மெனு புதியது
- முகப்பு
- எங்களைப் பற்றி
- புதுவைத் தமிழ்ச் சங்கம்
- தமிழ்ப் பாதுகாப்புக் குழு
- பத்திரிக்கைச் செய்திகள்
slide
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு
...!
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு
...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
புதன், 30 நவம்பர், 2016
செவ்வாய், 1 நவம்பர், 2016
உறுப்பினர் சேர்க்கை திட்டமிட்டு காலம் கடத்தியது தமிழ்ச்சங்கம்
புதுவைத் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்ய இருப்பதாக அதன் தலைவர் திரு முத்து அவர்கள் தெரிவித்ததாக புதுவைத் தமிழ்பாதுகாப்புக் குழு தலைவர் திரு அழகிரி தெரிவித்தார்.
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்ன பதில் சொல்வார் என்பதை முன்னமே அறிவோம். காலம் கடத்துவது அவரது முடிவாகும் ஏற்கனவே ஒரு மாதகாலம் ஆன நிலையில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல் மேலும் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அழகிரி தெரிவித்தார்.
பத்து நாள் என்பதை மேலும் நீட்டித்து, பின்னர் அவர் சொல்ல இருக்கும் பதில் " பொதுக்குழுவில் இப்போது உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது" என கூறுவார் என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் கடந்த கால அனுபவம் அப்படித்தான் உள்ளது.
எனவே. நாங்கள் சென்ற வாரத்திற்கு முன் எடுத்த முடிவின் படி நகரம் முழுவதும் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து முதல்கட்டமாக சுவரொட்டி ஒட்டுவது என முடிவெடுத்தபடி எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறும்.
சென்ற வாரம் "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" அமைக்கப்பட்ட பின்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்களை சந்தித்து விருப்பமுள்ளவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எனவே, இன்று காலை "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" வின் தலைவர் திரு. இரா.அழகிரி அவர்களிடம் தமிழ்ச் சங்கத்தின் தலைவரை இக்குழு சந்திப்பதற்கான நேரத்தை தொலை பேசி மூலம் பேசி உறுதிப்படுத்தும்படி கேட்டிருந்தேன்.
இரண்டு முறை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்கள் தொலை பேசி அழைப்பை ஏற்கவில்லை. எனவே, குழு சந்திப்பதற்கான நாள் மற்றும் நேரம் உறுதிப்படுத்த வேண்டி நேரில் நானும் (இரா.சுகுமாரன்) திரு அழகிரி அவர்களும் திரு. முத்து அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தோம்.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுவில் முடிவெடுத்து தெரிவிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். அதுவரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படின் இக்குழு சந்திப்பதா அல்லது மேல் நடவடிக்கை மேற்கொள்வதா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும்
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சீர்கேடு
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை சரி செய்யலாம் என நினைத்தோம். ஆனால் இன்று மேலும் மேலும் சீர் கெட்டு போயுள்ளது.
குறிப்பாக தமிழறிஞர்களை உறுப்பினராக சேர்ப்பது தான் எங்களது நோக்கமாக இருந்தது. அதோடு எங்கள் பணி நிறைவு என நினைத்தோம்.
அப்போது தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தோம். உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு முன் எங்களோடு பேசுங்கள் என கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களைப் பொருட்படுத்தவில்லை. அது தான் எங்கள் நடவடிக்கை தொடங்கிய பின் அவர்கள் செய்த முதல் தவறு.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் நண்பர்களாக இருந்த போதும் ஒரு உடன்பாடான, இணக்கமான சூழலை அவர்கள் ஏற்படுத்த முயலவில்லை என்பது வருத்தமான செய்தி.
இத்தகைய மெத்தனப் போக்கோடு அவர்கள் தொடர்ந்து தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்துக்கு எதிராக செயல்பட்டனர்.
எனவே, நாங்கள் எங்கள் பணியை தொடர வேண்டியதாயிற்று. தமிழ்ச் சங்கத்தில் நிர்வாகக்குழுவில் சேரவே விருப்பமில்லாத என்னைப் போன்றவர்களும் தேர்தலில் நிற்க வேண்டியதாயிற்று.
இன்று அவர்கள் வெற்றி பெற்றாலும் அது மதிக்கத் தக்க வெற்றியாக இல்லை.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் இன்று வரை ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்த முன்வராதது அவர்களின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது.
செவ்வாய், 20 ஜனவரி, 2015
வியாழன், 15 ஜனவரி, 2015
சனி, 10 ஜனவரி, 2015
திங்கள், 15 டிசம்பர், 2014
ஞாயிறு, 30 நவம்பர், 2014
சனி, 29 நவம்பர், 2014
வியாழன், 27 நவம்பர், 2014
வெள்ளி, 14 நவம்பர், 2014
இரா.அழகிரி வெ.முத்து சந்திப்பு
புதுவைத் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்ய இருப்பதாக அதன் தலைவர் திரு முத்து அவர்கள் தெரிவித்ததாக புதுவைத் தமிழ்பாதுகாப்புக் குழு தலைவர் திரு அழகிரி தெரிவித்தார்.
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்ன பதில் சொல்வார் என்பதை முன்னமே அறிவோம். காலம் கடத்துவது அவரது முடிவாகும் ஏற்கனவே ஒரு மாதகாலம் ஆன நிலையில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல் மேலும் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அழகிரி தெரிவித்தார்.
பத்து நாள் என்பதை மேலும் நீட்டித்து, பின்னர் அவர் சொல்ல இருக்கும் பதில் " பொதுக்குழுவில் இப்போது உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது" என கூறுவார் என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் கடந்த கால அனுபவம் அப்படித்தான் உள்ளது.
எனவே. நாங்கள் சென்ற வாரத்திற்கு முன் எடுத்த முடிவின் படி நகரம் முழுவதும் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து முதல்கட்டமாக சுவரொட்டி ஒட்டுவது என முடிவெடுத்தபடி எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறும்.
சென்ற வாரம் "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" அமைக்கப்பட்ட பின்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முத்து அவர்களை சந்தித்து விருப்பமுள்ளவர்களை தமிழ்ச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எனவே, இன்று காலை "புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்பு குழு" வின் தலைவர் திரு. இரா.அழகிரி அவர்களிடம் தமிழ்ச் சங்கத்தின் தலைவரை இக்குழு சந்திப்பதற்கான நேரத்தை தொலை பேசி மூலம் பேசி உறுதிப்படுத்தும்படி கேட்டிருந்தேன்.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுவில் முடிவெடுத்து தெரிவிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதுவரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படின் இக்குழு சந்திப்பதா அல்லது மேல் நடவடிக்கை மேற்கொள்வதா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும்
ஞாயிறு, 12 அக்டோபர், 2014
தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்க கோரி சுவரொட்டி
புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து புதுவையில் சில இடங்களில் காணப்படும் சுவரொட்டி இது. இரண்டு மாத காலம் அவர்களின் பதிலுக்கு காத்திருந்து பின்னர் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். பிரச்சினைகள் தொடங்கிய பின் நாங்களாக முன்வந்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் அதை கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்வது நல்லதல்ல.
திங்கள், 22 செப்டம்பர், 2014
பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் புதுவைத் தமிழ்ச்சங்கம் நீக்கம்
புதுச்சேரியில் கடந்த 2014 ஆண்டு செப்டம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் 13வது இணைய மாநாட்டை புதுவைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்துவதாக முடிவு செய்திருந்தது.
ஆனால், புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் ஊழல் முறைகேடுகளை செய்து வருவதால் புதுவைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 13வது தமிழ் இணைய மாநாட்டை நடத்தக் கூடாது நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த மாநாட்டுக் குழுவில் தமிழ்ச் சங்கத்தை "உத்தமம்" நிறுவனம் விலக்கிவிட்டு அந்த மாநாட்டை நடத்தியது.
மாநாட்டு அறிவிப்பு இணைப்பு கீழே உள்ளது.
மாநாட்டில் தமிழ்ச் சங்கத்தை நீக்கி தொடக்கவிழா நிறைவு விழா நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.
----------------------------------------
பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு¸ புதுச்சேரி, இந்தியா
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும், புதுவைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து புதுச்சேரியில் நடத்தும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு
பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு¸ புதுச்சேரி, இந்தியா
உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துஉலகெங்கிலும் உள்ள தமிழர்களை
இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும்.

தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துத் தமிழ்க் கவிஞர் கனியன் பூங்குன்றனார் தன்னுடைய அழகான புறநானூறு பாடலில் இயம்பியிருப்பது போல “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்னும் வாக்கைச் சிறப்புற நடைமுறைப்படுத்தி வருவதில் உத்தமம் நிறுவனம் பெருமை கொள்கிறது.
இம்மாநாடுகள் “நீர் வழிப் படூம் புணைபோல முறைவழிப் படூம் ஆருயிர்” என்னும் நம் கவிஞர் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க கணினி வழி தமிழர்களின் ஆருயிரை முறைவழிப்படுத்தி வருவது பெருமைக்குரிய ஒன்றே! இவ்வகையில் உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்! நம் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் கணினி குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைவது எண்ணித் தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.
இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய நாட்கள் ஆகியன குறித்தான செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடுவோம். மேலதிக செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.
வாசு அரங்கநாதன், தலைவர், உத்தமம் நிறுவனம்,தமிழ்ப் பேராசிரியர்¸ பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம், அமெரிக்கா
புதுச்சேரியில் செப்டம்பரில் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு
புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு!
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014
"பாண்டி டைம்சு" செய்தி
"பாண்டி டைம்சு" என்ற செய்தி ஏட்டில் புதுவைத் தமிழ்ச் சங்கம் பற்றிய செய்தி எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழுவில் உள்ள நபர்களை வைத்தே போராட்டம் வலுவாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளதாக நான் கருதுகிறேன். ஆகவே, தமிழ்ச்சங்கம் விழித்துக் கொண்டால் நல்லது என்றும் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சங்கம் விழித்துக் கொள்ளுமா? பார்க்கலாம்.

சனி, 23 ஆகஸ்ட், 2014
புதன், 20 ஆகஸ்ட், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொன்விழா மாநாட்டைப் புறக்கணிப்போம்
!doctype>