slide

slide2
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு ...!
slide2
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு ...!
slide3
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
slide4
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...

சனி, 9 பிப்ரவரி, 2019

சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலரும் மனித உரிமை செயல் பாட்டாளரான கோ. சுகுமாரன்- புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் என்பதை விரிவாக பேசினார்.

தமிழ்ச் சங்கத்தை முன்னேற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்காக எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருட்டிணன் அவர்கள் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தின் மேற் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக  முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ஒதுக்கி இருந்தார். ஆனால், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அந்த பணத்தை பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த தொகை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது.

மிழ்ச் சங்க கட்டிட ஆவணம் தொலைந்து விட்டது என்று சொல்கிறார்கள். பல ஆண்டுகளாக புதிய ஆவணத்தை ஏன் இவர்கள் விண்ணப்பித்து பெறவில்லை என்பது  மர்மமாக இருக்கிறது. .. உள்ளிட்ட முறைகேடுகளை பட்டியலிட்டார்.....


சீனு தமிழ்மணி புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை கண்டித்து உரை

புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக பல ஆண்டுகளாக போராட வேண்டியிருந்தது. ஆனால், எங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் "குப்பை கூட்டும் பெண்ணை" கூட வாக்கு போடுவதற்காக இப்போது சேர்த்திருக்கிறார்கள்.

முத்து அவர்களின் கல்லூரியில் படிக்கும் பெண்கள் பலரை  புதுச்சேரியில் போலி முகவரி போட்டு  வாக்கு போடுவதற்காக சேர்த்து தமிழ்ச் சங்கத்   தேர்தலில் வெற்றி பெற்றார்கள் இப்போதைய நிர்வாகிகள்.

புலவர் பட்டம் பெறவில்லை என்பதற்காக புரட்சிக்கவி பாரதிதாசனைக் கூட உறுப்பினராக்க மறுத்தது  அன்றைய புதுவைத் தமிழ்ச் சங்கம் அன்று ஆனால் இன்றைய நிலைமையைப் பாருங்கள்.  அதன் கேட்டினைப் பாருங்கள்...!


புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் -முத்து

பார்வேர்டு பிளாக் கட்சியின் முத்து அவர்கள்  பேசுகையில் புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்களா என்று பார்த்து உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. குறிப்பாக சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. அது ஒரு சாதிச்சங்கமா தமிழ்ச் சங்கமா?

புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடு - ம.இளங்கோ

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் எப்படி நடந்தது. அதில் எந்தவடிவில் முறைகேடாக நடந்து கொண்டனர் என்பதை சுருக்கமாக பேசுகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கையை திடீரென நிறுத்தினர். எல்லா வேட்பாளர்களையும் இரவில் வெளியேற்றுகிறார்கள். அவர்கள் சாப்பிட வேண்டுமாம். 

நள்ளிரவில் ஏல்லோரையும்  வெளியேற்றி விட்டு வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்தார்கள்.  வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என எதிர் அணியினர் புறக்கணித்து  வெளியேறிய பின் தாங்களாகவே வாக்கை எண்ணி வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டனர் தற்போதைய தமிழ்ச் சங்க நிர்வாகிகள்.

என்று தேர்தலில்  போது பார்வையாளராக பங்கேற்ற  தந்தைப் பெரியார் திராவிடர்க் கழகத்தின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் ம. இளங்கோ  தன் கருத்தை பதிவு செய்தார்.



லோகு அய்யப்பன் - புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து உரை


கடந்த  2013 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேட்டை கண்டித்து  நீதி மன்றம் சென்ற போது நீதிபதிகள் எப்படி நடந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன. ஏன் நீதிமன்றங்கள்  இப்படி செயல்படுகின்றன என விரிவாகப் பேசினார் பெரியார் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் அவர்கள்.



தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து - ப.முருகேசன்

சாகித்திய அகாதமி உறுப்பினரும், புதுவை வரலாற்றை தேடித்தந்த புதுவை  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களைக் கூட உறுப்பினராக சேர்த்துக் கொள்ள மறுத்த தமிழ்ச் சங்கம் அது.  இவர்கள் அறிவாளிகளை மறுத்து செயல்படுகிறார்கள்.

என்னையும்  உறுப்பினராக சேர்க்கவில்லை, என தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன்  வருத்ததுடன்  பகிர்ந்து கொண்ட தகவலை  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ப.முருகேசன் அவர்கள்.

2013 ஆம் ஆண்டு தமிழறிஞர்கள் இல்லாத தமிழ்ச் சங்கம் என்று நாங்கள் குறிப்பிட்டு போராட்ட முன்னெடுப்பு செய்த போது அவரை உறுப்பினராக்கினர்.

