இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி, 16 ஆகஸ்ட், 2014

தமிழ்ப் பாதுகாப்புக் குழு தொடக்கம்


தமிழ் வளர்த்தெடுத்து என்றும் பெருமை கொண்டது புதுவை. பாரதிதாசன் உறுப்பினராக இருந்த புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கோருபவர்களைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகளைச் சேர்த்துக் கொள்வதில்லை. தமிழ் ஆர்வலர்களையும் அறிஞர்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்ற 16-08-2014 அன்று "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு இவ்வமைப்பின் மூலம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை பலமுறை தொடர்பு கொண்டு உறுப்பினர்களாக விரும்புகிறவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை நேரிலும் எழுத்து மூலமும் கேட்டுக் கொண்டும் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். பொதுக்குழுவை அடுத்த ஆண்டு (2014) பிப்ரவரி மாதம் கூட்டி உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது பற்றி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டி உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உறுப்பினர்கள் சேர்க்கை செய்வதற்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், தமிழ்ச்சங்கத்தின் விதிமுறையில் இல்லை. எனவேபுதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் சொல்லும் பொய்யான காரணம் தான் பிப்ரவரி மாதம் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பதாகும். போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் அதனை தொடர்ந்து திசைத் திருப்பும் வகையிலும். காலம் கடத்தும் வகையிலும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் என இப்போது தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சென்ற முறை இவர்கள் பொறுப்பில் இருந்த போதிலிருந்தே அவர்கள் இப்படித்தான் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே, இந்தப் பொய்யான காரணங்களை நம்பிக் கொண்டு பொதுக்குழு கூட்டும் வரை காத்திருந்து அவர்கள் அடுத்து சொல்ல இருக்கும் வேறு காரணங்களுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்த "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" புதுவையில் உள்ள பல்வேறு அமைப்புகளை அழைத்து ஒரு கண்டனக் கூட்டம் நடத்துவது எனத் தீர்மானித்துள்ளது.

சென்ற முறை 2010 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் இச்சங்கத்தின் ஆட்சி மன்றக் குழுவிற்கு தேர்தல் நடந்தது. ஆட்சி மன்றக் குழுவின் பதவி காலம் மூன்றாண்டுகளாகும். அதாவது 17.10.2013 ஆம் நாளோடு பொறுப்பு முடிந்து தேர்தல் வைக்க வேண்டும். ஆனால், தங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பு முன் தேதியிட்டு மொத்தம் வாழ் நாள் உறுப்பினர்கள் 155 பேரில் மேற்குறிப்பிட்ட 55 பேர் முறைகேடாக  சேர்க்கப்பட்டு கடந்த 21-03-2014 அன்று தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்ச் சங்க விதிப்படி ஆண்டுதோறும் மே/ஜூன் திங்களில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். கடந்த முறை மூன்றாண்டு பொறுப்பில் இருந்தவர்கள் ஒரே ஒரு முறை கூட பொதுக் குழுவைக் கூட்டவில்லை!

ஆண்டு தோறும் சங்கத்தின் வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்து சங்க உறுப்பினர்களுக்கு சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்கிறது சங்க விதி .ஆனால் ஒரு முறை கூட சங்க கணக்குகள் உறுப்பினர்களுக்கு காட்டப்படவில்லை!. பல  உறுப்பினர்கள் கடிதம் அளித்தும் எதையும் செவிசாய்க்காமல் மதிப்பு அளிக்காமல் தாங்கள் எப்படியாவது பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் முறையற்ற செயல்களில்  ஈடுபடுகிற்றனர்.

     உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுமானால் பொதுக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தமிழ்ச் சங்க பதிவு விதி ஏதும் சொல்லவில்லை. சாதி இன வேறு பாடு இன்றி யார் வேண்டுமனாலும் உறுப்பினராக சேரலாம் என தமிழ்ச் சங்கம் விதி எண்’ 3. அ பிரிவு (Eligibility: All persons irrespective of their caste cread or register or nationality are eligible for membership.) என்று உறுப்பினர் சேர்க்கைக்கான விதி சொல்கிறது. அதே விதியின் அடிப்படையில் தான் தமது பதவிக்காலம் முடிந்த பின்பு 55 பேரை முறைகேடாக தமிழ்ச் சங்க உறுப்பினர்களாகச் தமக்கு வேண்டியவர்களைச் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாகச் சேர்த்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அப்போது உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்ட 55 பேருக்கும் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி தமிழ்ச் சங்கத்தின் தலைவரே உறுப்பினர்க் கட்டணத்தை செலுத்தி உள்ளதாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

இது போல பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால்  சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடத்திய “உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)” புதுவைத் தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று  மாநாட்டுக் குழுவிலிருந்து தமிழ்ச் சங்கத்தை விலக்கிவிட்டு மாநாட்டை புதுவையில் நடத்தியது.

தமிழ்ச் சங்கம் முறைகேடாக  செயல்பாடுகளால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை முறைகேடுகள் உள்ள தமிழ்ச் சங்கத்தை தமிழர்கள் பாதுகாக்க வேண்டுமெனில் அனைவரும் ஒன்றினைந்து போராடி வெற்றி பெறச் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.

புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக்குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக