இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி, 14 நவம்பர், 2020

தமிழ்ச் சங்கம் அரசியல் கட்சிகளுக்கு தாரைவார்ப்பு

புதுவைத் தமிழ்ச்சங்கப் பாதுகாப்புக் குழு வணக்கம் நண்பர்களே.
நீங்கள் படத்தில் காண்பது ஒரு தேசியக் கட்சியின் அலுவலகம் அல்ல.

1967முதல் பல தமிழறிஞர்கள் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழர் கலை மேம்பாட்டுக்கென பாடுபட்டு  உருவாக்கியபுதுவைத் தமிழ்ச் சங்கம் குடி கொண்டிருக்கும் அரங்கமாகும்.
 
இங்கு நேற்று 07.11.2020 ஓர் அரசியல் கட்சிக்கூட்டம் முன் வாசல் பூட்டப்பட்டு நடைபெற்ற காட்சி. இன்று 08.11.2020 பிற்பகல் வரை அங்கு கொடிகள் பறந்துள்ளன.அந்த அரங்கம் மற்றும் அதன் இணைப்புக்கட்டடம்   மக்கள் வரிப்பணத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேனாள் மாண்புமிகு புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டவையாகும். இங்கு வாசலைப் பூட்டிய  கூட்ட அரங்கில் அதன் சுற்றுச்சுவர்களில்  ஒரு தேசிய கட்சி கொடிகள் பறக்கும் காட்சியை பார்க்கிறோம்.மேலும் அதன் இணைப்புக் கட்டடத்தில் வேறு ஒரு தேசிய எதிர்க்கட்சியின் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்குகிறது அதையும் காண்கிறோம்.

பிரமாதம் 

நாம் இதற்கு புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடுகள் செய்து பதவிக்கு வந்த தற்போதைய ஆட்சிக்குழுவினரை பாராட்டுவோம்.ஒரே கூரையின் கீழ் எதிர் எதிர் இரு  தேசிய இயக்கங்கள் வேறு எங்கும் காண முடியாத அற்புதக் காட்சி.

ஆனால் சட்டத்தையும் ஒப்பந்தத்தையும் மீறி இந்த இடங்களை வாடகைக்கு விட்டுள்ளனர்என்று மக்கள் மத்தியிலே கருத்து உள்ளது..கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு இருந்த மரத்தை வனத்துறை அனுமதியின்றி வெட்டினர்.
தற்போது ஓராண்டு ஆயிற்று.தேர்தல் பரப்புரையில் தலைவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பல மரங்கள் நடுவோம் என்றார்.அதனை நாம் நிச்சயமாக நினைவுபடுத்தியாக  வேண்டும். புதுவைத் தமிழ்ச் சங்க இடங்களை அரசியல் கட்சிக்கூட்டங்களுக்கு தரலாமா. இது சரியா மாநில அரசு மக்களுக்கு பதில் சொல்லவேண்டும்.

கவிஞர் புதுவை கோ செல்வம் 
ஒருங்கிணைப்பாளர் 
புதுவைத் தமிழ்ச்சங்கப் பாதுகாப்புக் குழு
08.11.2020