புதுவைத் தமிழ்ச் சங்க முறைகேடுகள் - பிராங்கிளின்

வியாழன், 7 பிப்ரவரி, 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு புதுவை அஞ்சலகம் எதிரில் நடந்தது.
இதில் எங்கள் பதிவேட்டில் 85 பேர்கள் கையொப்பம் இட்டிருந்தனர். பதிவு செய்யாமல் 12 பேர் என மொத்தமாக 97 பேர்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்றதால் வருவதும் போவதுமாக இருந்தனர் அமர்வதற்கு நாற்காலிகள் ஏற்பாடு செய்யவில்லை என்பதால் பரவலாக நின்றிருந்தனர்.
இது ஒரு அடையாள ஆர்ப்பாட்டமாகும், என்பதால் பெருமளவு உறுப்பினர்களை அழைக்கவில்லை. ஆனால் நிகழ்வு குறித்து அஞ்சலில் சிலருக்குத் தெரிவித்து இருந்தோம். பலருக்கு போலி முகவரி கொடுத்து உறுப்பினராக்கப்பட்டதால் பல கடிதங்கள் எங்கள் முகவரிக்கே திரும்பி வந்துள்ளது.
தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்வுகளை விரைவில் நடத்த இருக்கிறோம். அதில் பகுதிவாரியாக இணைத்து செயல்பட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
வருகை தந்த அனைவருக்கும் புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுவைத்  தமிழ்ச் சங்கம்  பிப்ரவரி 2019 இல் பொன்விழா மாநாடு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சிறிய நிகழ்ச்சியை தாங்களே முடிவு செய்து நடத்திவருகின்றனர். ஆனால், பன்னாட்டு அளவில் சில இலட்சங்களை செலவு செய்து நடத்த இருப்பதாக அறிவித்துள்ள தமிழ்ச் சங்கம் பொதுக்குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இப்படி கமுக்கமாக உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல் பொன்விழா ஏற்பாடு செய்து நடத்துவது என்பது ஏற்கனவே செய்த நிதிமுறைகேடுகளை மூடி மறைப்பதற்காகவே செய்யப்படுவதாக தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

இது போன்ற முறைகேடுகளை தமிழ்ச் சங்கம் தொடர்ந்து செய்துவருவது  மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

இதனை கண்டித்து புதுச்சேரி அஞ்சலகம் எதிரில்  பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழறிஞர்கள் ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்க!!

தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடித நகல் கீழே



செவ்வாய், 1 ஜனவரி, 2019

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

குடும்ப சொத்தாகும் புதுவைத் தமிழ்ச் சங்கம்

புதுச்சேரி தமிழ்ச் சஙகம் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்கான சங்கம் என்று நீங்கள் கருதினால் அது மிகவும் தவறான கருத்தாகும்.

சிலர் கூற்றுப்படி அது ஒரு சாதிச் சங்கம் போல் செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டுமானால் அந்த குறிப்பிட்ட சாதியாக இருக்க வேண்டும் என்ற நிலை  புதுச்சேரியின் அவலமாகும்.



தமிழுக்கு தொடர்பு இல்லாதவர்களைக் கூட சாதி அடிப்படையில் அவர்களிடம் உறுப்பினர் கட்டணம் கூட வாங்காமல் இப்போது பொறுப்பில் இருப்பவர்களே அந்த தொகையை செலுத்து உறுப்பினர்களாக சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் பல தமிழ் அறிஞர்கள் பிற சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தமிழ்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை.  

இந்த வார இதழில் வந்துள்ள செய்தியை படியுங்கள். பல செய்திகள் வெளிவரும்,

தமிழ்ச் சங்கத்தில் தலைவராக இருந்த முத்து அவர்கள்  ஒரு செல்வந்தர் எனவே, வெளி நாட்டில் உள்ள தமிழர்களுக்கு நிதி அளித்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தமக்கு விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வாராம். அது போலத்தான் பல நாடுகளில் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டதாக சிலர் என்னிடம் தெரிவித்தனர்.





தமிழர்களையே உறுப்பினராக்க மறுத்த தமிழ்ச்சங்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை  உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியது புதுச்சேரியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

- பாண்டி வாய்சு
#புதுவைத்தமிழ்ச்சங்கம்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து முன்று சுவரொட்டிகள்

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதின்  முதலாவதாக இருப்பது  புதுச்சேரி சமூக சனநாயக இயக்கங்கள் மூலம் ஒட்டப்பட்டச் சுவரொட்டி



புதுச்சேரியில் தமிழ்ச் சங்கத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்தல் நடத்தப்படுகிறது. இதை அறிந்த புதுவையின் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஒருங்கிணைந்த அமைப்பான சமூக சனநாயக இயக்கங்கள் தமிழ்ச் சங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

புதுவை ஊழல் தேர்தல் பற்றிய செய்திகள்

புதுவைத் தமிழ்ச் சஙகத்தில் தேர்தல் எப்படி நடந்தது என்பது பற்றிய செய்திகளை இந்த இதழ் வெளியிட்டுள்ளது. 

தமிழ் உணர்வாளர்களைக் கொண்டு நடத்த வேண்டிய தேர்தல்  அரசியல் கட்சிகளின் தேர்தலைப் போல சீர்கெட்டு நடந்தது கசப்பான உணர்வை ஏற்படுத்தியது.