இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 1 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்க தேர்தல் முறைகேடுகள் குறித்து பேராசிரியர் நா. இளங்கோ





கூகுள் குரல் தட்டச்சு மூலம் தட்டச்சிடப் பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.!!..



புதுச்சேரியில் தமிழ்ச்சங்கம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை சந்திக்கிறது. இப்பொழுது இருக்கிற ஆட்சிக்குழு அதாவது, கடந்த ஆட்சிக் குழு மூன்று முறை அதனுடைய தலைவரும் செயலரும் பொறுப்பேற்று தமிழ்ச்சங்கத்தின் நடத்தினார்கள். இப்போது நான்காவது முறையும் அவர்கள் போட்டியிடுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் வெற்றி பெறுவதற்கு உரிய வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதற்கான சில காரணங்களும் அவர் வைத்திருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், அவர்களுக்கு வேண்டிய கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர்கள் சேர்த்து உறுப்பினராக வைத்திருக்கிறார்கள். தனக்கு ஓட்டுப் போட கூடியவர்களை பொதுமக்களில் தமிழறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் யாரேனும் உறுப்பினராக சேர வேண்டும் என்று விரும்பினால் அவர்களை அவர்கள் அவர்களை அனுமதிப்பது இல்லை. எனவே தனக்கு வேண்டியவர்களை வைத்து நடத்துகிற ஒரு தேர்தலாக தமிழ்ச் சங்கத் தேர்தலில் இருக்கிறது.

கடந்து மூன்று முறை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது ஒரு முறை கூட அவர்கள் முறையாக பொதுக்குழுவை கூட்டவில்லை ஒரு முறை கூட அவர்கள் முறையாக கணக்கு காண்பிக்கவில்லை பொதுக்குழுவில் அதுகுறித்து விவாதிக்க வில்லை வங்கிக்கணக்கு முறைப்படி இப்பொழுது இருக்கிற பொருளாளர் ஒரு பெயரில் மாற்றப்படவில்லை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இந்த சங்கம் ஒரு காலாவதியான சங்கம் என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் கடந்த 2020 ஜனவரி வரை. இப்படி ஒரு காலாவதியான சங்கமாக  அதை நடத்திக்கொண்டு, வசூலிக்கிற பணத்திற்கு சரியான கணக்கும் காட்டாமல் பொதுக்குழுவை கூட்டாமல், விவாதிக்காமல், தமிழுக்கு அபூர்வமான எந்தப் பணியையும் செய்யாமல் இந்த சங்கம் இயங்கி கொண்டு இருக்கிறது. 

குறிப்பாக, முத்து அவர்களும், பாலசுப்பிரமணியன் அவர்களும் இந்த சங்கத்தின் உடைய தலைவர் செயலராக இருந்து தன்னை வளர்த்துக் கொள்வதில் தங்களுடைய புகழை பெருக்கிக் கொள்வதில் தங்களுக்கு விருதுகளை வாங்கிக் கொள்வதில் அவர்களுக்கு உள்ள ஆர்வம் தமிழ் வளர்ச்சிக் தமிழுக்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்வதற்கு அவர்கள் செயல்படுத்தவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் அவர்கள் நடத்தியதெல்லாம் வெறும் விழாக்களும் விருது வழங்கும்  நிகழ்ச்சிகளும் தான். விருதுகளும், நிகழ்ச்சிகளும் ஒரு அமைப்பிற்கு தேவைதான். அது எப்போதாவது நடக்கலாம், ஆனால், அதையே முழுநேரப் பணியாக எடுத்துக் கொண்டு அவர்கள் செய்கிறார்கள். தமிழுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கோ, தமிழ் ஆட்சி மொழியாக  ஆவதற்கோ தமிழை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கும் தாய்மொழி வழிக் கல்விக்கோ, பெயர்ப் பலகைகளில் தமிழ் மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவோ எதற்காகவும் அவர்கள் குரல் கொடுத்ததில்லை. அதற்காக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை, அதற்காக போராட்டங்களை நடத்தியது இல்லை. ஒரு சங்கம் ஜனநாயக பூர்வமாக இயங்க வேண்டும் என்கிற அந்த அடிப்படையை மீறி, தனிநபர் சொத்து போல தனி நபருடைய கையிருப்பில் வைத்துக் கொள்கிற ஒரு தனியார் அமைப்பு போல தமிழ்ச்சங்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


 நாங்கள் இதை எதிர்த்து தான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சொல்லும் பதில் என்னவென்று சொன்னால், எல்லாம் பொய் தான்!!. எல்லாம் நாங்கள் சரியாக செய்கிறோம்! சரியாக செய்கிறோம்!! குறிப்பாக முத்து வந்த பிறகுதான் உலகத்திற்கே தமிழ்ச்சங்கம் தெரிந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்!!! உலகத்திற்கு தமிழ்ச் சங்கம் தெரிந்தது, எப்படி என்றால், வெளியிலிருந்து வருகிறவர்கள் அழைத்து வந்து இவர்கள் விருது கொடுக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு போகும்போது அங்கே போய் விருது வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அதனால், தெரிகிறதேத் தவிர தமிழுக்குப் பணிசெய்து இந்த தமிழ்ச் சங்கம் வெளியே தெரியவில்லை.  

எனவே, தொடர்ந்து இதனை ஒரு குற்றச் சாட்டாக வைத்துக் கொண்டிருக்கிறோம் எங்களில் யாருக்கும் பதவி ஆசை கிடையாது குறிப்பாக நான் எந்த பதவிக்கும் எந்தக் காலத்தில் போட்டியிட விரும்பாதவன் எங்களுக்கு பதவி நோக்கமல்ல, யார் இருக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கு நோக்கமல்ல. தமிழ்ச்சங்கம் தமிழை வளர்க்கிற சங்கமாக தமிழுக்கு ஆக்கபூர்வமான பணியாற்றக் கூடிய சங்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடந்த 9 ஆண்டுகளாக அதை செய்யாதவர்கள், இப்பொழுது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதை செய்வார்கள் என்று நம்புவதற்கு என்னுடைய மனம் இடம் தரவில்லை. எனவே, இப்படி தொடர்ந்து அவர்களை அந்த பொறுப்பில் வந்தால் இது தனிநபர் கைக்கு மாறி, தனியார் சொத்து போல ஆகிவிடும். காலங்காலமாக இந்தத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி அதற்காகப் பாடுபட்ட தமிழறிஞர்கள் உடைய நம்பிக்கையும் கனவையும் தகர்ப்பதாக அது மாறிவிடும். எனவே, வியாபாரிகளின் கையில் தமிழ்ச்சங்கம் போய்விடக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் சிந்திப்பீர்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக