இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் 2020 - முறைகேடாகவே தொடங்கியது

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் 2020 - 2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல்  23-2-2020 அன்று நடக்கும் என கடந்த  1-2-2020 அன்று கூட்டப்பட்ட சிறப்புக் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலில் தொடக்கமே முறைகேடாக தொடங்கியது.

முறைகேடு-1 பொதுக்குழுக் கூட்டத்திற்கு பலருக்கு அழைப்பு அனுப்பாமல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழுவில் உறுப்பினர்கள் யாருக்கும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. கேள்விகள் கேட்க முயன்றவர்களை அடியாட்களை வைத்துத் தாக்க முயன்றனர்.

முறைகேடு-2 :   வழக்கம் போல இந்த முறையும் இறந்தவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உறுப்பின்ர்களின் 35 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள்  வாக்காளர் பட்டியலில் முகவரிகள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தலில் நிற்பவர்களை அலைக்கழிக்கும் முயற்சியாகும்.

எல்லா உறுப்பினர்களுக்கும் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பி இருந்தால் அந்தக் கடிதம் திரும்பி வந்திருக்கும். அதை வைத்து முகவரி சரி செய்திருக்க முடியும். ஆனால், இவர்கள் பலருக்கு அழைப்பு அனுப்புவதிலை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. நாங்கள் அப்படித்தான் இதனைக் கண்டறிந்தோம்.


முறைகேடு - 3வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வெளியிடப் படவில்லை. இதனால் கள்ள வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளது.  தமிழ்ச் சங்க தேர்தலில் வாக்களிக்க தமிழ்ச் சங்கம் அனுப்பிய் கடிதம் அல்லது தமிழ்ச் சஙகம் வழங்கிய அடையாள அட்டை இரண்டில் ஒன்று வாக்களிக்க போதுமானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் அனுப்பிய கடிதத்தை  யார் வேண்டுமானாலும் எடுத்து வந்து கள்ள வாக்கு பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக