சனி, 18 பிப்ரவரி, 2017

தமிழ்ச் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தக் கோரி ஆர்ப்பட்டம்

தமிழ்ச் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்தக்கோரி தமிழ் பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தக் கோரிக்கை தினத்தந்தி செய்தி

புதுச்சேரி  பதிவு: பிப்ரவரி 18,  2017 04:15 AM மாற்றம்: பிப்ரவரி 18,  2017 04:17 AM
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் வி.முத்து தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றனர்.
இந்தநிலையில் தமிழ்ச்சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் தமிழ் பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கைகளுக்காக அண்ணா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகநாதன், பாரதிதாசனின் பேரன் பாரதி, தமிழர் களம் அழகர், லோக்ஜன சக்தி தலைவர் புரட்சிவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக