இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதன், 12 பிப்ரவரி, 2020

தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு -ஆணையருக்கு திரு. பராங்குசம் அவர்கள் புகார்

அனுப்புநர்                                                           நாள்:12.02.2020

பெ.பராங்குசம் 691
19, இளங்கோ நகர், 3வது குறுக்கு விரிவு,
வெங்கட்ட நகர் அஞ்சல்,
புதுச்சேரி – 605 011.
கைபேசி- 9843224827

பெறுநர்                                            
பொறிஞர் ஞா.சோசப் அதிரியன் ஆண்டோ
தேர்தல் ஆணையர்.
புதுவைத் தமிழ்ச் சங்கம்,
2. தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.

அன்புடையீர், வணக்கம்
புதுவைத் தமிழ்ச் சங்கம் பொதுக்குழுவை 01.02.2020 அன்று கூட்டியது.  ஆனால், அதற்கு முன்பாகவே தேர்தல் ஆணையராக தாங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தேர்தல் நெறிமுறைகள், வேட்பாளர் விண்ணப்பப் படிவம் அனைத்தும் முன்பாகவே அச்சடிக்கப்பட்டு விட்டன.

      ஆனால் 01.02.2020 அன்று நடந்த பொதுக்குழுவில் தேர்தல் ஆணையராக பொறிஞர் ஞா.சோசப் அதிரியன் ஆண்டோ அவர்கள் நியமனம் செய்வதாக அறிவிகப்பட்டது.

      உடனடியாகத் தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் நெறிமுறைகள் அனைத்தும் அஞ்சல் துறையில் சேர்க்கப்பட்டு, 4,5-02-2020 தேதிகளில் உறுப்பினர்களுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டன.  தமிழ்ச் சங்கத்தில் 1035 உறுப்பினர்கள் உள்ளனர்.  இவர்கள் உண்மையில் உறுப்பினர்களா? முறையாகப் பணம் கட்டி  இரசீது கொடுக்கப்பட்டுள்ளதா?.  எப்போது சேர்ந்தார்கள்? கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? போன்ற விபரங்களைத் தேர்தல் ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும்.  ஆனால், எதையுமே தாங்கள் ஆய்வு செய்யவில்லை.  தேர்தல் அறிவிப்புக் கடிதத்தில் தேர்தல் ஆணையரின் கையொப்பம் இல்லை.

      தேர்தல் ஆணையருக்குத் தெரியாமலேயே தேர்தல் அறிவிப்பு, நெறிமுறைகள் அனைத்தும் புதுவைத் தமிழ்ச் சங்கம் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.  அவர்களுக்கு வேண்டாத, எனக்கும் என் மனைவி பூங்கொடி பராங்குசம் ஆகிய எங்களுக்கும் அனுப்பவில்லை. இது போன்று எத்தனைப் பேருக்கு அனுப்பவில்லை  என்பது தெரியவில்லை.

      கடந்த தேர்தலின் போது சங்க உறுப்பினர்கள் 913 பேர் இருந்தனர்.  இந்தத் தேர்தலில் 1035 பேர் இருப்பதாக வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 122 பேர் கமுக்கமாக - தேர்தலுக்காக - சேர்க்கப்பட்டுள்ளாகள். தமிழ் உணர்வாளர்களையும், தமிழ் அறிஞர்களையும் சேர்ப்பதில்லை.  கேட்டால் இப்போது சேர்ப்பதில்லை. “பிறகு வாங்கப் பார்க்கலாம்” என்று கூறி விடுவார்கள்.  தொடர்ந்து ஆட்சி மன்றக் குழு தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என, தலைவர் விரும்புகிறார்.  யாரும் அவருடைய பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்.

      எந்த ஒரு அமைப்பிலும் ஒரு முறை, இரு முறைக்கு மேல் தலைவர் பதவி வகிக்க அனுமதி கிடையாது.  ஆனால் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பதவி என்பது எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் என்று அருதிப் பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

தேர்தலில் மற்றவர்கள் போட்டியிடுவதற்குத் தடை செய்ய வேண்டுமென்பதற்காக வேட்பாளர் விண்ணப்பப்படிவம் ஒன்று ரூ.1000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தலைவர் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்து வைத்து இருப்பதால் மற்ற உறுப்பினர்கள் தேர்தலில் நின்றால் வெற்றி பெற மாட்டோம் என்று கருதி, எதற்காக ரூ.1000/- செலுத்தி வேட்பாளர் படிவம் வாங்கி நட்டம் அடைவானேன் என்று சும்மா இருந்து விடுகின்றனர்.

      தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் வேட்பாளர் விண்ணபப்படிவம் பெற ரூ.5000/- என்று இருந்தாலும் வாங்கிக் கொள்வார்கள் ஏனெனில் அவர்கள் தான் வெற்றி பெறப் போகிறவார்கள்.

      எனவே வேட்பாளர் விண்ணப்பப்படிவம் ரூ.200/- என நிர்ணயம் செய்து இருக்க வேண்டும்.

      மேலும் வேட்பாளர் பட்டியல் உறுப்பினர் எண் வரிசையில் தயார் செய்து இருக்க வேண்டும். ஆனால் ‘அ’ கர வரிசையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  எந்தெந்த உறுப்பினர்கள் எந்தெந்த தேதிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதை மறைக்கவே ‘அ’ கர வரிசையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  (உம்) தமிழ்மாமணி மன்னர் மன்னன் உறுப்பினர் வரிசைப்படி ‘1’ இல் இருக்கிறார், ஆனால் ‘அ’ கர வரிசைப்படி ‘822’ இல் இருக்கிறார். இது ஒரு ஏமாற்று வேலை.

      புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் நெறி முறைகள் அனைத்தும் தங்களுத்  தெரியாது.  தாங்கள்தான் அனைத்தும் தயார் செய்து இருக்க வேண்டும்.  ஆனால் உங்களை மீறி அவர்களாலேயே செயல்படுத்தியுள்ளனர்.  உங்களை அவர்கள் ஒரு ‘கருவி’ யாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  என்பதை மட்டுமல்லாமல் தங்களுக்கு ‘வானளாவிய அதிகாரம்’ உள்ளது என்றும் சென்ற ஆட்சி மன்றக் குழுவிற்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்றும் அவர்கள் சாதாரண உறுப்பினரே என்பதைத் தங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  தேர்தல் முடியும் வரை தமிழ்ச் சங்கக் கட்டிடம் தங்கள் பொறுப்பில் இருக்க வேண்டும்.  யாரையும் தேவையில்லாமல் அனுமதிக்கக்ககூடாது.

      எனவே, மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்து, வேறொரு நாளில் சனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் மென்றுக் கேட்டுக் கெள்கிறேன்
இப்படிக்கு,
 பெ.பராங்குசம்
வாழ்நாள் உறுப்பினர் எண்:691
புதுவைத் தமிழ்ச் சங்கம்.

1 கருத்து:

  1. வணக்கம்!

    பாடும் புலவரினம் கூடும் அரங்கத்துள்
    ஆடும் நரிகளால் ஆக்கமிலை! - வாடுகிறேன்!
    முன்னை நெறிகாவா மூடர்களால் முத்தமிழ்
    அன்னை அழுகின்றாள் ஆழ்ந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    14.02.2020

    பதிலளிநீக்கு