slide

slide2
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு ...!
slide2
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு ...!
slide3
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
slide4
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...

ஞாயிறு, 1 மார்ச், 2020

புதுவைத் தமிழ்ச் சங்கம் குறித்து பொறிஞர் இரா.தேவதாசு




கூகுள் குரல் தட்டச்சு மூலம் தட்டச்சிடப் பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை



நம்முடைய தாய்மொழி தமிழ் மொழி அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது நான் சொல்ல இது என்ன யுனசுகோ நிறுவனம் சொல்கிறது. அவருடைய தாய் மொழியை பேச மறுப்பது நாள் பிறமொழி சொற்களை கலந்து பேசினால் அவருடைய தாய் மொழி பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் அழிந்துவிடும் பட்டியலிலே அந்தந்த தாய்மொழிகள் இடமளிக்கிறது அதில் நமது தாய் மொழியான தமிழ் மொழியும் இடம் பெற்று இருக்கிறது என்று ஒரு வருத்தமான செய்தியே என யுனசுகோ நிறுவனம் தன்னுடைய ஆய்வுகளில் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் எல்லாம் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்னால் நம்முடைய தமிழ்ச் சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து அவர்களுடைய நிலைப்பாட்டுடன் போராடினால் நம்முடைய தமிழ் மக்களுக்கு மொழியை மீண்டும் பேசவும் எழுதவும் இளைய தலைமுறையினரை மழலை இறை தமிழ்க்கல்வி கற்க வேண்டிய கடமைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. அதை நாம் செய்கிறோமா அதுக்கு தான் நம்ம தமிழ் மொழி நம்முடைய தமிழ்ச் சங்கங்கள் அதற்காகப் பாடுபட வேண்டும் அந்த நிலைப்பாட்டை புதுவைத் தமிழ்ச்சங்கம் செயல் என்றுதான் எங்களுடைய கவலை அதுதான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

 ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால் ஒரு அமைப்பு வலுவாக இருந்தால்தான் அந்த அமைப்பினுடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைப்பு வலுவாக இருக்கணும்னா அதனுடைய சட்டதிட்டங்கள் துணைவிதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் அது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் உறுப்பினர்கள் செய்கின்ற செயல்பாடுகள் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் இதைத்தான் நாங்கள் கேட்கிறோம் 01/1968 என்ற பதிவை பதிவு செய்யப்பட்டது சங்கங்கள் என்னுடைய பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட பொன் விழாவை கண்டு தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஒரு நூறு உறுப்பினர்களே இருந்த இந்த தமிழ்ச் சங்கம் இன்று 1000 உறுப்பினர்களை அடைந்திருக்கிறது .

அப்போது இந்த சங்கத்தின் உடைய சட்ட திட்டங்கள் முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா இதனுடைய கணக்கு வழக்குகள் முறையாக உறுப்பினர்களுக்கு சென்றடைந்து இருக்கிறதா இதனுடைய செயல்பாடுகள் எல்லாம் மக்கள் உற்றுநோக்கி இருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?. 

9 ஆண்டுகாலமாக ஆட்சிக் குழுவில் இருப்பவர்களிடம் எத்தனையோ முறை தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் ரொம்ப ரொம்ப வேதனைக்குரிய செய்தி ஒரு அமைப்பை மொழிக்காகவும் மக்களுக்காகவும் செயல்படாமல் தங்களைப் பற்றிய செய்திகளுக்கும், தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்கும், தங்களைப் பற்றிய பெருமைகளை பேசுவதற்கும், ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதை நாம் அனுமதிக்கவே முடியாது. சங்கத்தினுடைய சட்டவிதிகள் துணைவிதிகள் அழகாக இருக்கிறது. ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதம் பொதுக்குழுவைக் கூட்டி உறுப்பினர் எல்லாம் கூட்டு ஆண்டுதோறும் என்னென்ன செலவு செய்து இருக்கிறார் அந்த கணக்கை தணிக்கை செய்து உறுப்பினர்களிடம் கொடுங்க வேண்டும். உறுப்பினர் படிச்சு பார்த்துட்டு அவனுடைய ஐயப்பாடுகளை உங்ககிட்ட சொல்ல போறோம் நீங்க அந்த கருத்துக்களை சொல்லுங்க அது ஒரு வலுவான ஒரு அமைப்பை பார்க்கும் அமைப்பு கருத்துமோதல்கள் வந்து அதற்கான தீர்வு கண்டு அந்த செயல்பாடுகளை செஞ்சு பாருங்க தமிழ்ச்சங்க எங்கே போய் நிற்கும்.

