இழைவியக்கம்

தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு !
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது ...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
மாமன், மச்சான், கொழுந்தியா, அக்காள் மகள், மனைவி, மகள், மாமியார் உறவினர்களைச் சேர்த்து நடத்துவது தமிழ்ச்சங்கத் தேர்தலா?
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து இன்னலுற்ற வேட்பாளர்கள் சுவரொட்டி...
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
புதுவைத் தமிழ்ச் சங்க ஊழல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,-சுவரொட்டி .......
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தை மாநாட்டு முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ....
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விதிகள் மீறி மரம் வெட்டி அழிப்பு !
புதுவைத் தமிழ்ச் சங்கம் தமிழறிஞர்கள் சங்கமா? குண்டர்கள் கூடாரமா? !
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர் ..
புதுவைத் தமிழ்ச் சஙகம் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

புதுவைத் தமி்ழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

இரா. சுகுமாரன் தன்னுடைய நிலையைப் புதுப்பித்துள்ளார்.
தமிழ் சங்கம் : பதிவு-2
புதுவைத் தமி்ழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அரைமணி நேரம் நடந்திருக்கும் என்கிறார்கள் வரவு செலவு விவரங்களை தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கோவிந்தராசு அவர்கள் படிக்கவில்லை. மாறாக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் படித்துள்ளார். எல்லா அமைப்புகளிலும் நிதி பொறுப்பாளர்கள் தான் அதன் அறிக்கையை படிப்பார்கள். காரணம் கேட்டபோது நண்பர் கோவிந்தராசு அரசு ஊழியராம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இவர்களுக்கு இது தெரிந்ததா என்று சிலர் நினைக்கலாம். தேர்வு செய்த அன்று முதல் அவர் எந்த வரவு செலவையும் பார்க்கவில்லை பெயரளவிலான பொருளாளராகவே 3 ஆண்டுகள் அவரது பதவி கடந்தது.
தமிழ்ச் சங்கம் சிலரிடம் சிக்கிக் கிடக்கிறது. ஒரு நேர்மையான அமைப்பாக இருப்பின் அது நிர்வாகத்தை சரியாக பிரித்துக் கொடுத்து நிர்வகித்திருக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறையேனும் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் மூன்று ஆண்டில் ஒருமுறை கூட கூட்டி பொதுக்குழுவில் அந்தந்த ஆண்டு செலவிற்கான ஒப்புதல் பெறப்படவில்லை.
வரவு செலவு விவரம் படிக்கப்பட்டது ஆனால் அவை சரியாக செலவு செய்யப்பட்டதா என பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் அறிய இயலாது. காரணம் செலவுக் கணக்கு விவரங்கள் ஏதும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. விரும்புகிறவர்களுக்கும் வாய்ப்பு இல்லை.
தமக்கு வேண்டியவர்களை வைத்து அவசரமாக கூட்டத்தை முடிப்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர்.
பேசுவதற்கு சிலருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில அறிவிப்புகள் அங்கேயே அறிவித்து எதிர்ப்புகள் காரணமாக உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அவசரமாக கூட்டத்தை முடித்து விட்டதாகவும் தெரிகிறது என்ன அவசரமோ தெரியவில்லை.
தமக்கு வேண்டிய பலரை உறுப்பினர்களாக சேர்த்து அவர்களிடம் உறுப்பினர் கட்டணம் பெறப்படவில்லை எனவும் சிலர் தெரிவித்தனர். அந்த கட்டணத்தை தலைவர் கட்டி விடுவதாக தெரிவித்து உறுப்பினராக சேர்க்கப் பட்டனர் இவர்கள் வாக்கிற்காக முறைகேடாக சேர்க்கப்பட்டவர்கள் ஆவர். ஆனால் அப்படி சேரக்கப் பட்டவர்களுக்கான உறுப்பினர் கட்டணத்தை தலைவர் வங்கியில் செலுத்தவில்லை.
வாக்கிற்காக அரசியல் கட்சி போல தமிழ்ச் சங்கம் செயல்படுகிறது.
இப்படி ஏராளமான புகார்கள் தமிழ்ச்சங்கத்தின் மீது சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக