மெனு புதியது
- முகப்பு
- எங்களைப் பற்றி
- புதுவைத் தமிழ்ச் சங்கம்
- தமிழ்ப் பாதுகாப்புக் குழு
- பத்திரிக்கைச் செய்திகள்
slide
தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுப்பு
...!
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு
...!
தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து சமூக சனநாய இயக்க சுவரொட்டி ...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்!
தமிழ்ச் சங்க ஊழல் செயல்பாட்டு அணியை தோற்கடிப்பீர்...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் கறையான் புற்றில் கருநாகம் புகுந்தது...
புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ...
திங்கள், 14 ஏப்ரல், 2014
புதன், 26 மார்ச், 2014
இரா.சுகுமாரன் தமிழ்ச் சங்க விண்ணப்பம்
தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக நான் பலமுறை கேட்டிருந்தேன். ஆனால், தொடர்ந்து எனது கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் எழுத்துப் பூர்வமாக 26-03-2014 அன்று இந்த விண்ணப்பத்தை நான் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்திருந்தேன். ஆனால், வழக்கம் போல எந்த பதிலையும் எமக்கு அவர்கள் அனுப்பவில்லை. அதன் தொடர்ச்சியாகவே, நாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாகவே தமிழ்ச் சங்க உறுப்பினராக பலர் பின்னர் சேர்க்கப்பட்டனர்.
விண்ணப்பம்
அனுப்புதல்:
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி – 605 001. கைப்பேசி: 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
இணையதளம்: http://pudhuvaitamilbloggers.org/
http://epithamizh.org/
வலைப்பூ: http://rajasugumaran.blogspot.com/
http://puduvaibloggers.blogspot.in/
சேரல்:
தலைவர் அவர்கள்
புதுவைத் தமிழ்ச்சங்கம்
வெங்கட்டா நகர்,
புதுச்சேரி-605011.
வணக்கம்,
நான் புதுச்சேரியில் வசித்துவருகிறேன் புதுவையில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற அமைப்பை நடத்திவருகிறேன். தமிழ் ஆர்வலர். எனவே என்னை தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
இரா.சுகுமாரன்
நாள்: 26-03-2014
இடம்: புதுச்சேரி
புதன், 29 ஜனவரி, 2014
புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தேர்வு
புதுவைத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
Published on : 29th January 2014 05:44 AM
புதுவைத் தமிழ்ச் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
இதில் முத்து தலைமையிலான அணி 11 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய தலைவராக முனைவர் வி.முத்து, துணைத் தலைவர்களாக கோ.பாரதி, சீனு வேணுகோபால், செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக கோவிந்தராசு, துணைச் செயலராக கலியபெருமாள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக அப்துல் மஜித், கல்லாடன், கனகராசு, கலக்கல் காங்கேயன், விசாலாட்சி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர் திருநாவுக்கரசு அறிவித்தார்.
புதிய நிர்வாகிகளுக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இரா. சிவா உள்பட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
புதன், 18 டிசம்பர், 2013
செவ்வாய், 15 அக்டோபர், 2013
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள்
புதுவைத் தமிழ்ச் சங்கம் 1/68 என்ற
பதிவெண்ணோடு பதிவாளர் சங்கங்களில் பதிவு
செய்யப்பட்டு புதுச்சேரி வெங்கட்ட
நகரில் தனது சொந்த கட்டிடத்தில் இயங்கி
வருகிறது.கடந்த 2010 ஆம்
ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் இச்சங்கத்தின்
ஆட்சி மன்றக் குழுவிற்கு தேர்தல்
நடந்தது. ஆட்சி மன்றக் குழுவின் பதவி
காலம் மூன்றாண்டுகளாகும்.அதாவது 17.10.2013 ஆம்
நாளோடு பொறுப்பு முடிந்து
தேர்தல் வைக்க வேண்டும் எனபது
சங்கத்தின் விதி.
- சங்க விதிப்படி ஆண்டுதோறும் மே/ஜூன் திங்களில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். இந்த மூன்றாண்டு பொறுப்பில் இருந்தவர்கள் ஒரே ஒரு முறை கூட பொதுக் குழுவைக் கூட்டவில்லை!
- ஆண்டுதோறும் சங்கத்தின் வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்து சங்க உறுப்பினர்களுக்கு சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது சங்க விதி . ஆனால் ஒரு முறை கூட சங்க கணக்குகள் உறுப்பினர்களுக்கு காட்டபடவில்லை !
- பொறுப்பு காலம் முடிந்த நிலையில் பதவியை விட்டு விலகாமல் தொடர்ந்து பதவி வகிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் சங்க சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக செய்து வருகிறார்கள்.
பல உறுப்பினர்கள் கடிதம்
அளித்தும் எதையும் செவிசாய்க்காமல் மதிப்பு
அளிக்காமல் தாங்கள் எப்படியாவது
பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே
குறிக்கோளுடன் முறையற்ற செயல்களில்
ஈடுபடுகிற்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொன்விழா மாநாட்டைப் புறக்கணிப்போம்
!doctype>


