இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி, 15 ஆகஸ்ட், 2020

நமது முரசு சுவரொட்டி விளம்பரம் - தமிழ்ச் சங்கம்

தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

விதி மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகை: புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

விதி மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகை: புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

By செ.ஞானபிரகாஷ்
Published: 12 Aug, 20 08:34 pmModified: 12 Aug, 20 08:34 pm
*இந்து தமிழ் செய்தி*
 
விதியை மீறி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகைக்கு விட்டது உட்பட பல்வேறு காரணங்களால் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்தக் கோரி புதுச்சேரி அரசை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டது. இடம் தமிழ்ச் சங்கத்துக்குச் சொந்தமாக இருந்தாலும், கட்டிடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் (DRDA) சொந்தமானது.

இக்கட்டிடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைக்கவே நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளைத் தணிக்கைச் செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை உட்பட பல விஷயங்களைச் சுட்டிக்காட்டி, கட்டிடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் அறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைக் கையகப்படுத்தவும், சங்கப் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இன்று அண்ணா நகரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் அழகர், இலக்கியப் பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம், தன்னுரிமைக் கழகத் தலைவர் சடகோபன், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ரகுபதி உட்பட 12 அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "புதுவைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சங்கக் கட்டிடத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஒப்பந்தத்தை மீறி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வாடகை விட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை அறிந்தும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் இழைத்துள்ளனர். இதனால் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
 

புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமையைக் கட்டித்து ஆர்ப்பாட்டம்


காசி வில்லவன் அவர்களின் முகநூல் பதிவுக்கு பதில்-2

காசி வில்லவன் அவர்களுக்கு பதில்-2

புதுவைத் தமிழ்ச்சங்கத்  தேர்தலில் 
யாருக்கு உங்களின் வாக்கு?


//ஒரு அன்பர் கொஞ்சமும் சளைக்காமல் கேள்விக் கணைகளையும் குற்றச்சாட்டுகளையும்  முகநூலில் பதிவிட்டுக் கொண்டே வருகிறார் ஒரு கர்ம யோகியைப் போல. ஒரு சங்கம் குறிப்பாகத் தமிழ்ச்சங்கம் தப்புத்தாளம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறை, எடுத்துக் கொள்ளும் சிரமப்பாடுகள்,செய்யும் செலவு, செலவழிக்கும் நேரம் குடும்பத்தில் தன் மனைவி மக்களுக்காகக் கூட இந்த அளவு செய்து இருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது//

*உண்மைதான். பல கேடு கெட்ட மனிதர்கள் உண்மையை பேசாதபோது அவரின் செயல்பாடு பாராட்டத்தக்கது. நல்லது செய்யும் ஒருவர் பெயரைக் கூட உங்களால் வெளிப்படையாகக் கூற முடியவில்லையே ஏன்?*


//சொல்லப்போனால் இவர்கள்தான் திரு முத்துவின் தலைமையிலான   அணியினரின் வெற்றிக்குக் கங்கணம்  கட்டிக் கொண்டு  உழைப்பவர்கள்  என்று கூட சொல்லத் தோன்றுகிறது. கைப் பணத்தைச் செலவு செய்து திரு முத்து விற்குப் பேர் புகழ் விளம்பரம் அரசியல் செல்வாக்குத் தேடிக்கொடுப்பதில் இவர்களே முன்னணி வகிக்கிறார்கள். //

*உண்மைதான், ஆடம்பர மோகத்தினால் வாழும்  ஒரு பெண்ணை விபச்சார வழக்கில் காவல் துறை கைது செய்தது. பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் அவளது படமும் வெளிவந்தது. அவள் சொன்னாள் ஆகா என்ன அருமை!!. என் விபச்சாரத் தொழிலுக்கு இந்த காட்சி ஊடகங்கள் இப்படி ஒரு இலவச விளம்பரத்தை கொடுத்துள்ளார்களே நன்றி என்றாளாம்! - வேறுபாடில்லை*


//இவர்கள் வெளியிடும் அறிக்கைகள்,முன் வைக்கும் குற்றச்சாட்டுகள், செய்தித்தாள் விளம்பரங்கள் அவரது இருப்பை, வெற்றி வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளன.//

*உண்மைதான் ஐயா, பத்திரிக்கை அறிக்கைகளில், இவர்களை பித்தலாட்டக்கார்கள் என்று தான் அறிக்கை அளிக்கிறார்கள். பலரை உறுப்பினராக சேர்க்க அவரே பணம் கட்டுவதாக சொல்கிறார். அப்படி பணம் கட்டினாரா? வெளிப்படையாக ஏன் தெரிவிப்பதில்லை. "பொய்யர்கள்" என்று சொன்னாலும் அதனை விளம்பரம் என நம்பும் முட்டாள்களையா அவர் உறுப்பினராக சேர்த்துள்ளார். மோசம் ! படுமோசமையா !!.*


//. எதிரியை வீழ்த்த இவர்கள் வகுக்கும் வியூகங்கள் அவரை விழிப்படையவும், விறுவிறுப்படையவும்  செய்து விடுகின்றன.//
 
*இவர்கள் எதிரிகளா? இல்லை நாம் அப்படி கருதவில்லை.*

 *பித்தலாட்டங்களை மறைக்க விறுவிறுப்பாகவும் விழிப்பாகவும் இருக்கிறீர்கள் என்பதை அறிவோம்*

//"இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் " என்ற பழியிலிருந்து இவர்கள் தான் அவரைக் காப்பாற்றி வருகிறார்கள். அந்த வகையில் அவர் அவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் .நல்லது. //

*உண்மைதான் ஐயா, “கெடுப்பார் இலனும் கெடும்” ஆனால், முத்து அவர்களின் புரட்டுகளுக்கு முட்டுக் கொடுத்து அவரை கெடுப்பவர்களே உங்களைப் போன்ற உடனிருப்பவர்கள் தானே.*

*அதனை இடித்து திருத்த முயற்சிப்பவர் யார் என்பது உங்களுக்கு தெரிகிறது. கெடுக்க முயற்சிக்கவில்லை. தெரிந்தும் இப்படி பேசுகிறீர்கள். ஆனால், அந்த கேவலத்துக்கு வக்காலாத்து வாங்கி பதிவு போடுவது மேலும் ஒரு கேவலம் எனப் படவில்லையா ஐயா, ஒரு வெற்றுத் தாள் விருதுக்கும், போலி புகழுக்கும் ஆசைப்பட்டு இப்படி பதிவு போடுவதை விட்டுவிடுங்கள். திருத்த முயற்சி செய்பவரின் பின் நில்லுங்கள் காலம் உங்களை வாழத்தும்.*

//இவர்களின் குற்றச்சாட்டு அனைத்தையும்  புறந்தள்ளி விட்டு ஒன்றை மட்டும் பார்ப்போம்.  எல்லோரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கித் தேர்தல் நடத்துகிறார் என்பது முக்கியமானது. . அவர் வீட்டு வேலைக்காக யாரையும் 

 வாங்கி வியாபாரம் செய்யவில்லை. கைப்பணத்தைச் செலவு செய்து உறுப்பினர்களைச் சேர்த்து சங்கத்தை வலிமை படுத்திச் செயல்படுகிறார்.//

*பணத்தை செலவழித்து இப்படி செய்வது சனநாயக முறை தேர்தலா? வியாபாரமல்லவா? தமிழ்ச் சங்கம் தமிழ் அறிஞர்களுக்கான இடம். இதில் அன்றாட வாழ்க்கையையே ஓட்ட போராடி வரும் எளிய மக்கள் எப்படி மக்களுக்காகவும் மொழிக்காகவும் தொண்டாற்ற முடியும். கேள்விகள் கேட்க இயலாத தமிழ்ப் பணிகளில் எவ்வித தொடர்பும் இல்லாத எளிய மக்கள் பலரை உறுப்பினராக சேர்த்துள்ளார்*

*வியாபாரிகள் சங்கத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை உறுப்பினராக்கி இருக்கிறீர்களே வியாபாரம் செய்யாதவர்களை அவர்கள் உறுப்பினராக்கிக் கொள்வார்களா?.*

*வாக்குக்காக இவர்களை எல்லாம் சேர்த்துவிட்டு  தமிழ் வளர்ப்பதாக ஒரு மோசமான விளக்கம் அளிப்பது மோசடியானது.*


//முடிந்தால் மற்றவர்கள் உறுப்பினர்களைச் சேர்த்து தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியைப் பிடிக்க யாரும் தடை இல்லையே...//

*தமிழறிஞர்கள், உணர்வாளர்கள் என யாரையும் தமிழ்ச் சங்கம் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதில்லை. பெரும்பாலும் தலையாட்டி பொம்மைகள், உணர்வு மழுங்கிப் போனவர்கள். கூலிக்கு மாரடிக்கும் சில அடிமைகளை சேர்த்து வைத்துக் கொண்டு அவர்களுக்கும் அரசியல் தேர்தல் போல பரிசுகள் கொடுத்து பெறும் வெற்றி கேவலமானது.*


//அப்படி  இருக்க அவர் பணம் கொடுத்து எல்லோரையும் விலைக்கு வாங்கி விட்டார் என்று எப்படிச் சொல்வது?//

*பலர் விருதுக்கு விலைபோனார்கள்.*

//தமிழ் அறிஞர்கள், புலவர்கள் என்ன விலைக்கு வாங்கும் சந்தைப் பொருளா?/ /

*பாவேந்தர் பாரதிதாசன் குடும்பத்தில் கடைசி நேரத்தில் “கோ.பாரதியை” சரி கட்டினீர்கள். ஐயா ஆதிகேசவனுக்கு இருக்கை இல்லை "பாரதிக்கு " இடம் என பேசியதாக செய்தி வந்தது. மணிமேகலை அவர்களையும் சரி கட்டி வந்தீர்கள் ஆனால், கடைசியில் “கோ.செல்வம்” போராடிய பின் பாரதிதாசன் குடும்பத்தின் கைக்கு மீண்டும் தமிழ்ச் சங்கம் போய்விடுமோ என பயந்து எல்லோரையும் கழற்றி விட்டார்கள்.*

//அல்லது பணத்திற்காக சுய மரியாதையை விட்டுக் கொடுக்கும் சுரணை கெட்டவர்களா?//

*தமிழ்ச் சங்க உறுப்பினர்களை நீங்கள் அப்படித்தான் நினைக்கிறீர்கள். நாங்கள் தெரிந்தும் ஆதரிக்கும் சிலபேரை அப்படி நினைக்கிறோம்*

//காலத்தின் கட்டாயம் திரு.முத்துவைப் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமை ஏற்க வைத்து இருக்கிறது என்பதை யாரே மறுக்க வல்லார்? நிற்க.//

*உங்கள் குரலுக்கு நிச்சயம் ஒரு கூலி உண்டு*.

//மக்களாட்சி முறையில் ஏதேனும் ஒரு அணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்ய முடியும்..…... பல்வேறு செயல்பாடுகளையும்  சீர்தூக்கிப் பார்த்து  என் தரப்பிலான காரணங்களை முன் வைக்க விழைகிறேன்.//
 
    //1.புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழாக் கொண்டாட்டம்.  புதுவை தமிழ் இலக்கிய வரலாற்றில் அது ஒரு மைல் கல்.  திரும்பிப் பார்க்க வைக்கும்  விழாவாக அது பொலிந்தது. அறிந்ததே .இதில் சுரண்டிச் செல்ல என்ன இருக்கிறது?  //
 
  *உறுப்பினர்கள் பலருக்கே அழைப்பு இல்லாமல் எவருக்காக இந்த விழா நடத்தினர். பங்கேற்பாளர்களும் வெற்று சால்ரா கும்பல் மட்டுமே கலந்து கொண்ட “மாநாடு” இது*.                                                                                             

2. //திருவள்ளுவர் சிலை திறப்பு விழா. தமிழின் ஒட்டு மொத்த அடையாளமாகத் திகழும் வள்ளுவருக்குச்சிலை எடுத்து விழா நடத்தியது புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் மற்றுமொரு சாதனை //
 
*திருவள்ளுவர் சிலை இல்லாத ஊருக்கு மட்டும் சிலை கொடுப்பவர்களிடம் புதுவையில் இல்லை எனப் பொய் சொல்லி வாங்கி வைத்த சிலை இது பெருமையா*? 
 
