலும் தொகையை அளித்திருப்பது, தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கீழே உள்ள புதுச்சேரி சங்கப் பதிவாளர் சட்டம் 1969 பிரிவு 4, 4-ஆ மற்றும் பிரிவு 22 இன்படி புதுவைத் தமிழ்ச் சங்கம் ஒரு காலாவதியான சங்கமாகும்.

ஒரு காலாவதியான சங்கத்திற்கு  முதல்வர் நிதி அளித்தது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல வருந்தத்தக்க நிகழ்வாகும்..

புதுச்சேரி சங்கப் பதிவாளர் சட்டம் 1969

http://www.lawsofindia.org/pdf/puducherry/1969/1969Pondicherry9.pdf

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

உறுப்பினர்களுக்கே அழைப்பு இல்லாமல் மாநாடு நடத்திய தமிழ்ச் சங்கம்


புதுவைத் தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களுக்கே அழைப்பு அனுப்பாமல் தனது பொன் விழா மாநாட்டை நடத்தியுள்ளது.

இதனால் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் கள் தமிழ்ச் சங்க நிர்வாகி கள் மீது மிகுந்த சினத்தில், வருத்தத்தில்இருக்கிறார்கள்.

   இது போன்ற புலம்பல்கள் தான் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் பலர் சொல்லும் தகவல். வரவு செலவுக் கூட்டத்திற்காவது அழைப்பு வருமா? என்று முருகன் என்பவர் இக்குழுவில் கேட்டுள்ளார் வரவு செலவுக் கணக்கே கடந்து 9 ஆண்டுகளுக்கு மேலாகக் காட்டவில்லை. இந்த ஆண்டு மட்டும் எப்படி உங்களுக்கு அழைப்பு வரும்?.

வாழ்நாள் உறுப்பினர்களின் பணத்தில் அவர்களுக்கே சொல்லாமல் மாநாடு நடத்திவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வெளிநாட்டுத் தமிழர்களின் காசில் உல்லாச ஊர் சுற்றலுக்குத் தான் இந்த மாநாடே தவிர தமிழை வளர்ப்பது என்பதெல்லாம் மிகப்பெரிய பொய்....

வியாழன், 14 பிப்ரவரி, 2019

வெளிநாட்டுத் தமிழர்கள் புதுச்சேரி மாநாட்டை புறக்கணிக்க கோரிக்கை

அன்புடையீர் வணக்கம்,

தாங்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டுக்கு வருவதாக அறிந்தோம். எனவே, புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்களாகிய நாங்கள் தமிழ்ச் சங்கம் பற்றி தங்கள் கவனத்திற்கு வராத சில நிகழ்ச்சிகளையும்  தகவல்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.


புதுச்சேரி தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களிடம் வாழ்நாள் கட்டணமாக ரூ.1000/- என 800 புதிய உறுப்பினர்களிடம் வாங்கிய "ரூபாய் எட்டு இலட்சம்" மற்றும் சென்ற ஆண்டு இருப்பு எனவும் தமிழ்ச் சங்கக் கட்டிடம் வாடகை எனப் பதிமூன்று இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தைப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் பொதுக் குழுவைக் கூட்டாமல் பொதுக்குழு ஒப்புதல் பெறாமலும் ஒரு பெரிய மாநாட்டை நடத்துவதாகத் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.

"எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமல் அவர்கள் தம் சுய விளம்பரத்திற்காக மாநாடு நடத்துவது ஒரு மாபெரும் மோசடி என்கிறார்கள் தமிழ்ச் சங்க  வாழ்நாள் உறுப்பினர்கள்".

உள்ளூரில் அம்பலப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டுத் தமிழர்களிடம் ஆதரவைத் திரட்டவும் வெளிநாட்டுத் தமிழர்களை அழைத்து இந்த மாநாட்டை நடத்துகிறது தமிழ்ச்சங்கம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு (உத்தமம்) எனும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் (INFITT) புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் முறை கேடினை அறிந்து அவர்களை நீக்கிவிட்டு உலகத் தமிழிணைய மாநாட்டை புதுவையில் நடத்தியதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்துப் புதுவை நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்குத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மோசடியாகத் தேர்தல் வைத்து வெற்றிப் பெற்றது. இரண்டாவது வழக்கு பொதுக்குழு கூட்டி இந்த மாநாடு நடத்த ஒப்புதல் பெறாதது, நிதி மோசடி, (வழக்கு எண் :2601/2018) உள்ளிட்டவைகளை அடங்கிய இந்த மாநாட்டைத் தடை செய்யக் கோரியதுமாகும்.

உறுப்பினர்களுக்குக் கூட மாநாட்டு விழாவிற்கு அழைப்பு அனுப்பவில்லை, மாறாக வெளிநாட்டு பங்கேற்பாளர்களுக்கு மட்டும் அழைப்பிப் பல்வேறு மோசடி செய்து இந்த மாநாடு நடக்கிறார்கள். இதனை மறைக்கவே பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒன்றிணைந்த மாநாடு போல் அரசியல் தலைவர்களின் அரங்கமாக இந்த மாநாடு நடைபெறுகிறது. எங்கே தமிழ் வாழப் போகிறது இவர்களிடம்?

தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் உள்ளக்குமுரலை வெளிநாட்டுத் தமிழறிஞர்களிடம் சொல்ல எங்களுக்கு வழி இல்லை. ஆகவே இந்த வலைப் பதிவுகள் மூலம் தங்களுக்குத் தெரிவிக்க விழைகிறோம். ஏதோ காழ்ப்புணர்ச்சியில் எழுதுகிறார்களோ என்று நீங்கள் கருதாமல் இருக்க எல்லாச் செய்திகளுக்கும் முடிந்தவரை தொடர்புடைய ஆவணகளை இணைத்துள்ளோம்.


https://puduvaithamizhpathukappu.blogspot.com/

இதனால், புதுவை மற்றும் தமிழகத் தமிழர்களை இந்த மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி வருகிறோம். தங்கள் வருகைபுரிந்தால் புதுவைத் தமிழ்ச் சங்கத்தினர் தாங்கள் செய்த மோசடிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவார்கள் என்ற செய்தியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புலவர் பட்டம் பெறாமையால் பாரதிதாசனைக் கூட உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளாத புதுவை தமிழ்ச் சங்கம் இன்று ஓட்டுக்காகக் குப்பைக் கூட்டுபவர், (பார்க்க வலைப்பதிவு) கேள்வி கேட்காத எளிய மக்கள் தமிழுக்காகக் கடந்த காலங்களின் எவ்வித பணியும் செய்யாதவர்களை அரசியல் கட்சி போல வாக்குக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

எனவே, அன்பு கூர்ந்து இது போன்ற போலித் தமிழ்ச் சங்கத்துக்கு இனிவரும் காலங்களில் ஆதரவு தரவேண்டாம் எனத் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள்
புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள்
தொடர்புக்கு: +91 9443105825