புதன், 18 டிசம்பர், 2013

மூன்று ஆண்டுகளாக வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை

புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றும் ஒருமுறை கூட பொதுக்குழுவைக் கூட்டவில்லை என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள புகார் குறித்து 18-12-013 தினமலர் நாளிதழில் இடம்பெற்றுள்ள செய்தி

தமிழ்ச் சங்கத்த்தில் உறுப்பினர்கள் சேர்க்க தே.மு.தி.க கோரிக்கை

தமிழ்ச் சங்கத்த்தில் உறுப்பினர்கள் சேர்க்க தே.மு.தி.க கோரிக்கை

செவ்வாய், 15 அக்டோபர், 2013

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள்



புதுவைத் தமிழ்ச் சங்கம்  1/68 என்ற பதிவெண்ணோடு பதிவாளர் சங்கங்களில் பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி வெங்கட்ட நகரில் தனது சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் இச்சங்கத்தின் ஆட்சி மன்றக் குழுவிற்கு தேர்தல் நடந்தது. ஆட்சி மன்றக் குழுவின் பதவி காலம் மூன்றாண்டுகளாகும்.அதாவது 17.10.2013 ஆம் நாளோடு பொறுப்பு முடிந்து தேர்தல் வைக்க வேண்டும் எனபது சங்கத்தின் விதி.

  1. சங்க விதிப்படி ஆண்டுதோறும் மே/ஜூன் திங்களில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். இந்த மூன்றாண்டு பொறுப்பில் இருந்தவர்கள் ஒரே ஒரு முறை கூட பொதுக் குழுவைக் கூட்டவில்லை!
  2. ஆண்டுதோறும் சங்கத்தின் வரவு - செலவு கணக்குகளைத் தணிக்கை செய்து சங்க உறுப்பினர்களுக்கு சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது சங்க விதி . ஆனால் ஒரு முறை கூட சங்க கணக்குகள் உறுப்பினர்களுக்கு காட்டபடவில்லை !
  3. பொறுப்பு காலம் முடிந்த நிலையில் பதவியை விட்டு விலகாமல் தொடர்ந்து பதவி வகிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் சங்க சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக செய்து வருகிறார்கள்.


பல உறுப்பினர்கள் கடிதம் அளித்தும் எதையும் செவிசாய்க்காமல் மதிப்பு அளிக்காமல் தாங்கள் எப்படியாவது பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் முறையற்ற செயல்களில் ஈடுபடுகிற்றனர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம் மீண்டும் மீட்டெடுக்கப்படுமா ?