அய்யாவிடம் பலமுறை நான் நேரிலும் சொல்லி இருக்கிறேன் கடிதங்களும் கொடுத்திருக்கிறான் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக இது மாதிரி செய்றீங்களா உங்கள நீங்க கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இதில் என்ன பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதில் உங்களுக்கு என்ன சிக்கல் கணக்கு காட்டுவது என்ன சிக்கல் இது என நாங்க பலமுறை கேட்க்கிறோம். 

ஆண்டுக்கணக்கை பதிவர் அலுவலகத்தில் ஒப்படைக்காமையால்  சங்கம் செயலிழந்துவிட்டது. நாங்கள் சங்கங்களின் பதிவாளர் மிகத்தெளிவாக தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு பதிலளித்திருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்க தன்னுடைய நிலை என்ன என்று கேட்டபோது புதுவைத் தமிழ்ச்சங்கம் ஆறு ஆண்டுகளாக அதனுடைய கணக்கு வழக்குகளை தணிக்கை செய்து எங்களிடத்தில் சமர்ப்பிக்கவில்லை எங்களிடத்தில் பொதுக்குழு கூட்டம் தகவல் இல்லை எங்களிடத்தில் புதுப்பிக்கவில்லை. அதனால் அந்த சங்கம் சட்டப்படி செயலிழந்து விட்டது.. என்றால் இது தான்  உங்களின் 9 ஆண்டு ஆட்சிக் காலத்தின் சிறப்பு.  தமிழுக்காக ஒரு போராட்டம் செய்து இருக்கிறீர்களா? குரல் கொடுத்து இருக்கிறீர்களா? உங்களுடைய பெருமையை பேசுவதற்கு அல்ல தமிழ்ச் சங்கம்.

புதுவைத் தமிழ்ச்சங்கம் குறித்து பெ.பராங்குசம் அவர்கள்




கூகுள் குரல் தட்டச்சினால் தட்டச்சு செய்யப்பட்டது. பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை.


தமிழ் சங்கங்கள் என்று சொன்னாலே தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் பாடுபடுகின்ற ஒரு சங்கமாக உலகம் போராட்டங்களையும் கொண்டிருக்கும் போது ஒரு தொழிற்சங்கம் ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது புதுச்சேரி சென்று தமிழ் அமைப்புக்கள் ஒன்றுகூடி வழங்கப்பட இருப்பதாகவும் ஆனால் புதுச்சேரி தங்களின் கலந்துகொள்ளாது அந்த களப்பணியாற்ற வேண்டும் அப்போதுதான் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என்ற பாவேந்தர் சொல்ல வரிக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் புதுச்சேரி தமிழ்ச்சங்கம் அது பற்றி கவலைப் படுவதே துரோகம் இழைப்பது போல் ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் விழா நடத்துவது மாதமாக விழா நடத்துவது ஆண்டு விழாவை நடத்துகிறார்கள் தமிழர்கள் 1035 உறுப்பினர்கள் தெரிகிறது அவர்கள் எங்கே போனார்கள் தேர்தலுக்குப் பிறகு சேர்த்துக் கொள்கிறார்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது
யாருக்கு ஆசை கிடையாது அவரே தலைவராக இருக்க முடியவில்லை என்பதே

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தப்புத் தாளங்கள் - நக்கீரன் 8-2-2020

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொதுக்குழுவைக் கூட்டாமல் தேர்தலுக்காக மட்டும் சிறப்புப் பொதுக்குழுவை கூட்டுகின்றனர். வரவு செலவு கணக்குக் காட்டவில்லை.

உறுப்பினர்கள் பலருக்கு பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புகள் அனுப்பவில்லை.

இதனைத் தட்டிக் கேட்டவர்களை குண்டர்களை வைத்து மிரட்டித் தாக்கினர். இதில் பாவேந்தர் பாரதிதாசனார் பெயரன் பாதிக்கப்பட்டார்.

வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்து பதிவர் அலுவலகத்தில் கொடுக்காமையால் தமிழ்ச் சங்கத்தை செயலற்ற சங்கம் என அறிவித்துள்ளனர். 


தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு - தினகரன்

Add caption

புதுவைத் தமிழ்ச் சங்கம் முன் போராட்டம்














புதுச்சேரி தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு- இந்து தமிழ்


தமிழ்ச் சங்க பொதுக்குழுக் கூட்டம் தள்ளுமுள்ளுடன் நிறைவடைந்தது -தினமலர்






புதுவைத் தமிழ்ச் சங்கம் வரவு செலவுக் கணக்கை 9 ஆண்டுகளாக ..

கடந்த 25-1-2020 வரை பதிவாளர் அலுவலகத்தில் தணிக்கை செய்த கணக்குகளை ஒப்படைக்க வில்லை எனஙே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழ்ச் சங்கம் சட்டப்படி சங்கம் என்ற நிலையிலேயே உள்ளது. 
 

தமிழ்ச் சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்த அரசுக்கு கோரிக்கை


புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலை முறையாக நடத்த வேண்டும்


வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் 2020 - முறைகேடாகவே தொடங்கியது

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் 2020 - 2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல்  23-2-2020 அன்று நடக்கும் என கடந்த  1-2-2020 அன்று கூட்டப்பட்ட சிறப்புக் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலில் தொடக்கமே முறைகேடாக தொடங்கியது.

முறைகேடு-1 பொதுக்குழுக் கூட்டத்திற்கு பலருக்கு அழைப்பு அனுப்பாமல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழுவில் உறுப்பினர்கள் யாருக்கும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. கேள்விகள் கேட்க முயன்றவர்களை அடியாட்களை வைத்துத் தாக்க முயன்றனர்.

முறைகேடு-2 :   வழக்கம் போல இந்த முறையும் இறந்தவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உறுப்பின்ர்களின் 35 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள்  வாக்காளர் பட்டியலில் முகவரிகள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தலில் நிற்பவர்களை அலைக்கழிக்கும் முயற்சியாகும்.

எல்லா உறுப்பினர்களுக்கும் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பி இருந்தால் அந்தக் கடிதம் திரும்பி வந்திருக்கும். அதை வைத்து முகவரி சரி செய்திருக்க முடியும். ஆனால், இவர்கள் பலருக்கு அழைப்பு அனுப்புவதிலை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. நாங்கள் அப்படித்தான் இதனைக் கண்டறிந்தோம்.


முறைகேடு - 3வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வெளியிடப் படவில்லை. இதனால் கள்ள வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளது.  தமிழ்ச் சங்க தேர்தலில் வாக்களிக்க தமிழ்ச் சங்கம் அனுப்பிய் கடிதம் அல்லது தமிழ்ச் சஙகம் வழங்கிய அடையாள அட்டை இரண்டில் ஒன்று வாக்களிக்க போதுமானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் அனுப்பிய கடிதத்தை  யார் வேண்டுமானாலும் எடுத்து வந்து கள்ள வாக்கு பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. 

புதுவைத் தமிழ்ச் சங்கமா குண்டர்கள் கூடாரமா?

புதுவைத் தமிழ்ச் சங்கத்தை ஒரு குழு கைப்பற்றி வைத்துள்ளது.

தமிழுக்காக எந்த வகையிலும் பங்கேற்காதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக்கி வாக்குகள் பெற்று தாமே நிரந்தரமான நிர்வாகிகளாக இருப்பதற்கான நிலையை உருவாக்கி வைத்துள்ளனர்.

தமிழுக்காகச் செயலாற்றுபவர்கள் அறிஞர்கள் யாரும் நிர்வாகக் குழுவில் இடம் பெறாமல் இருப்பதில் மட்டும் மிக்கக் கவனமாக அவர்கள் இருப்பதைக் காணமுடிகிறது. இருந்தால் அவர்கள் தமிழுக்குச் செயலாற்றாத துதிபாடிக் கூட்டமாக இருந்தாக வேண்டும்.

துதிபாடி, புகழ்பாடி அடிமைச் சிந்தனையோடு இருக்கும் ஒருவன் ஒருபோதும் உரிமைக்காகப் போராடுபவனாக இருக்க வாய்ப்பு இல்லை. இத்தனை நடப்பினும் ஒன்றுமே நடக்காதது போலப் புதுவைத் தமிழ் அறிஞர்கள் பலர் தூங்கி வருகின்றனர்.

வீரத் தமிழச்சி, புலியை முறத்தால் அடித்தாள், விளக்குமாற்றால் அடித்தாள் என மேடைகளில் அடிக்கடி பேசிவிட்டு தூங்கப் போய்விடுவார்கள்.

இப்படி நடப்பதால் தான் தமிழ்ச் சங்கம் தமிழுக்காக இதுவரை எதுவும் செய்யாத கூட்டத்திடம் சிக்கித் தவிக்கிறது.
 

 
போராட்ட உணர்வுகள் மங்கிப் போன, உரிமைகள் பெற வேண்டும் என்பதில் அக்கரை இல்லாதவர்கள் எனத் தமிழ்ச் சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட பலருக்குத் தமிழ்ச் சங்கம் விருது வழங்கி அவர்களிடம் இருந்த கொஞ்சம் தமிழ் உணர்வையும் மழுங்கடித்துள்ளது.

இதனால், தமிழ்ச் சங்கத்தை எதிர்த்து விருது பெற்றவர்கள் யாரும் பேசுவது இல்லை. பலர் விருது பெற்றதால் அமைதியானவர்களாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்கள் ஒரு சில மானமுள்ள தமிழறிஞர்கள் மட்டுமே போராடி வருகின்றனர்.

இந்த நிலை கண்டு தமிழ்ச் சங்கத்தைச் சரியாக நடத்துங்கள் என்று கோரி போராடி வரும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரன் அவர்களைக் குண்டர்கள் வைத்துத் தமிழ்ச் சங்கம் மிரட்டியதும், தாக்கியதும் #வன்மையாகக்_கண்டிக்கத்_தக்கது

புதன், 12 பிப்ரவரி, 2020

தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு -ஆணையருக்கு திரு. பராங்குசம் அவர்கள் புகார்

அனுப்புநர்                                                           நாள்:12.02.2020

பெ.பராங்குசம் 691
19, இளங்கோ நகர், 3வது குறுக்கு விரிவு,
வெங்கட்ட நகர் அஞ்சல்,
புதுச்சேரி – 605 011.
கைபேசி- 9843224827

பெறுநர்                                            
பொறிஞர் ஞா.சோசப் அதிரியன் ஆண்டோ
தேர்தல் ஆணையர்.
புதுவைத் தமிழ்ச் சங்கம்,
2. தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.

அன்புடையீர், வணக்கம்
புதுவைத் தமிழ்ச் சங்கம் பொதுக்குழுவை 01.02.2020 அன்று கூட்டியது.  ஆனால், அதற்கு முன்பாகவே தேர்தல் ஆணையராக தாங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தேர்தல் நெறிமுறைகள், வேட்பாளர் விண்ணப்பப் படிவம் அனைத்தும் முன்பாகவே அச்சடிக்கப்பட்டு விட்டன.

      ஆனால் 01.02.2020 அன்று நடந்த பொதுக்குழுவில் தேர்தல் ஆணையராக பொறிஞர் ஞா.சோசப் அதிரியன் ஆண்டோ அவர்கள் நியமனம் செய்வதாக அறிவிகப்பட்டது.

      உடனடியாகத் தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் நெறிமுறைகள் அனைத்தும் அஞ்சல் துறையில் சேர்க்கப்பட்டு, 4,5-02-2020 தேதிகளில் உறுப்பினர்களுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டன.  தமிழ்ச் சங்கத்தில் 1035 உறுப்பினர்கள் உள்ளனர்.  இவர்கள் உண்மையில் உறுப்பினர்களா? முறையாகப் பணம் கட்டி  இரசீது கொடுக்கப்பட்டுள்ளதா?.  எப்போது சேர்ந்தார்கள்? கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? போன்ற விபரங்களைத் தேர்தல் ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும்.  ஆனால், எதையுமே தாங்கள் ஆய்வு செய்யவில்லை.  தேர்தல் அறிவிப்புக் கடிதத்தில் தேர்தல் ஆணையரின் கையொப்பம் இல்லை.

      தேர்தல் ஆணையருக்குத் தெரியாமலேயே தேர்தல் அறிவிப்பு, நெறிமுறைகள் அனைத்தும் புதுவைத் தமிழ்ச் சங்கம் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.  அவர்களுக்கு வேண்டாத, எனக்கும் என் மனைவி பூங்கொடி பராங்குசம் ஆகிய எங்களுக்கும் அனுப்பவில்லை. இது போன்று எத்தனைப் பேருக்கு அனுப்பவில்லை  என்பது தெரியவில்லை.

      கடந்த தேர்தலின் போது சங்க உறுப்பினர்கள் 913 பேர் இருந்தனர்.  இந்தத் தேர்தலில் 1035 பேர் இருப்பதாக வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 122 பேர் கமுக்கமாக - தேர்தலுக்காக - சேர்க்கப்பட்டுள்ளாகள். தமிழ் உணர்வாளர்களையும், தமிழ் அறிஞர்களையும் சேர்ப்பதில்லை.  கேட்டால் இப்போது சேர்ப்பதில்லை. “பிறகு வாங்கப் பார்க்கலாம்” என்று கூறி விடுவார்கள்.  தொடர்ந்து ஆட்சி மன்றக் குழு தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என, தலைவர் விரும்புகிறார்.  யாரும் அவருடைய பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்.

      எந்த ஒரு அமைப்பிலும் ஒரு முறை, இரு முறைக்கு மேல் தலைவர் பதவி வகிக்க அனுமதி கிடையாது.  ஆனால் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பதவி என்பது எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் என்று அருதிப் பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

தேர்தலில் மற்றவர்கள் போட்டியிடுவதற்குத் தடை செய்ய வேண்டுமென்பதற்காக வேட்பாளர் விண்ணப்பப்படிவம் ஒன்று ரூ.1000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தலைவர் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்து வைத்து இருப்பதால் மற்ற உறுப்பினர்கள் தேர்தலில் நின்றால் வெற்றி பெற மாட்டோம் என்று கருதி, எதற்காக ரூ.1000/- செலுத்தி வேட்பாளர் படிவம் வாங்கி நட்டம் அடைவானேன் என்று சும்மா இருந்து விடுகின்றனர்.

      தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் வேட்பாளர் விண்ணபப்படிவம் பெற ரூ.5000/- என்று இருந்தாலும் வாங்கிக் கொள்வார்கள் ஏனெனில் அவர்கள் தான் வெற்றி பெறப் போகிறவார்கள்.

      எனவே வேட்பாளர் விண்ணப்பப்படிவம் ரூ.200/- என நிர்ணயம் செய்து இருக்க வேண்டும்.

      மேலும் வேட்பாளர் பட்டியல் உறுப்பினர் எண் வரிசையில் தயார் செய்து இருக்க வேண்டும். ஆனால் ‘அ’ கர வரிசையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  எந்தெந்த உறுப்பினர்கள் எந்தெந்த தேதிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதை மறைக்கவே ‘அ’ கர வரிசையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  (உம்) தமிழ்மாமணி மன்னர் மன்னன் உறுப்பினர் வரிசைப்படி ‘1’ இல் இருக்கிறார், ஆனால் ‘அ’ கர வரிசைப்படி ‘822’ இல் இருக்கிறார். இது ஒரு ஏமாற்று வேலை.

      புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் நெறி முறைகள் அனைத்தும் தங்களுத்  தெரியாது.  தாங்கள்தான் அனைத்தும் தயார் செய்து இருக்க வேண்டும்.  ஆனால் உங்களை மீறி அவர்களாலேயே செயல்படுத்தியுள்ளனர்.  உங்களை அவர்கள் ஒரு ‘கருவி’ யாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  என்பதை மட்டுமல்லாமல் தங்களுக்கு ‘வானளாவிய அதிகாரம்’ உள்ளது என்றும் சென்ற ஆட்சி மன்றக் குழுவிற்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்றும் அவர்கள் சாதாரண உறுப்பினரே என்பதைத் தங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  தேர்தல் முடியும் வரை தமிழ்ச் சங்கக் கட்டிடம் தங்கள் பொறுப்பில் இருக்க வேண்டும்.  யாரையும் தேவையில்லாமல் அனுமதிக்கக்ககூடாது.

      எனவே, மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்து, வேறொரு நாளில் சனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் மென்றுக் கேட்டுக் கெள்கிறேன்
இப்படிக்கு,
 பெ.பராங்குசம்
வாழ்நாள் உறுப்பினர் எண்:691
புதுவைத் தமிழ்ச் சங்கம்.

சனி, 1 பிப்ரவரி, 2020

தமிழ்ச் சங்கத்தின் பதிவுச் சான்றிதழ்

புதுவைத் தமிழ்ச் சங்கம் அதன் பதிவுச் சன்றிதழை கடந்த 1967 ஆம் ஆண்டு பதிவு செய்து பெற்றுள்ளது. அதன் இணைப்பு கீழே

PDF கோப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பதிவு சான்றிதழ்

வியாழன், 23 ஜனவரி, 2020

தமிழ்ச் சங்கத்தைக் கண்டித்து போராட்டம்!

வனத்துறை அனுமதி தர மறுத்த பின்னும் சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டிய புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களின் அடாவடி ஆணவப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று 18-01-2020 காலை, தமிழ்ச் சங்கம் எதிரில் மரக்கன்றுகள் ஏந்தி முழக்கப் போராட்டம். 

அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது.

மரம்வெட்டித் தமிழ்ச் சங்கத்திற்கு எதிரில் மரக்கன்று வழங்கி போராட்டம்





செவ்வாய், 21 ஜனவரி, 2020

தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு இல்லை

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு நடத்திய தலைவர், 1000 ரூபாய் கட்டி வாழ்நாள் உறுப்பினராக உள்ள எனக்கு ஏன் அழைப்பு அனுப்பவில்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தான் அழைப்பா? தமிழ்ச் சங்கம் என்ன சர்வாதிகாரியா? இதற்கு முன் நடந்த மாநாட்டிற்கும் அழைப்பில்லை. என்ன நடக்கிறது தமிழ்ச் சங்கத்தில்?  வனத்துறை அனுமதி மறுத்தும் மரம் வெட்டித் தவறு செய்துள்ளார்கள். தமிழ் ஆன்றோர்களே என்ன செய்யப் போகிறீர்கள்....

செல்வம் கோதண்டராமன்