*திருவள்ளுவர் கருத்துக்கு எதிரானது இது*.      
         
 3. மறைந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளின்  பிறந்த நாள், நினைவு நாள்களில் விழா எடுத்தது அவர் தம் பெருமைகளை நினைவு கூர்ந்தது;  மலர் அஞ்சலி செய்து மரியாதைசெலுத்தியது.// 

*இதைத் தவிர நீங்கள் எதுவும் செய்ததில்லை. ஆனால், செத்துப் போன தமிழ்ச் சங்க உறுப்பினர்களை கண்டுக்க மாட்டீங்க! அவங்க செத்தாங்களா இருக்காங்களான்னு பார்க்காம தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்த்து வைத்துள்ளீர்கள் இதில் பெருமை கொள்ள என்ன உண்டு*

//4.தமிழுக்கு அரும் பணி ஆற்றியவர்களைக் கண்டெடுத்து விருது வழங்கி சிறப்பித்தது//

*சில தமிழறிஞர்கள் உணர்வை மழுங்கடிதீர்கள். உங்களை எதிர்த்துப் போராடாமல் இருக்க வழங்கிய விருதுகள் அவை. சிலருக்கு வழங்கியது அடிமை சாசனம்.*

//5.கடல் கடந்த அயலகத் தமிழர்களுக்கும் கலை இலக்கிய அங்கீகாரம் அளித்து விழாவெடுத்துச் சிறப்பித்தது. //

*உலகம் முழுதும் அம்பலப்பட்டுக் கிடக்கிறது புதுவைத் தமிழ்ச் சங்கம். சமூக ஊடகங்கள் தமிழ்ச் சங்கத்தை கழவி கழுவி ஊற்றுகிறது. இது தான் சிறப்பா?*

6.தொடர்ந்து நூல் வெளியீட்டு விழா, கவியரங்கம், .........

*இப்படி எல்லாம் செய்து தமிழ் வளர்த்தீர்களா?  ஆங்கிலத்தில் தலைப்பெழுத்திட்டு தமிழ் தான் எனப் பேசும் போதே நீங்கள் எப்படி தமிழ் வளர்க்கிறீர்கள் என்பது அறிந்தது தான்* 

//வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டு கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு , தமிழகர்களின் உலகு தழுவிய உறவிற்கு அடித்தளம் அமைத்தது .//

*ஒரு சேதி தெரியுமா உங்களுக்கு இவர்களே விருதுப் பட்டயத்தை புதுவையிலேயே செய்து கொண்டு வெளிநாட்டுத் தமிழர்களிடம் அங்கே கொடுத்து  வழங்கப்பட்டதாக புகைப்படம் எடுத்துக் கொண்டு இங்கு வந்து பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கும் நிகழ்ச்சியை சொல்கிறீர்களா? இதைத்தான் உலகம் தழுவி செய்கிறீர்கள் என்பதைப் பலர் அறிவர்?.*

///திரு முத்து அவர்களின் அணிக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்.//

துதிபாடுவது நமக்கு  வேலை இல்லை.///

*துதி பாடி முடித்து விட்டு இல்லை என்கிறார்களே*!

 தமிழுக்காக இணைவோம் வாருங்கள் நண்பர்களே !   

*மானமுள்ளத் தமிழர்கள் யாரும் வர வாய்ப்பில்லை.*

//கவிஞர் காசிவில்லவன்//

*ஐயா கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி உங்கள் முகநூல் கணக்கில் உங்கள் பெயர் "Danassou Kasivillavan"  என ஆங்கிலத்தில் (பிரஞ்சு) தான்  உள்ளது.  மேலும் சில அடிமைகளும் இப்படித்தான் பெயரை ஆங்கிலத்தில் வைத்துள்ளார்கள் இப்படி வைத்துக் கொண்டு தமிழ் வளர்க்கிறோம் என்று பேசுவது நகைப்புக்குரியது.*

*அன்புடன்- இரா.சுகுமாரன்.*