மெனு புதியது
- முகப்பு
- எங்களைப் பற்றி
- புதுவைத் தமிழ்ச் சங்கம்
- தமிழ்ப் பாதுகாப்புக் குழு
- பத்திரிக்கைச் செய்திகள்
slide
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு
...!
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு
...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
புதன், 23 ஜனவரி, 2019
செவ்வாய், 1 ஜனவரி, 2019
செவ்வாய், 28 பிப்ரவரி, 2017
குடும்ப சொத்தாகும் புதுவைத் தமிழ்ச் சங்கம்
புதுச்சேரி தமிழ்ச் சஙகம்
தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்கான சங்கம் என்று நீங்கள் கருதினால் அது மிகவும்
தவறான கருத்தாகும்.
சிலர் கூற்றுப்படி அது ஒரு சாதிச் சங்கம் போல் செயல்படுகிறது
என்று சொல்லப்படுகிறது. நீங்கள்
தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டுமானால் அந்த குறிப்பிட்ட சாதியாக
இருக்க வேண்டும் என்ற நிலை புதுச்சேரியின் அவலமாகும்.
தமிழுக்கு தொடர்பு இல்லாதவர்களைக் கூட சாதி அடிப்படையில் அவர்களிடம்
உறுப்பினர் கட்டணம் கூட வாங்காமல் இப்போது பொறுப்பில் இருப்பவர்களே அந்த
தொகையை செலுத்து உறுப்பினர்களாக சேர்த்து விடுகின்றனர்.
ஆனால்
பல தமிழ் அறிஞர்கள் பிற சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தமிழ்சங்கத்தில்
உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை.
இந்த
வார இதழில் வந்துள்ள செய்தியை படியுங்கள். பல
செய்திகள் வெளிவரும்,
தமிழ்ச் சங்கத்தில்
தலைவராக இருந்த முத்து அவர்கள்
ஒரு செல்வந்தர் எனவே, வெளி நாட்டில்
உள்ள தமிழர்களுக்கு நிதி அளித்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தமக்கு
விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வாராம். அது போலத்தான்
பல நாடுகளில் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு விருது
வழங்கப்பட்டதாக சிலர் என்னிடம் தெரிவித்தனர்.
வியாழன், 23 பிப்ரவரி, 2017
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து முன்று சுவரொட்டிகள்
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதின் முதலாவதாக இருப்பது புதுச்சேரி சமூக சனநாயக இயக்கங்கள் மூலம் ஒட்டப்பட்டச் சுவரொட்டி
புதுச்சேரியில் தமிழ்ச் சங்கத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்தல் நடத்தப்படுகிறது. இதை அறிந்த புதுவையின் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஒருங்கிணைந்த அமைப்பான சமூக சனநாயக இயக்கங்கள் தமிழ்ச் சங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
செவ்வாய், 21 பிப்ரவரி, 2017
திங்கள், 20 பிப்ரவரி, 2017
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017
சனி, 18 பிப்ரவரி, 2017
தேர்தல் மோசடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
புத்ச்சேரியில் உள்ள ஒருசிறிய தமிழ்ச்சங்கம் அதன் தலைவருக்கும் செயலருக்கும் இரண்டுமுறை பதவியில் ( 6 ஆண்டுகள்) இருந்த பிறகும்கூட பதவி ஆசை போகவில்லை,
பதவி ஆசை பதவி வெறியாக மாறியுள்ளது, அதனால் தனக்கு மட்டுமே ஓட்டளிக்கக் கூடிய தகுதியற்ற 400 பேரை இகரசியமாக உறுப்பினராக்கி பல தில்லுமுல்லுகளோடு தேர்தலை நடத்தி பதவி நாற்காலியைப் பிடித்துள்ளனர்.
இந்தத் தேர்தல் ஒரு மோசமான கேலிக்கூத்து. புதுச்சேரியின் ஒட்டுமொத்தத் தமிழறிஞர்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பதவியை வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்,
தலைவரும் செயலரும் கொஞ்சம் மனசாட்சியோடு யோசிக்க வேண்டும்.
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் விலைகொடுத்து வாங்கிவிட முடியாது. அப்படி வாங்கும் வெற்றியும் நிலைக்காது.
- வேதனையோடு முனைவர் நா.இளங்கோ.
ஊடகச் செய்தி:
#புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் கடந்த 12.2.2017 ஆட்சி குழுவிற்கான தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது .இரவு 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பாதியிலே நிறுத்தப்பட்டு எதிரணி வேட்பாளர்கள் கட்டாயப்ப தித்தி வெளியேற்ற பட்டனர். எதிரணி வேட்பாளர்கள் வாங்கு எண்ணிக்கை நிறுத்தத்தை எதிர்த்தனர், வெளியேற மறுத்தனர்.
ஆனாலும் கட்டாயமாக தேர்தல் ஆணையர்கள் சேதுமுருகபூபதி, முரளிதரன் ஆகியோர்களால் வெளியேற்றப்பட்டு ஒருதலைப் பட்சமாக தேர்தல் முடிவுகள் மோசடியாக அறிவிக்கப்பட்டது .
புதுச்சேரி அரசு மோசடி தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, தேர்தல் ஆணையர்கள் மீது விசாரணை நடத்தி திருத்தப்பட்ட புதிய வாக்களர் பட்டியல் வெளியிட்டு நியாயமாக தேர்தலை நேர்மையான அதிகாரிகளை கொண்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என புதுச்சேரி அரசை #தமிழ் பாதுகாப்பு குழு இன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் மூலம் கேட்டுக்கொள்கிறது.
இவண்:
இரா. அழகிரி (ஒருங்கிணைப்பாளர்)
9442085540.
தமிழ்ச் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தக் கோரி ஆர்ப்பட்டம்
தமிழ்ச் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்தக்கோரி தமிழ் பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தக் கோரிக்கை தினத்தந்தி செய்தி
புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தக் கோரிக்கை தினத்தந்தி செய்தி
புதுச்சேரி பதிவு: பிப்ரவரி 18, 2017 04:15 AM மாற்றம்: பிப்ரவரி 18, 2017 04:17 AM
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் வி.முத்து தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றனர்.
இந்தநிலையில் தமிழ்ச்சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் தமிழ் பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கைகளுக்காக அண்ணா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகநாதன், பாரதிதாசனின் பேரன் பாரதி, தமிழர் களம் அழகர், லோக்ஜன சக்தி தலைவர் புரட்சிவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளி, 17 பிப்ரவரி, 2017
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இடைவிடாத போராட்டம்
இரா. சுகுமாரன் Cm Puratchi Venthan உடன்.
புதுவைத் தமிழ்ச் சங்க தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இடைவிடாத போராட்டம் நடத்தப்படுகிறது.
தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் அறிவித்து விட்டதால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தலுக்கு தடை விதிக்க இயலாது என புதுச்சேரி நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தேர்தல் முடிந்த்து ஆனால் இவர்கள் பதவி ஏற்பது கேள்விக்குறியாக உள்ளது. வழக்கு ............ நீதிமன்றத்தில்..... மேலும் விரிவாக பேச வேண்டாம். விரைவில் பதில் கிடைக்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொன்விழா மாநாட்டைப் புறக்கணிப்போம்
!doctype>
























