இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி, 18 பிப்ரவரி, 2017

தேர்தல் மோசடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

#கொஞ்சம் #சிந்திப்பீர்!

புத்ச்சேரியில் உள்ள ஒருசிறிய தமிழ்ச்சங்கம் அதன் தலைவருக்கும் செயலருக்கும் இரண்டுமுறை பதவியில் ( 6 ஆண்டுகள்) இருந்த பிறகும்கூட பதவி ஆசை போகவில்லை, 
பதவி ஆசை பதவி வெறியாக மாறியுள்ளது, அதனால் தனக்கு மட்டுமே ஓட்டளிக்கக் கூடிய தகுதியற்ற 400 பேரை இகரசியமாக உறுப்பினராக்கி பல தில்லுமுல்லுகளோடு தேர்தலை நடத்தி பதவி நாற்காலியைப் பிடித்துள்ளனர்.



இந்தத் தேர்தல் ஒரு மோசமான கேலிக்கூத்து. புதுச்சேரியின் ஒட்டுமொத்தத் தமிழறிஞர்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பதவியை வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்,
தலைவரும் செயலரும் கொஞ்சம் மனசாட்சியோடு யோசிக்க வேண்டும்.
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் விலைகொடுத்து வாங்கிவிட முடியாது. அப்படி வாங்கும் வெற்றியும் நிலைக்காது.


- வேதனையோடு 
முனைவர் நா.இளங்கோ.

ஊடகச் செய்தி:
#புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் கடந்த 12.2.2017 ஆட்சி குழுவிற்கான தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது .இரவு 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பாதியிலே நிறுத்தப்பட்டு எதிரணி வேட்பாளர்கள் கட்டாயப்ப தித்தி வெளியேற்ற பட்டனர். எதிரணி வேட்பாளர்கள் வாங்கு எண்ணிக்கை நிறுத்தத்தை எதிர்த்தனர், வெளியேற மறுத்தனர்.

ஆனாலும் கட்டாயமாக தேர்தல் ஆணையர்கள் சேதுமுருகபூபதி, முரளிதரன் ஆகியோர்களால் வெளியேற்றப்பட்டு ஒருதலைப் பட்சமாக தேர்தல் முடிவுகள் மோசடியாக அறிவிக்கப்பட்டது .

புதுச்சேரி அரசு மோசடி தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, தேர்தல் ஆணையர்கள் மீது விசாரணை நடத்தி திருத்தப்பட்ட புதிய வாக்களர் பட்டியல் வெளியிட்டு நியாயமாக தேர்தலை நேர்மையான அதிகாரிகளை கொண்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என புதுச்சேரி அரசை #தமிழ் பாதுகாப்பு குழு இன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் மூலம் கேட்டுக்கொள்கிறது.

இவண்:
இரா. அழகிரி (ஒருங்கிணைப்பாளர்)
9442085540.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக