slide

slide2
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு ...!
slide2
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு ...!
slide3
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
slide3
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
slide4
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

உறுப்பினர் சேர்க்கைக்கான குழு ஆலோசனை


  "புதுச்சேரி தமிழ் பாதுகாப்புக் குழு" சுவரொட்டி ஒட்டுவதற்கு முன்பாக அதனைத் திட்டமிட்டுக் காலம் கடத்தும் நோக்கில் ஒரு வார காலத்தில் முடிவைச் சொல்கிறோம் என்று மூன்று முறை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினர்.

 ஆனால், நாங்கள் எதிர்பார்த்தது போலவே பொதுக்குழுவை கூட்டிமுடிவு செய்வது என முடிவெடுக்க இருப்பதாக ஒரு காரணத்தைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தாகத் தெரிகிறது.

 தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் 55 பேர்களைச் சேர்க்கும் போது பொதுக் குழுவை கூட்டியா சேர்த்துக் கொண்டார்கள். இல்லையே, எனவே, சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் சொல்லும் பொய்யான காரணம் தான் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுப்பதாகத் தெரிவித்திருப்பது.

  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தை கண்டித்து புதுவையில் சில இடங்களில் காணப்படும் சுவரொட்டி இது. இரண்டு மாத காலம் அவர்களின் பதிலுக்கு காத்திருந்து பின்னர் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். பிரச்சினைகள் தொடங்கிய பின் நாங்களாக முன்வந்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் அதை கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்வது நல்லதல்ல.

புதன், 13 ஆகஸ்ட், 2014

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு எதிராக ஏன் போராட வேண்டும்?


புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் பல ஆண்டுகளாகத் தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தம்மைத் தமிழ்ச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளும் படிபல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். ஆனால், தமிழ்ச் சங்கம் ஒருபோதும்  இவர்களின் கோரிக்கையை செவி சாய்க்கவில்லை.  எனவே, தற்போது பல்வேறு தமிழ் மற்றும் சமுதாய இயக்கங்கள் தம்மை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளது. 

பேராசிரியர் இளங்கோ தமிழ்ச் சங்கத்திடம் தான் ஒரு போதும் தேர்தலில் நிற்க போவதில்லை. அதில் பதவி வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் உறுப்பினராக ஆகவும் விரும்பவில்லை ஏற்கனவே தமக்குப் பல வேலைகள் உள்ள படியால் இதனுடன் என்னால் செயல்பட இயலாது. என்று குறிப்பிட்டுத் தம்மைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராக மட்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டேன். தமிழ்ப் பேராசிரியாரான என்னைக்கூட சேர்த்துக் கொள்ள மறுப்பதின் காரணம் உங்கள் எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

கோ.சுகுமாரன் பேசும் போது நான் மனித உரிமை தளங்களில் இயங்கி வருகிறேன். எனவே, எனக்கு இதில் இணைந்து எந்தப் பொறுப்பும் ஏற்க இயலாது. ஆனால், நான் இதனுடன் இணைந்துள்ளமைக்குக் காரணம் தமிழ்ச் சங்கம் நேர்மையற்ற முறையில் இவர்களை இணைத்துக் கொள்ள மறுக்கிறது எனவே தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஆதரவாக நானும் என்னை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட விரும்புகிறேன்.

இரா. அழகிரி நான் பல்வேறு இயக்கப் பணிகளில் இணைந்து செயலாற்றுகிறேன். தமிழ்ப் பணிகளைச் செய்ய வேறு பலர் இருக்கிறார்கள். நாங்கள் வேறு பணிகளைச் செய்பவர்கள். நான் போராட்ட குணம் நிறைந்தவன் பல்வேறு போராட்டங்களில் இணைத்துக் கொண்டு உரிமைகளை மீட்டுத் தரவேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளதால் நான் தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக நானும் என்னை இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இரா.சுகுமாரன் :  நான் பல்வேறு நண்பர் பணிசெய்யும் குழுவில் இருக்கிறேன். ஆனால் அந்தக் குழுவில் பெரிய அளவில் இப்போதெல்லாம் இணைந்து பணி செய்வதில்லை. 

வெளியில் உங்களுக்குப் பல்வேறு பணிகள் காத்துக் கிடக்கிறது அதில் நன்றாக இணைந்து செயல்படுங்கள் வெறும் கவிதைப் போட்டியும் கட்டுரைப் போட்டியும் நடத்தி தமிழை வளர்த்துவிட முடியாது. எனவே இது போன்ற அமைப்புகளில் உங்களை இணைத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். என எனது நண்பர் ரவிசங்கர் என்னிடம் சொன்ன தகவல், இன்றும் என் நினைவில் இருக்கிறது. எனவே, தமிழ்ச் சங்கத்தில் இணைந்து நானும் இணைந்து ஒன்று செய்துவிடப் போவதில்லை.

இருப்பினும் தமிழறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஆதரவாக நானும் இதில் இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்பு நண்பர்களே நீங்களும் அவர்களுக்கு ஆதரவாக இணைத்துக் கொள்ளுங்கள்..

திங்கள், 14 ஏப்ரல், 2014

ஆலோசனைக் கூட்டம் - உறுப்பினர் சேர்க்கை


புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை மறுத்ததன் விளைவாகவும்
தமிழறிஞர்களை சேர்க்க மறுத்ததன் மூலமாக ஊழல் தமிழ்ச் சங்கத்தை உத்தமம் நிறுவனம் நடத்தும் உலகத்தமிழ் இணைய மாநாட்டில் புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை சேர்க்க கூடாது எனக் கோரி நடத்திய ஆலோசனைக் கூட்டம்.

இடம்: பாரதிப் பூங்கா புதுச்சேரி


புதன், 26 மார்ச், 2014

இரா.சுகுமாரன் தமிழ்ச் சங்க விண்ணப்பம்


தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக நான் பலமுறை கேட்டிருந்தேன். ஆனால், தொடர்ந்து எனது கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் எழுத்துப் பூர்வமாக 26-03-2014 அன்று இந்த விண்ணப்பத்தை நான் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்திருந்தேன். ஆனால், வழக்கம் போல எந்த பதிலையும் எமக்கு அவர்கள் அனுப்பவில்லை. அதன் தொடர்ச்சியாகவே, நாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாகவே தமிழ்ச் சங்க உறுப்பினராக பலர் பின்னர் சேர்க்கப்பட்டனர்.  

விண்ணப்பம்

அனுப்புதல்:

இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி – 605 001. கைப்பேசி: 94431 05825
மின்னஞ்சல்:             rajasugumaran@gmail.com
இணையதளம்:        http://pudhuvaitamilbloggers.org/
   http://epithamizh.org/
வலைப்பூ:                  http://rajasugumaran.blogspot.com/
                                       http://puduvaibloggers.blogspot.in/


சேரல்:             
தலைவர் அவர்கள்
புதுவைத் தமிழ்ச்சங்கம்
வெங்கட்டா நகர்,
புதுச்சேரி-605011.

வணக்கம்,

    நான் புதுச்சேரியில் வசித்துவருகிறேன் புதுவையில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற அமைப்பை நடத்திவருகிறேன். தமிழ் ஆர்வலர். எனவே என்னை தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு



இரா.சுகுமாரன்

நாள்: 26-03-2014
இடம்: புதுச்சேரி

புதன், 29 ஜனவரி, 2014

புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தேர்வு


புதுவைத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
 Published on : 29th January 2014 05:44 AM
புதுவைத் தமிழ்ச் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

முன்னாள் எம்பி சி.பி.திருநாவுக்கரசு தேர்தல் ஆணையராக செயல்பட்டார். மொத்தம் 155 ஆயுள்கால உறுப்பினர்கள் வாக்களித்தனர். 11 ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவிக்கு ஏற்கெனவே தலைவர் பதவி வகித்து வந்த முனைவர் வி.முத்து தலைமையில் 11 பேர் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.

இதில் முத்து தலைமையிலான அணி 11 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய தலைவராக முனைவர் வி.முத்து, துணைத் தலைவர்களாக கோ.பாரதி, சீனு வேணுகோபால், செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக கோவிந்தராசு, துணைச் செயலராக கலியபெருமாள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக அப்துல் மஜித், கல்லாடன், கனகராசு, கலக்கல் காங்கேயன், விசாலாட்சி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர் திருநாவுக்கரசு அறிவித்தார்.

புதிய நிர்வாகிகளுக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இரா. சிவா உள்பட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.