இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

விருதுக்காக நடத்தப்படும் புதுவைத் தமிழ்ச் சங்கம்


நன்றி :  பாவலர். சு.ச

இதோ அவர் வரிகள்:

ஏன்  இதன்மேல் ஏக்கம்? 
===================*

விருதுகளை  விற்றுவரும்
வணிகக்  கும்பல் 
     விதவிதமாய் 
     சந்தைகட்டி
     வீண்அ  லம்பல்
அருவருப்பாய்  இருக்கிறதே
அவர்கள்  கொள்கை 
     அறிவுமது  
     நழுவிதத்தான்
     அலையும்   செய்கை 
எருமுட்டை  மதிப்பும்தான்
     அதற்கும்  உண்டா? 
     எவரெவரோ
     பெறுகின்றார்
     எக்குத்  தப்பாய்
இருதயத்தில்  கைவைத்தே
     எண்ணிப்   பாரீர்
     எதற்காக  
     அவைவாங்க
     காசு  தாரீர்! 

குழுவாகச்  செயற்பட்டு
கூட்டம்   கூடி
     குள்ளநரி     
     மனத்ததுடனே
     எங்கும் ஓடி
புழுவாக நெளிந்துத்தான்
     புரட்டுப்  பேசி
     புதுப்பொலிவாய்
     நடப்பதுபோல்
     வேடம்   காட்டி
எழுச்சியென்றும்
புரட்சியென்றும்
     விருதை   நீட்டி
     இழிசெய்கை
     புரிவோரே
     இனித்தி  ருந்து
அழுக்குகளை  அகத்தினுள்ளே
     சுமத்தல்  நீக்கு 
     அரந்தமிழை  
     அசிங்கமாக்கும்
     உமது   போக்கு! 

தகுதிக்கே  மதிப்பளிக்க
     தமிழ்தான்  மேவும்
     தரம்மலிந்த 
     பரிசுகளால்
     தரணி  தாழும்
மிகுதியாக  
பணமிருந்தால்
     மிடுக்காய்  வந்து
     மேடைகளில்  
     நலம்புரிந்து
     மேன்மை  காண்க
பகுத்தறியும்  பண்பாட்டை
     புதைத்தே  விட்டு
     படித்தவரும்
     பணம்கொடுத்து
     பரிசு  பெற்றால்
நகைப்பாகும்  
நாணமற்ற
    நிலைப்பா  டாகும்
    நாகரிகம்  பூமியிலே
    நச்சாய்  மாறும்!! 

பாவலர் சுச.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக